October 26, 2021, 5:36 am
More

  ARTICLE - SECTIONS

  கண்ணனைக் கொண்டாடும் கள்ளர் சமூகத்தையே கேவலப் படுத்திவிட்ட தினகரன்!

  06 Aug13 TTV Dinakaran - 1

  ஓசிச்சோறு வீரமணி மேல் திருச்சியில் நடந்த தாக்குதலுக்கு போண்டா வாயர் தினகரன் கண்டனம் தெரிவிக்கிறார்.

  கண்டனம் தெரிவிப்பது எனக்கு ஆச்சர்யம் இல்லை. ஓட்டு அரசியலுக்காக தன் குடும்ப மரியாதை, தன் சமூகத்தின் பெருமைகளை எல்லாம் ஒரு மனிதன் குழி தோண்டி புதைத்த கேவல வரலாறு இது.

  காவேரி டெல்டாவில் உள்ள மன்னார்குடி நகரத்தின் வரலாற்றை எழுதுபவர்கள் கள்ளர் சமூகத்தின் பாரம்பரியத்தையும், மன்னார்குடி ராஜ போபால சுவாமி கோவிலையும் ஒதுக்கி விட்டு எழுத முடியாது.

  மன்னை ராஜகோபால ஸ்வாமி திருக்கோவிலுக்கும் கள்ளர் சமூகத்திற்குமான உறவு என்பது உணர்வுப் பூர்வமானது.

  ராஜகோபால ஸ்வாமி கோவிலுக்கு பங்குனி மாத்த்தில் 18 நாட்கள் உற்சவம் நடக்கும்.

  இதில் அனைத்து பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கும் ஒரு நாள் ஒதுக்கப் பட்டு அவர்களின் மண்டகப்படி நடக்கும். ஆனால் அதில் கள்ளர் சமூகம் மட்டும் இல்லை.

  இதை இந்திராகாந்தியிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்த திரு ராஜ கோபால் தென் கொண்டார் மாற்றி அமைத்தார். தான் சார்ந்த கள்ளர் சமூகத்திற்கும் ஒரு நாள் மண்டகப்படி உரிமையை கேட்டு வாங்கினார்.

  வெண்ணை தாழி தினத்தன்று உள்ளூர் மக்களால் வெட்டுங்குதிரை என்று அழைக்கப்படும் உற்சவத்திற்கு கள்ளர் சமூக மண்டகப்படி உரிமை பெற்றார்.

  மன்னை ராஜகோபால சுவாமி உற்சவங்களிலேயே மிக விமர்சையாக கொண்டாடப்படுவது கள்ளர் சமூகத்தால் நடத்தப்படும் வெண்ணைத்தாழி, இரவில் நடக்கும் வெட்டுங்குதிரை, அதன் பின் விடிய விடிய நடக்கும் மண்டகப்படி தான்.

  மற்ற மண்டகப்படிகளுக்கு இல்லாத சிறப்பம்சம் கள்ளர் சமூக மண்டகப்படிக்கு உண்டு.

  அன்றைய தினம் அன்னதானங்கள், நீர் மோர் பந்தல்கள், இலவச கைவிசிறி என மன்னார்குடியை சுற்றியுள்ள கள்ளர் சமூக மக்கள் கொண்டு வந்து குவிப்பார்கள். மற்ற சமூகத்தினரும் அவரவர்களுக்கு முடிந்ததை செய்து பங்கெடுத்துக் கொள்வார்கள். டிராக்டர்களில் அன்னதானத்திற்கு கொண்டு வரும் தயிர் சாதம் பொட்டலங்கள் பல சமயம் வாங்குவதற்க்கு ஆள் இருக்காது. அந்த அளவிற்கு சிறப்பான முறையில் கள்ளர் சமூகம் ராஜகோபால ஸ்வாமியை கொண்டாடுகிறது.

  மேலே சொன்னது கள்ளர் சமூகத்தின் சேவை எனில் அதே சமூகத்தை சார்ந்த சசிகலா குடும்பத்தினர் அந்த கோவிலுக்கு வெளியில் தெரிந்து செய்தது குறைவு. நீண்ட காலத்திற்க்கு பிறகு சசிகலா குடும்பத்தினர் முன்னெடுத்து கும்பாபிசேகம் செய்ததோடு, கோவிலுக்கு ஏராளமான காணிக்கைகளையும் செலுத்தினர். அன்றைய முதல்வர் ஜெயலலிதாவும் குடமுழுக்கிற்கு வந்து தனது பங்கிற்கு கோவிலுக்கு நிறைய செய்தார்.

  இன்று அரசியலில் சசிகலா குடும்பம் ஒதுங்கியிருந்தாலும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கோயில் புணரமைப்பு பணிகளை சத்தமின்றி செய்து வருகிறார்.

  இதெல்லாம் சொல்ல காரணம் உள்ளது.

  ஓசிச்சோறு வீரமணி ஈவ் டீசிங் கேசில் வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ள வேண்டும் என சொன்ன கிருஷ்ணன் தான் செங்கமலத் தாயார் சமேத ராஜகோபாலனாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

  போண்டா வாயர் தினகரனுக்கு தன் குடும்ப பெருமையும் தெரியவில்லை, தன் சமூக பெருமையும் தெரிய வில்லை, தனது பாரம்பரியமும் தெரியவில்லை.

  அரசியல் பதவிக்காக சிறு பான்மை ஓட்டுக்களை பெற அரபு அடிமை தீவிரவாதிகளுடன் கூட்டணி வைத்தாயிற்று.

  தன்னை மதசார்பற்றவனாக காட்டிக்கொள்ள தன் சமுதாயம், குடும்பம் கொண்டாடும் கிருஷ்ணனை கேவலப்படுத்தும் ஓசிச்சோறு வீரமணிக்கு ஆதரவாக நாக்கை சுழற்றுகிறார்.

  தான் யார், தனது பாரம்பரியம், தன் வரலாறு என அனைத்தையும் மறந்த இந்த போண்டா வாயர் தான் நம் தமிழகத்தை காப்பாற்ற போகிறேன் என்கிறார்.

  நாயும் பிழைக்குமா இந்த பிழைப்பு…?

  • பொம்மையா செல்வராஜன் — Bommaiyah Selvarajan.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,586FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-