05/07/2020 2:45 PM
29 C
Chennai

அய்யா வைகுண்டர் பைபிள் படித்தாரா?! பாடநூலில் உள்ள தவறான தகவலை நீக்கக் கோரி அமைச்சருக்கு ஏபிவிபி., கடிதம்!

அண்மைய சர்ச்சைக்குள்ளான பள்ளிப் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அய்யா வைகுண்டர் குறித்த தகவலை நீக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

சற்றுமுன்...

மதுரை நகர புதிய காவல் ஆணையர் பதவி ஏற்பு!

மதுரை நகரின் புதிய காவல் ஆணையர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தெருவில் சுற்றினால் அபராதம் – மதுரை மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை!

காரணமின்றி முகக் கவசம் இல்லாமல் தெருக்களில் சுற்றித் திரிந்தால் கடும் அபராதம் விதிக்கப்படும்

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்- அமைப்புக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்: இந்து தமிழர் கட்சி!

"பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு" தமிழகம் முழுக்க செயல்படுவதற்கு "நிரந்தரமாக தடை "செய்து தமிழக காவல்துறை நிர்வாகம் தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

தமிழகம் முழுதும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினரை பயன்படுத்த 2 மாதங்களுக்கு தடை!

தமிழகம் முழுவதும் அடுத்த 2 மாதங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீசை காவல் நிலைய பணிக்கோ, ரோந்து பணிக்கோ பயன்படுத்த தடை விதிக்கப் பட்டிருக்கிறது.

பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை கலைக்க வேண்டும்: பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை!

காவல் நிலைய சித்திரவதை மற்றும் பொதுமக்கள் மீது அடாவடி அத்துமீறலில் ஈடுபடும் சட்ட அங்கீகாரம் பெறாத FOP அமைப்பை மாநில அரசு தடை செய்ய வேண்டும்
அய்யா வைகுண்டர் பைபிள் படித்தாரா?! பாடநூலில் உள்ள தவறான தகவலை நீக்கக் கோரி அமைச்சருக்கு ஏபிவிபி., கடிதம்!
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தினசரி இணையத்தின் நிறுவுனர், ஆசிரியர் | *‘மஞ்சரி டைஜஸ்ட்’ இதழாசிரியராகப் பணிபுரிந்தவர். வரலாறு, இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைகள், தேசிய ஒருமைப்பாட்டு கட்டுரைகள், கதைகளை எழுதியுள்ளார். | * சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். | * வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | * விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். ஆறு நூல்களை எழுதியுள்ளார். | * சக்தி விகடன் பொறுப்பாசிரியர், தினமணி இணையதள செய்தி ஆசிரியர், கல்கி - தீபம் இதழின் பொறுப்பாசிரியர், Asianet News தமிழ் பிரிவு பொறுப்பாளர் என பணியாற்றியுள்ளார். | * இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

abvp nellai post அய்யா வைகுண்டர் பைபிள் படித்தாரா?! பாடநூலில் உள்ள தவறான தகவலை நீக்கக் கோரி அமைச்சருக்கு ஏபிவிபி., கடிதம்! பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், அண்மைய சர்ச்சைக்குள்ளான பள்ளிப் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அய்யா வைகுண்டர் குறித்த தகவலை நீக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

நெல்லை மாவட்ட அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் வாழும் பெரும்பான்மை மக்கள் அய்யா வைகுண்டரை கடவுளின் அவதாரமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர்!மேலும் சமூக நீதி, சமதர்ம ஒழுக்க நெறிகளை போதிக்கும் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு ஏராளமான மாணவர்களும் இளைஞர்களும் பொதுமக்களும் அதீத நம்பிக்கையும் பற்றும் கொண்டு அந்த வழியை பின்பற்றி வருகின்றனர்!

தமிழக அரசு சார்பில் வெளியான பத்து பதினொன்றாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் அய்யா வைகுண்டர் குறித்த வரலாற்றுப் பக்கங்கள் இடம்பெற்றுள்ளது! அதில் அய்யா வைகுண்டரைப் பற்றிய கட்டுரையில், அய்யா அவர்கள் சமூக போராளி போலவும் கிறித்துவ மத விவிலியம் (bible) படித்தார் என்றும், உருவமற்ற கடவுளுக்கு உருவம் கொடுப்பது போன்றும் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன!

இந்தக் கருத்துகள் முற்றிலும் தவறானவை. உண்மைக்குப் புறம்பானவை. இந்தக் கருத்து அய்யா வைகுண்டரை தெய்வமாக வணங்கும் மக்களுக்கு பெரும் மன அழுத்தத்தையும் மன வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது!

மேலும் சமீப காலமாக வரலாற்று பாட புத்தகங்களில் அன்னிய மத கருத்துக்கள் உயர்ந்தது என்று பிரச்சாரம் செய்யும் விதமாக பல்வேறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது!

