22/10/2019 1:39 AM
அரசியல் கடும் குடிநீர் தட்டுப்பாடு... காரணமே திமுக., தானே! எப்படி தெரியுமா?!

கடும் குடிநீர் தட்டுப்பாடு… காரணமே திமுக., தானே! எப்படி தெரியுமா?!

ஸ்டாலின் பொதுக்கூட்டத்திற்காக தனியார் நிலத்தை சமன் செய்த போது அறநிலையத்துறையின் இரண்டு குளங்களையும் தி.மு.க.,வினர் அழித்தனர்.

-

- Advertisment -
- Advertisement -

குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் நிலவும் குடிநீர் பஞ்சத்தைப் போக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியும் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் திருந்திய பாடில்லை என குறிப்பிட்டுள்ளார்.

சென்னைப் பெருநகர் குடிநீர் வாரியத்திலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலும் “டெண்டர்களில்” கமிஷன் வசூல் செய்வதில் காட்டும் அக்கறையில் ஒரு துளியை , உள்ளாட்சித் துறை அமைச்சர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில் காட்டியிருந்தால் குடிநீர் தட்டுபாட்டை கட்டுப்படுத்தி இருக்கலாம் என தெரிவித்துள்ள ஸ்டாலின். குடியிருப்பு வாசிகள் “ஆன்லைனில் புக்கிங்” செய்யும் டேங்கர் லாரி குடிநீருக்காக 15 முதல் 18 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏன் வந்துள்ளது என கேள்வி எழுப்பி உள்ளார்.

தெருத் தெருவாக மக்கள் குடங்களை தூக்கிக் கொண்டு சைக்கிளிலும், ரிக்ஷாக்களிலும் தொலை தூரம் சென்று ஒரு குடம் தண்ணீர் சேகரிக்கத் தள்ளப்பட்டுள்ளது ஏன்? என்றும் மெட்ரோ வாட்டர் குழாய்களில் வரும் குடிநீரும் பல இடங்களில் துர் நாற்றம் வீசுவது ஏன்? தண்ணீர் இல்லாமல் பல உணவகங்கள் மூடப்படுவது ஏன்? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக வழக்கம் போல் அரசியல் செய்யும் மு.க ஸ்டாலின் எழுப்பியுள்ள கேள்விகள் ஒரு புறம் இருக்க, தி.மு.க இதற்காக என்ன செய்தது என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது. காரணம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்துக்குக் காரணமே திமுக.,தான் என்று கை காட்டுகிறார்கள்.

மிக அண்மைக்காலத்தில், அதாவது 2015 ஆம் ஆண்டு நமக்கு நாமே பயணத்தின் போது, பொதுக்கூட்டத்திற்காக தி.மு.க குளத்தை அழித்த வரலாறும் உண்டு.

2015 ஆம் ஆண்டு நவம்பர் 21ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில், நமக்கு நாமே பயணத்தை மேற்கொண்ட ஸ்டாலின் சிங்கபெருமாள் கோவிலை அடுத்த ஆப்பூர் கிராமத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் அப்போதைய திமுக., தலைவர் கருணாநிதியும் பங்கேற்றார்! ஸ்டாலின் பங்கேற்ற பொதுக்கூட்டத்தை தனியாருக்கு சொந்தமான 350 ஏக்கர் நிலத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த நிலத்திற்கு அருகே இந்து சமய அறநிலையத் துறையின் இரண்டு குளங்களும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் ஒரு ஏக்கர் நிலமும் இருந்தது.

ஸ்டாலின் பொதுக்கூட்டத்திற்காக தனியார் நிலத்தை சமன் செய்த போது அறநிலையத்துறையின் இரண்டு குளங்களையும் தி.மு.க.,வினர் அழித்தனர். இது குறித்து செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியரிடம் ஆப்பூர் கிராமவாசிகள் புகார் அளித்தனர். இதை அடுத்து வருவாய் கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் தலைமையில் வட்டாட்சியர் தனலட்சுமி மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் ஆப்பூர் கிராமத்திற்கு சென்று அழிக்கப்பட்ட குளங்களை ஆய்வு செய்தனர். பின்னர் அதன் மீது எல்லைக் கற்களைப் பதித்தனர். மேலும் அங்குள்ள அரசு நிலத்தை அளவிட்டு அறிவிப்புப் பலகை வைத்தனர்.

