October 21, 2021, 8:27 am
More

  ARTICLE - SECTIONS

  திமுகவின் தோல்வியே இந்துக்களின் வெற்றி!

  stalin srirangam - 1

  தேர்தலுக்காக ஓட்டுக்காக இன்று – நெல்லுக்கு வேலி கட்டிய நெல்லையப்பர் அருளாட்சி புரியும் நெல்லை மண்ணில் வந்து கதறி கதறி *திமுக இந்துக்களுக்கு எதிரானதல்ல…  திமுகவில் இந்துக்கள் உள்ளார்களே நீலிக்கண்ணீர் வடிக்கும் ஸ்டாலின் அவர்களே . . . . .

  கடந்த மாதம் இஸ்லாமிய திருமண விழாவிற்கு சென்று இந்து மத திருமண சடங்குகளை கேவலமாக பேசியது நீங்கள் தானே

  ஸ்ரீரங்கத்தில் பட்டர்கள் வைத்த குங்குமத்தை அழித்தது யார் நீங்கள் தானே

  திருப்பதி பெருமாளை கேலி பேசியது யார் உங்கள் தங்கை கனிமொழி தானே

  விபூதி பூசுவதை பகுத்தறிவுக்கு எதிரானதுன்னு சொன்னது யார் உங்கள் தங்கை கனிமொழி தானே

  மாரியம்மனுக்கு தீ சட்டி ஏந்துவதை திக மாநாட்டில் ஏளனம் செய்தது யார் திமுக கனிமொழி தானே

  இந்து என்றால் திருடன் என சொன்னது யார்? உங்க அப்பா கருணாநிதி தானே

  ராமர் எந்த கல்லூரி யில் இஞ்சினியரிங் படித்தார்னு நைய்யாண்டி பேசியது யார் திமுக தலைவர் கருணாநிதி தானே

  மதுரை மீனாட்சி உனக்கெதுக்கு வைர மூக்குத்தி கழட்டடி கள்ளி என வசனம் பேசியது எந்த கட்சி திமுக தானே

  தேரோட்டம் உனக்கெதுக்கு தியாகராசா என கேட்டது எந்த கட்சி திமுக தானே

  சூடிகொடுத்த சுடர் கொடி ஆண்டாள் நாச்சியாரை வேசி என சொன்ன வைரமுத்து எந்த கட்சி திமுக தானே

  ஸ்ரீரங்க நாதனையும் தில்லை நடராஜனையும் பீரங்கி வாயில் வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ அந்நாளே தமிழகத்தின் பொன்நாள் என ஏகடியம் பேசியது யார் திமுக தானே

  ஆயர் தம் கொழுந்து ஸ்ரீ கிருஷ்ண பகவானை காலிப்பையன் ஒழுக்க கேடன் என சொன்ன வீரமணி ஆதரவு பெற்ற கட்சி எது திமுக தானே

  வயதுக்கு வந்த பெண்கள் சபரிமலை செல்வதில் தவறு என்ன என கேட்டு சபரிமலை புனிதத்தை கெடுக்க கம்யூனிஸ்டுகளோடு துணை போன கனிமொழி யார் திமுக தானே

  ரம்ஜான் கிறிஸ்துமஸ்க்கு வாழ்த்து சொல்லும் திமுக என்றாவது தீபாவளி வாழ்த்து சொன்னது உண்டா ?

  நோன்பு கஞ்சி குடித்து கிறிஸ்துமஸ் கேக் உண்ணும் திமுக தலைவர்கள் என்றாவது விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை சாப்பிட்டு போட்டோ எடுத்தது உண்டா ?

  இந்து பண்டிகைகளுக்கு மட்டும் விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி என குறிப்பிடும் கலைஞர் தொலைக்காட்சி உரிமையாளர் யார் திமுக தானே

  நெல்லையில் கடந்த வருடம் தாமிரபரணி புஷ்கர விழா நடத்த கூடாது என மனு கொடுத்தது யார் திமுக மாவட்ட அவைத்தலைவர் சுப.சீதாராமன் தானே

  இன்னும் ஏராளம் ஏராளம்

  இப்போது இந்துக்கள் விழிப்பு உணர்வு அடைந்ததும்

  *ஓட்டுக்காக நீங்கள் நடத்தும் நாடகத்தை இந்துக்கள் நம்ப தயாராக இல்லை*

  இனியும் இந்துக்கள் ஏமாற மாட்டோம்

  *திமுகவின் தோல்வியே இந்துக்களின் வெற்றி*

  கா.குற்றாலநாதன் , நெல்லை

  1 COMMENT

  1. இந்துக்களை பல விதத்தில் கேவலப் படுத்தும் திமுக தோற்கவேண்டும். இவர்கள் நல்லவர்கள்; மதச்சார்பற்றவர்கள். ஆனால் இந்துக்களை ஆதரித்து பாதுகாத்து அவர்கள் உரிமைக்கு குரல் கொடுக்கும் பிஜேபி மோசம். பிஜேபி – அதிமுக கூட்டணி வெற்றி பெறுகிறதோ இல்லையோ, இந்து மத எதிர்ப்பாளர்கள் ஆட்சிக்கு வரவே கூடாது. எல்லோரையும் எல்லா மதங்களையும் மதிக்காதவர்கள் வெற்றிபெறக் கூடாது. கஞ்சியும் கேக்கும் சாப்பிடட்டும். அது அவர்கள் விருப்பம். ஆனால் கொழுக்கட்டையையும், பொங்கலையும் ஏன் அவமானப்படுத்த வேண்டும்? பிடிக்கவில்லை என்றால் விட்டு விடவேண்டியது தானே? அடுத்த மத விழாக்களில் பங்கெடுத்தால் அது மத நல்லிணக்கம். ஆனால் அங்கு போய் இந்து மதத்தை பற்றி இழிவாக பேசுவது.நல்ல கொள்கை. காரியம் ஆக வேண்டுமானால் காலைப் பிடிக்க வேண்டியது. திருமா சிதம்பரம் கோவிலில் சென்று திருநீறு பூசிக் கொண்டார். இப்போது இவர் நெல்லையில் திமுக இந்து விரோதி அல்ல என்கிறார். எல்லாம் ஒன்று தான். வெற்றி பெற்று விட்டால் இந்துக்களை இல்லாமல் செய்து விடுவார்கள். nambakkodathu.

  Comments are closed.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,570FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-