spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாமதன்லால் சைனி மறைவு: பாஜக., நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஒத்திவைப்பு!!

மதன்லால் சைனி மறைவு: பாஜக., நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஒத்திவைப்பு!!

- Advertisement -

ராஜஸ்தான் மாநில பாஜக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மதன் லால் சைனி(75) நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு பாஜக., தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

மதன்லால் சைனி மறைவை அடுத்து, இன்று தில்லியில் நடைபெறவிருந்த பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாஜக மாநிலங்களவை உறுப்பினரான மதன் லால் சைனி நுரையீரல் தொற்று காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தனது 75 ஆவது வயதில் திங்கள்கிழமை நேற்று மாலை அவர் காலமானார்.

அவரது மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பதற்காக பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் மதன் லால் சைனி மறைவை அடுத்து, பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe