September 28, 2021, 12:48 pm
More

  ARTICLE - SECTIONS

  கோமதி… 20 வருடம் சிரமப்பட்டு வீராங்கணை ஆனார்; ஒரே நாளில் அரசியல்வாதி ஆனார்!

  கிழிந்த ஷூ, வேலை இல்லை, சொந்தமாக செலவு செய்து தான் கத்தார் சென்றேன் என்று அடுக்கடுக்கான பொய்களைக் கூறி அதிர்ச்சியில் ஆழ்த்தினார் கோமதி!

  gomathi gold medalist - 1

  இந்தியாவில் எத்தனையோ வீரர்கள், வீராங்கணைகள் சர்வதேசப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள்; ஆனால் அவர்கள் எவரும் உருவாக்கியிராத சர்ச்சைகளை தமிழகத்தின் லேட்டஸ்ட் தங்க மங்கை கோமதி ஏற்படுத்தியிருக்கிறார்.

  கோமதி என்ற கிராமத்துப் பின்னணியைக் கொண்ட ஒரு பெண் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வேளையில் எவ்வளவு அரசியல்?

  கோமதி உருவாக்கி விட்ட இந்த சர்ச்சைகளின் பின்னே தமிழகத்தின் பிரிவினைவாத கிறிஸ்துவம் சதி கொண்டிருப்பது நன்றாகத் தெரியவந்துள்ளது. அதன் பாலிஷான மேம்போக்குப் பெயர் தமிழர் அமைப்பு! அவற்றின் ஊடக உருவாக்கத்தில் இப்போது பொய் சொல்லியிருப்பதாக அவமானப் பட்டு நிற்பவர் கோமதி… கோமதி மட்டுமே!

  கிழிந்த ஷூ, வேலை இல்லை, சொந்தமாக செலவு செய்து தான் கத்தார் சென்றேன் என்று அடுக்கடுக்கான பொய்களைக் கூறி அதிர்ச்சியில் ஆழ்த்தினார் கோமதி!

  செய்தி இதுதான்…

  ஆசிய தடகளப்போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா சார்பில் கோமதி மாரிமுத்து முதலிடம் பிடித்து தங்கம் வென்று சாதனை படைத்தார். தமிழகத்தைச் சேர்ந்த இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

  இந்நிலையில் ஆசிய தடகளத்தில் கோமதி கிழிந்து போன காலணி அணிந்து ஓடி வெற்ற பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவத் தொடங்கின. மேலும் அவர் அணிந்திருந்த காலணி வேறு வேறு வண்ணங்களில் வேறு வேறு மாடலில் இருந்ததாகவும் தகவல்கள் பரவின.

  இந்நிலையில் சொந்த மாவட்டமான திருச்சிக்கு வந்த அவருக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து ஆனந்த கண்ணீரில் திணறடித்தனர். அப்போது உற்சாகத்தில் இருந்த அவரிடம் செய்தியாளர்கள் காலணி குறித்து கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த அவர்,

  போட்டியில் நான் ஓடும் போது காலணி கிழிந்திருந்தது உண்மைதான். அதிர்ஷ்டமான காலணி என்பதால் பழைய காலணியை பயன்படுத்தினேன், என்னிடம் காலணி இல்லை என்பதெல்லாம் உண்மையில்லை என்றார்.

  ஆனால், விமான நிலையத்துக்கே சென்று வரவேற்ற பாதிரி ஜகத் கஸ்பர் முன்னிலையில் அவர் சொன்ன தகவல்கள்தான் இத்தனை மீம்ஸ்களுக்கும் கேலிக்கும் ஆளாக்கி விட்டது என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும்.

  கோமதி வெற்றிபெற்றது நாட்டிற்கு பெருமை தேடிதந்த விஷயம். ஆனால் அதை வைத்து அரசியாலாக்கப்படுவது அவருக்கு அடுத்து வரும் திறமையான வீரர் வீராங்கணைகளை எந்த அளவுக்கு பாதிப்பு அடையச் செய்யும் என்று சிறிதளவு அறிவு இருந்தால் இதை வைத்து அவர் அரசியல் செய்திருக்கமாட்டார்.

  கிழிந்த ஷூதான் என்னிடம் இருந்தது; ஷூ வாங்கக் கூட காசில்லாமல் இருந்தேன்… என்று கூறிய கோமதி இப்பொழுது அதிர்ஷ்டமான ஷு என்பதால் அதைப் பயன்படுத்தினேன் என்று கூறியுள்ளார்.

  இவரை வைத்து அரசியல் செய்ய முனைந்திருக்கிறது திராவிட பொறுக்கிகள் கூட்டம்!

  சொந்த காசில்தான் கத்தார் சென்று வந்தேன் என்று கூறியுள்ளார்.(ரூ.50,000 பயண செலவு) பயண செலவுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் கோரினாரா அல்லது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்ற விவரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளது. அல்லது தமிழ்நாடு மூலமாக செல்லாமல் கர்நாடகா மாநிலம் மூலம் சென்றாரா என்ற விவரங்களும் கோரப்பட்டுள்ளது.

  வெவ்வேறு பேட்டிகளில் அவரிடம் இருந்து வெவ்வேறு முரண்பாடான பதில்கள்… உண்மையில் அரசிடமிருந்து உதவிகள் நிராகரிக்கப்பட்டிருந்தால் வெளியிடலாம். ஆனால் இவர் செய்வது முற்றிலும் அரசியல் என்றே தோன்றுகிறது.

  மேலும் தேர்வில் இரண்டு விநாடிகள் நேரம் தவறவிட்டாலும் கத்தார் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  பொதுவாக, விளையாட்டுத் துறையில் உதவிகள் பெரும்பாலும் இளம் வயதினருக்குதான் முன்னுரிமை கொடுத்து வழங்கப்பட்டும். 30 வயதானதால் உதவிகள் மறுக்கப்பட்டிருக்க சாத்தியக்கூறுகளும் உள்ளன.ஆனால், கோமதிக்கு அவ்வாறான தடங்கல்கள் ஏதும் இல்லை.

  காரணம் தற்போதைய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர், ஒரு விளையாட்டு வீரர். அவரால் ஊக்கம் பெற்ற எத்தனையோ பேர் கடந்த காலத்துக்கும் தற்கால விளையாட்டுத் துறைக்கும் உள்ள வேறுபாட்டை மனம் விட்டுச் சொல்கிறார்கள்! எளியோரும் தகுந்த திறமைசாலிகளும் கண்டெடுக்கப் பட்டு, தேவையான உதவிகள் செய்யப் பட்டு, கடந்த காலங்களை விட அதிகளவில் போட்டிகளில் கலந்து கொண்டு, பதக்கப் பட்டியலில் இந்தியாவை பல படிகள் முன்னேற்றிக் காட்டியிருக்கிறார்கள்!

  ஏழ்மையில் இருந்து வென்று சாதிப்பதுதான் வெற்றியின் மகிழ்ச்சியை வெகு காலம் நீட்டித்திருக்கும்! அந்த மகிழ்ச்சி கோமதிக்கும் வெகு காலம் நீட்டித்திருக்கட்டும்!

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,482FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-