October 26, 2021, 4:57 am
More

  ARTICLE - SECTIONS

  திமுக., கூட்டணியின் டாப் -10 இந்து விரோத செயல்கள்!

  stalin veeramani image - 1

  நாங்கள் மோடியைத்தான் எதிர்க்கிறோம்; ஹிந்து மதத்தை அல்ல … என்று கூறியிருக்கிறார் ஸ்டாலின்!  மேலும், நாங்கள் ஹிந்து மத விரோதிகள் இல்லை, திமுக.,வில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் தான் என்று கூறியிருக்கிறார்.

  இப்போது ஸ்டாலினுக்கு பயம் வரத் தொடங்கியுள்ளதையே இது காட்டுகிறது. வெளிப்படையாக இஸ்லாமிய கிறிஸ்துவ மதச்சார்பு நிறுவனமாக திமுக., கம்பெனி நிர்வாகத்தை நடத்திக் கொண்டு வரும் அதன் மேனேஜிங் டைரக்டர் மு.க.ஸ்டாலின், எந்த நேரத்திலும் திமுக., ஒரு (ஹிந்து) மதசார்பற்ற அமைப்பு என்றே கூறி வந்திருக்கிறார்.

  காரணம், மதம் என்றால் ஹிந்து மதத்தை மட்டுமே குறிக்கும் என்பது இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் எழுதப் படாத விதியாகவும் மனப்போக்காகவும் இருக்கிறது.

  ஆனால் இப்போது மோடி அரசுக்கு எதிராக, கிறிஸ்துவ சர்ச்சுகளும், பாதிரியார்களும், மத பிரசாரகர்களும் வெளிப்படையாக கருத்துகளைத் தெரிவித்து, பிரார்த்தனைகளை நடத்திய போது, நடுநிலை ஹிந்துக்களும் விழித்துக் கொள்ளத் தொடங்கினர். இஸ்லாமியர்கள் தங்கள் மதம் சார்ந்து கூடி, பகிரங்கமாக பாஜக., எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு, இந்திய அரசு எதிர்ப்பு, ஹிந்து மத எதிர்ப்பு என்று பரிணாமம் பெற்று களத்தில் இறங்கிய போதுதான், ஹிந்துக்கள் தாங்களும் ஒன்று பட வேண்டிய அவசியத்தை உணர்ந்தனர்.

  stalin christian - 2

  முதலில் இத்தகைய மத ரீதியான பிளவுகளை சமூகத்தில் தோற்று வித்தவர்கள் கிறிஸ்துவ பாதிரிகளும், இஸ்லாமியர்களும்!

  இப்போது சமூக வலைத்தளங்களின் ஆதிக்கத்தால், ஒவ்வொருவர் கையிலும் இருக்கும் செல்போன்களின் ஆதிக்கத்தால், இந்தக் கருத்தோட்டம் சாதாரண எளிய ஹிந்துவுக்கும் வந்துவிடுகிறது. என்னதால், ஜாதி ரீதியாக பிரித்து வைத்தாலும், இன்னமும் கிராமப் புறங்களில் சாதி வெறியில் உழலும் ஒரு சிலரின் எண்ணங்களைத் தவிர, பொதுக் கண்ணோட்டத்தில் இணையும் ஹிந்து மக்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.

  இத்தகைய நிலையில்தான், வழக்கமான தங்களது நாத்திகக் கருத்து எனும் போர்வையில், இந்து மத பழிப்புச் செயல்களை திக., திமுக.,வினர் மேற்கொண்டு வந்த நிலையில், தேர்தலும் வந்துவிட்டதால், இப்போது வாக்குகள் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் திமுக., கூட்டணிக் கட்சிகளுக்கு வந்துவிட்டது.

  திமுக., திக., விடுதலை சிறுத்தைகள், மதிமுக., கம்யூனிஸ்ட்கள் என பலருக்கும் இப்போது அவர்களது பழைய ஹிந்துவிரோதப் பேச்சுகளே கழுத்தை நெரிக்கிறது.

  stalin saffron - 3

  இந்நிலையில், இவர்களின் டாப் 10 ஹிந்து விரோதப் பேச்சுகளை தொகுத்து சமூக வலைத்தளங்களில் சிலர் வெளியிட்டுள்ளனர். அவை…

  1. தாலி அறுப்பு போராட்டம் – வீரமணி
  2. சனாதன தர்மம் ஒழிப்பு மாநாடு – திருமாவளவன்
  3. பூணுல் அறுப்பு – திக
  4. திருப்பதி சாமிக்கு சக்தி இல்லை – கனிமொழி
  5. ஐயப்பன் கோவில் அனுமதி – திமுக நிலை
  6. ஆண்டாள் அவதூறாக பேசியது – வைரமுத்து
  7. கண்ணன் தவறாக பேசியது – வீரமணி
  8. ஹிந்து மதம் தவறாக பேசியது – தமிழன் பிரசன்னா
  9. சிவன் பெருமாள் கோவில் இடிக்க வேண்டும் – திருமாவளவன்
  10. ஹிந்து திருமணம் கேலி கிண்டல் – ஸ்டாலின்.

  இன்னும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பேசியது … இது எல்லாம் ஒரு குறிப்பிட்ட மக்களின் நம்பிக்கை எல்லாமே பேசிட்டு , அதற்கு வேறு விளக்கம் தருவது திமுக வழக்கம்.

  மறப்பது தமிழ் மக்களின் பழக்கம்; இனிமேல் மறக்க மாட்டார்கள்..! திமுகவை வேரோடு சாய்ப்போம்.

  – என்று வாட்ஸ் அப்களில் வைரலாக்கி வருகின்றார்கள்! இந்நிலையில், திமுக., வின் குரல் சற்று தேய்ந்து வந்தாலும், ஒரு நயன்தாரா என்ற கிறிஸ்துவப் பெண்ணுக்காக ராதாரவியைக் கழற்றி விட்டவர்கள், ஆண்டாள் என்ற இந்துக் கடவுளை வசைபாடிய வைரமுத்துவை பொட்டியில் வைத்துப் பாதுகாத்துத்தான் வருகிறது திமுக!

  1 COMMENT

  Comments are closed.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,586FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-