Home இந்தியா நேரு, இந்திராவுக்குப் பிறகு… தனிப்பெரும்பான்மை பெற்று தொடரும் பிரதமர் மோடி!

நேரு, இந்திராவுக்குப் பிறகு… தனிப்பெரும்பான்மை பெற்று தொடரும் பிரதமர் மோடி!

நேரு, இந்திரா காந்தி ஆகியோருக்குப் பிறகு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிக்கு வரும் 3-ஆவது பிரதமர் எனும் சிறப்பையும் சாதனையையும் படைத்துள்ளார் பிரதமர் மோடி.

2019 தேர்தலில் பதிவு செய்யப் பட்ட வாக்குகள் எண்ணப் பட்டு இன்று காலை முதல் முன்னிலை நிலவரம் அறிவிக்கப் பட்டுவருகிறது. அறிவிக்கப் பட்ட முடிவுகளில், பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கான வகையில் பாஜக., மட்டுமே தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது.

2014 மக்களவைத் தேர்தலில் பெற்ற இடங்களை விட அதிகமான இடங்களை இந்தத் தேர்தலில் பாஜக., பெற்றுள்ளது. 1951-52 இல் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் நேரு 4 ல் 3 பங்கு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

பின்னர், 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் முழுப் பெரும்பான்மை பெற்று நேரு மீண்டும் பிரதமர் ஆனார். அதன் பின்னர், 1967 ல்
நடைபெற்ற தேர்தலில் நேருவின் மகள் இந்திரா காந்தி, 520ல் 283 இடங்கள் பெற்று வெற்றி பெற்றார். பொதுத் தேர்தல்களில் இந்திரா காந்தி பெற்ற முதல் வெற்றி அதுதான். பின்னர் தொடர்ந்து, 1971-ல் நடந்த தேர்தலிலும் இந்திரா காந்தி தனிப் பெரும்பான்மை பெற்று பிரதமர் ஆனார்.

ஆனால் அதன் பின்னர் தொடர்ந்து ஒரு பிரதமர் இரு முறை தனிப் பெரும் பான்மையுடன் பிரதமர் நாற்காலியில் அமர இயலாமல் போனது. கூட்டணி வைத்துப் போட்டியிட்டு, காங்கிரஸ் பின்னர் 2010-2014 ம் ஆண்டுகளில் சிக்கல்களைச் சந்தித்தது.

ஆனால், சுமார் 43 ஆண்டுகளுக்குப் பின்னர் தனிப்பெரும்பான்மை பெற்று பாஜக.,வின் சார்பில் 2014ல் பிரதமர் ஆனார் நரேந்திர மோடி. அப்போது 282 இடங்கள் பெற்றது பாஜக.! அதன் பின்னர் தொடர்ந்து, பாஜக., மட்டுமே தனிப் பெரும்பான்மை இடங்களைப் பெற்று மீண்டும் மோடி ஆட்சியில் அமரவுள்ளார். இது இந்திய தேர்தல் வரலாற்றில் ஒரு சாதனையே!

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version