எனவே தமிழக அரசு மக்களின் மத நம்பிக்கைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து சிறப்பு கவனம் செலுத்தி வரலாற்றுப் பாட நூல்களில் இடம் பெற்றுள்ள அய்யா வைகுண்டர் குறித்த தவறான கருத்துகளையும் உருவப்படத்தையும் உடனே நீக்க வேண்டும்!

ஐயா வைகுண்டரின் உண்மையான வரலாற்றை பதிவு செய்ய வேண்டும். மேலும் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றது போல பல்வேறு ஒழுக்க நெறிகளை போதிக்கும் அற்புதமான கருத்துக்கள் அகிலத்திரட்டு அம்மானையில் உள்ளது! இந்தக் கருத்துக்களை பாடநூலில் சேர்க்க வேண்டும்!

இவ்வாறு தங்களது  கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஏபிவிபி தேசிய மாணவர் அமைப்பு சார்பில் திருநெல்வேலி மாநகர செயலாளர் ஹரி விஷ்ணு கையெழுத்திட்டு இந்தக் கடிதங்கள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு அனுப்பப்பட்டுள்ளன!abvp nellai post2 அய்யா வைகுண்டர் பைபிள் படித்தாரா?! பாடநூலில் உள்ள தவறான தகவலை நீக்கக் கோரி அமைச்சருக்கு ஏபிவிபி., கடிதம்!

நெல்லை தபால் நிலையத்துக்கு கோஷமிட்டுச் சென்று, இந்தக் கடிதங்கள் அனுப்பப் பட்டன. அப்போது அந்தப் பகுதியில் இருந்த போலீஸார் திடீரென கூடினர். அந்தப் பகுதியே பரபரப்பானது. பின்னர் விவரம் அறிந்த போலீஸார், மாணவர்களை அன்புடன் அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வின் போது, ஏபிவிபி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ், நகர இணைச் செயலாளர் காலான்கரையான், பள்ளிகள் பொறுப்பாளர் ஹரிச்சந்திரன், கல்லூரிச் செயலாளர் சுடலைமுத்து உடன் இருந்தனர்


ஏபிவிபி., மாணவர் அமைப்பினர் வைத்த கோரிக்கைகளைப் போல், அய்யா வழி அன்பர்களும் அரசுக்கு வைத்து வருகின்றனர்.aiya vaikuntar book அய்யா வைகுண்டர் பைபிள் படித்தாரா?! பாடநூலில் உள்ள தவறான தகவலை நீக்கக் கோரி அமைச்சருக்கு ஏபிவிபி., கடிதம்!

சாமித்தோப்பில் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற அய்யா அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பின் அய்யா அறநெறி பரிபாலன அறக்கட்டளை தலைவர் பாலஜனாதிபதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

aiyavaikuntar book அய்யா வைகுண்டர் பைபிள் படித்தாரா?! பாடநூலில் உள்ள தவறான தகவலை நீக்கக் கோரி அமைச்சருக்கு ஏபிவிபி., கடிதம்! “அய்யா வைகுண்ட சுவாமி பற்றி எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ப்ளஸ்-1, ப்ளஸ்- 2 பாடத் திட்டங்களில் தவறாகக் கூறப்பட்டுள்ளது. அது அய்யாவழி மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. அய்யா வைகுண்ட சுவாமி மனிதனாக பிறந்து இறைவனாக அவதாரம் எடுத்தவர். அவருக்கு உருவ வழிபாடு கிடையாது. ஆனால், ஏதோ ஒரு படத்தை வைத்து பாடப் புத்தகத்தில் தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளது. அதை நீக்கி விட்டு அகிலதிரட்டு ஆகம நூலின்படி கருத்துகளை பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். தற்போது பாடப் புத்தகத்தில் உள்ள படத்தையும் நீக்க வேண்டும். இதை ஒருமாத காலத்துக்குள் சரி செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அய்யா வழி மக்களையும் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைத்தப்படும்” என்றார்.

aiyavazi sivachandran அய்யா வைகுண்டர் பைபிள் படித்தாரா?! பாடநூலில் உள்ள தவறான தகவலை நீக்கக் கோரி அமைச்சருக்கு ஏபிவிபி., கடிதம்!அதே போல், 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் அய்யா வைகுண்டசாமிகள் பற்றி இடம்பெற்றுள்ள தவறான கருத்துக்களை, நீக்க வேண்டும் என்று அய்யாவழி மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அய்யா வழி -அன்பாலயம் நிறுவனர் சிவச்சந்திரன், வைகுண்ட சாமிக்கு மனித உருவம் கொடுக்கப்பட்டுள்ளதையும், பாடத்தில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் தங்கள் இயக்கத்திற்கு எதிரானது எனவும் கூறினார். இதனை நீக்கவிட்டால் வரும் 30ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Dhinasari Jothidam ad அய்யா வைகுண்டர் பைபிள் படித்தாரா?! பாடநூலில் உள்ள தவறான தகவலை நீக்கக் கோரி அமைச்சருக்கு ஏபிவிபி., கடிதம்!

பின் தொடர்க

17,872FansLike
78FollowersFollow
70FollowersFollow
902FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

சினிமா...

நான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி!

. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

செய்திகள்... மேலும் ...