03/07/2020 4:33 PM
29 C
Chennai

பயங்கரவாத தொடர்பு: கைதானவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ., சோதனையில் சிக்கிய ‘ஏராளமான’ எலக்ட்ரானிக் பொருள்கள்!

இது குறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்த போது, கைப்பற்றப்பட்ட மின்னணு பொருள்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் படும், பின்னர் அவை சைபர் ஆய்வகத்துக்கு கொண்டு செல்லப் பட்டு, அவற்றில் உள்ள தகவல்கள் ஆய்வு செய்யப் படும் என்று கூறினர்.

Must Read

உள்ளத்தை கொள்ளையடிக்கும் வெள்ளை எள் பக்கோடா!

வெள்ளை எள் பக்கோடா தேவையானவை: வெள்ளை எள் ...

ஜூலையில் ரேஷன் இலவசம்! 6 முதல் 9 ஆம் தேதி வரை டோக்கன் வழங்கல்! முதலமைச்சர்!

டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தத்தமது நியாய விலை கடைகளுக்குச் 10.7.2020 முதல் சென்று அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

ஐநா காரில் பாலுறவு: இரு ஊழியர்களுக்கு சம்பளமில்லா கட்டாய விடுப்பு!

அந்த வாகனத்தில் இருந்த ஊழியர்கள் இருவரும் யு.என்.டி.எஸ்.ஓ. எனப்படும் ஐ.நா படைகள் கண்காணிப்பு அமைப்பின் ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது.

nellai nia search பயங்கரவாத தொடர்பு: கைதானவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ., சோதனையில் சிக்கிய ‘ஏராளமான’ எலக்ட்ரானிக் பொருள்கள்!

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நடத்திய சோதனையில் மின்னணு சாதனங்கள், ரகசிய தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவை கைப்பற்றப் பட்டுள்ளன.

அன்சாருல்லா எனும் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக தில்லியில் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 14 பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் சோதனை நடத்தப் பட்டு வருகிறது.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்துடன், அன்சாருல்லா என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய புகார் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக நாகையில் மஞ்சக்கொல்லை, சிக்கல் ஆகிய ஊர்களில், ஹாரிஸ் முகமது, அசன் அலி ஆகியோரது வீடுகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அன்சாருல்லா அமைப்பைச் சேர்ந்த 14 பேர் துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப் பட்டனர். பிறகு அவர்கள் தில்லியில் கைது செய்யப்பட்டனர். சென்னை, நெல்லை, மதுரை, பெரம்பலூர், ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அவர்கள், கடந்த திங்கள்கிழமை அன்று விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

நாகையில் கைது செய்யப்பட்டவர்களையும் சேர்த்து 16 பேரையும் எட்டு நாள் காவலில் எடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

nia பயங்கரவாத தொடர்பு: கைதானவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ., சோதனையில் சிக்கிய ‘ஏராளமான’ எலக்ட்ரானிக் பொருள்கள்!தொடர்ந்து, பிடிபட்ட 14 பேரது வீடுகளில் போலீஸ் பாதுகாப்புடன், என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பிராட்வே, மதுரை நரிமேடு, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, பெரம்பலூர் மாவட்டம் லெப்பை குடிகாடு, தேனி, நெல்லை மேலப்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ள 14 பேரது வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே திருவாரூர் முத்துப்பேட்டையில், அகமது அசாருதீனின் வீட்டின் பூட்டை உடைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது வீடு பூட்டப்பட்டிருந்த காரணத்தால், உறவினர்கள், போலீசார், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். முன்னதாக, அதிகாரிகள் கொண்டு வந்த பொருட்களையும், அவர்களது உடைமைகளையும் கிராம நிர்வாக அலுவலர் சோதனையிட்டார்.

இதை அடுத்து அகமது அசாருதீனின் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், ஒரு ஐபோன், சிம் கார்டு, குறுந்தகடுகள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

இதேபோல் நாகை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் வீட்டிலும் என்.ஐ.ஏ. சோதனை நடந்தது. அவரது வீடு 15 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்ததால், ஊர்மக்கள், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் வீடு திறக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில் எந்த ஆவணங்களும் சிக்கவில்லை!

இதனிடையே, கைதான 14 பேரில் 5 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் வீடுகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. மயிலாடுதுறை, நெல்லை மேலப் பாளையம் ஆகிய இடங்களில் இன்று காலை முதல் நடத்தப் பட்ட சோதனைகளில் ஏராளமான மின்னணு சாதனங்கள், லேப்டாப்கள், 7 செல்போன்கள், 5 சிம்கார்டுகள், 3 மெமரிகார்டுகள், ஹார்ட் டிஸ்குகள், பென் டிரைவ்கள் உள்ளிட்டவை கைப்பற்றப் பட்டுள்ளன.

இது குறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்த போது, கைப்பற்றப்பட்ட மின்னணு பொருள்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் படும், பின்னர் அவை சைபர் ஆய்வகத்துக்கு கொண்டு செல்லப் பட்டு, அவற்றில் உள்ள தகவல்கள் ஆய்வு செய்யப் படும் என்று கூறினர்.

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad பயங்கரவாத தொடர்பு: கைதானவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ., சோதனையில் சிக்கிய ‘ஏராளமான’ எலக்ட்ரானிக் பொருள்கள்!

பின் தொடர்க

17,874FansLike
78FollowersFollow
70FollowersFollow
899FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

சினிமா...

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

More Articles Like This