பொதுக் கூட்டத்திற்காக குளங்களை அழிப்பதும், பொதுக்கூட்டத்தின் பெயரில் அரசி நிலத்தை வளைத்து மேடாக்கி மண் மூடி சமன்படுத்தி, பின்னர் பொதுக்கூட்டம் முடிந்ததும், அதையே பட்டா போட்டு, பிளாட்களாக மாற்றி திருட்டுத்தனமாக விற்று பணம் பார்த்தும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப் படுகின்றன. இப்படிப்பட்ட பின்னணி கொண்ட திமுக தான் இன்று குடிநீர் தட்டுப்பாடு குறித்து பாடம் எடுக்கிறது என்று கேலி செய்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

இந்த நிலையில் திமுகவினரால் கபளீகரம் செய்யப் பட்டுள்ள  நீர்நிலைகள் குறித்த பட்டியலை பலர் தேடிக் கண்டுபிடித்து அவற்றை பதிவிட்டு வருகின்றனர்.  அவற்றில், தஞ்சை க.இராசசேகரன் என்பவர் பெயரில் வாட்ஸ் அப் வாயிலாக வலம் வரும் ஒரு நீர்நிலை ஆக்கிரமிப்புப் பட்டியல் இது…

திருட்டு தி.மு.க கும்பலின் ஆட்சியில் சென்னையில் காணாமல் போன ஏரிகள், குளங்கள் குட்டைகள் புதிய பட்டியலுடன்:-

1.நுங்கம்பாக்கம் ஏரி, (தற்போது வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கத்தின் சில தனியார் கம்பெனிகள்)
2.தேனாம்பேட்டை ஏரி,
3.வியாசர்பாடி ஏரி,
4.முகப்பேர் ஏரி,
5.திருவேற்காடு ஏரி,
6.ஓட்டேரி,
7.மேடவாக்கம் ஏரி,
8.பள்ளிக்கரணை ஏரி,
9 உள்ளகரம் ஏரி,
10போரூர் ஏரி,
11ஆவடி ஏரி,
12.கொளத்தூர் ஏரி,
13.இரட்டை ஏரி,
14.வேளச்சேரி ஏரி,(100 அடி சாலை, ரானே கம்பெனி, ஃபீனிக்ஸ் மால்) 15,பெரும்பாக்கம் ஏரி,
16.பெருங்களத்தூர் ஏரி(இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்),
17.கல்லு குட்டை பெருங்குடி
18,வில்லிவாக்கம் ஏரி,
19.பாடிய நல்லூர் ஏரி,
20.வேம்பாக்கம் ஏரி,
21.பிச்சாட்டூர் ஏரி,
22.திருநின்றவூர் ஏரி,
23.பாக்கம் ஏரி,
24.விச்சூர் ஏரி,
25.முடிச்சூர் ஏரி,
26,சேத்துப்பட்டு ஏரி (ஸ்பர் டாங்க் ரோடு
27.செம்பாக்கம் ஏரி,
28.சிட்லபாக்கம் ஏரி ,
29,போரூர் ஏரி,
30.மாம்பலம் ஏரி,
31.கோடம்பாக்கம் டேங்க் ஏரி,
32. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்,
33. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்…..
34.ஆலப்பாக்கம் ஏரி,
35. வேப்பேரி,
36. விருகம்பாக்கம் ஏரி(தற்போது தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பு),
37. கோயம்பேடு சுழல் ஏரி,(கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம்)
38. அல்லிக் குளம் ஏரி( நேரு ஸ்டேடியம்)
என பட்டியல் இன்னும் நீளூம் என அதிர்ச்சி தகவல்கள் சொல்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

1906-ம் ஆண்டு, கணக்கீட்டின்படி ஒருங்கிணைந்த சென்னையில் 474 நீர்ப்பிடிப்பு நிலைகள் (ஏரி, குளம், குட்டை, தாங்கல் உட்பட) இருந்தன. 2013-ல் எடுத்த கணக்கீட்டின்படி 43 நீர்ப்பிடிப்பு நிலைகள்தான் உள்ளன., இதில் சென்னை மாநகரத்தில் எதுவுமே இல்லை) 96% சதவிகிதம் நீர்பிடிப்பு நிலைகள்! இவை அனைத்தும் திருடப்பட்டது கருணாநிதி ஆட்சி காலத்தில்தான்.  தண்ணீர் எங்கே என்ற கேள்விக்கு விடை எங்கே.. திருட்டு தி.மு.க கும்பலே..பதில் சொல்..!

Sponsors

- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.
-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: