கட்டுரைகள் தமிழ்நாடு நாள்: ‘செங்கோட்டை’ பாகப் பிரிவினையின் சோக வரலாறு!

தமிழ்நாடு நாள்: ‘செங்கோட்டை’ பாகப் பிரிவினையின் சோக வரலாறு!

அந்தச் சோர்வு போக வேண்டுமானால், தமிழ் நாடு அரசு, தாய்ப் பார்வையுடன் எங்கள் பகுதியை நோக்க வேண்டும்! வேலை வாய்ப்பு, வேலை வாய்ப்பு, வேலை வாய்ப்பு... விவசாயப் பொருள்களின் உற்பத்தி, பாதுகாப்பு, ஏற்றுமதி... இவற்றுக்காக தொழிற்சாலைகளோ, கிடங்கிகளோ அரசு ஏற்படுத்த வேண்டும்.

-

- Advertisment -

சினிமா:

இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர்! ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி வைக்கிறீங்க?!

எஸ்.ஏ.சந்திரசேகரின் ஜாதி, மதத்தைக் குறிப்பிட்டு உள்நோக்கத்துடன் பேசிய பேச்சு இப்போது பலரது முகச்சுளிப்புக்கும் உள்ளாகியிருக்கிறது.

என்னா டான்ஸ்… சான்சே இல்ல! அட நம்ம குஷ்பு! வைரல் வீடியோ!

இதில் சிரஞ்சீவியுடன் செம டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார் குஷ்பூ இதுகுறித்த வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது

சிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம்! ரத்த வங்கிக்கு தேசிய விருது!

சிரஞ்சீவியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கிராமங்களிலும் நகரங்களிலும் ரத்ததான முகாம்களை ஏற்படுத்தி அந்த ரத்தத்தை சிரஞ்சீவி ரத்த வங்கியில் சேர்க்கிறார்கள் ரசிகர்கள்.

ஜோடி சேர புதுசா செலக்ட் பண்ணியும்.. உயரம் எட்டல! லெஜண்ட் சரவணன் சோகம்!

விளம்பரங்களில் தொலைக்காட்சிகளில் அடிக்கடி தலை காட்டி வந்த சரவணா ஸ்டோர்ஸின் அதிபர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் பூஜை டிச.1ம் தேதி ஞாயிறு நேற்று தொடங்கியது.
-Advertisement-

வெத்துவேட்டு வெங்காய அரசியல்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தெரிவித்த ஒரு கருத்தும் சர்ச்சையாகி இருக்கிறது.

ரொம்ப ‘காஸ்ட்லி’யான மாலை போட்டுக் கொண்டு… ஏழை கம்யூனிஸ்ட்கள் போராட்டம்!

அவர்களின் தற்போதைய போராட்டம் கூட, ஏழைத் தனமாக இல்லாமல், பணக்காரத்தனமாக மாறியிருக்கிறது. அதற்கு உதாரணமாகத்தான், ராமேஸ்வரத்தில் அவர்கள் நேற்று நடத்திய போராட்டம் அமைந்திருந்தது.

சிலைக் கடத்தலும் கள்ளச் சந்தையும்! பின்னணி என்ன? ஏன்?

கோவில் சிற்பங்களை ஏன் திருடி செல்கிறார்கள்? சிற்பங்களுக்கு ஏன் பல நூறு கோடிகள் கொடுத்து வாங்கி செல்கிறார்கள்? ஏன் அந்த கள்ள சந்தையும் கடத்தலும் இருக்கிறது?

அவரு கைலாஷ் நாட்ல இல்ல… நம்ம நாட்டு கைலாஷ்ல இருக்காராம்… நித்தியானந்தா!

தன்னோட கைலாஷ் நாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்... என்று ஊடகங்களில் கூறப்பட்ட நித்யானந்தா, தற்போது நம்முடைய கைலாஷ்ஷில் தான் உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளன.

நித்யானந்தா எங்கிருக்கிறார் தெரியவில்லை! வெளியுறவுத் துறை விளக்கம்!

புதிய பாஸ்போர்ட் கேட்டு நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் நிராகரிப்பு; மற்ற பாஸ்போர்ட்டையும் ரத்து செய்துள்ளோம்! நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்!

டிச.6: தடையை மீறி… தென்காசி மாவட்டத்தில் எஸ்டிபிஐ., ஆர்ப்பாட்டம்!

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தடையை மீறி எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில், 50 பெண்கள் உட்பட 261பேர் கைது செய்யப் பட்டனர்.

புளியங்குடியில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு!

தென்காசி மாவட்டம் புளியங்குடி டி.என். புதுக்குடியில் ஹபிப் என்பவரின் எலுமிச்சைத் தோட்டத்தில் சுமார் 12 அடி நீள மலைப்பாம்பு கண்டறியப் பட்டது.

தீபத் திருவிழாவுக்கு இதை எல்லாம் கொண்டு வந்தால்… உங்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசு!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத, துணி மற்றும் சணல் பைகள் கொண்டு வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளி நாணயங்கள் வழங்கப்படுமாம்!

ஜோதிடத்தை நம்பிய இளைஞர்; விரக்தியில் செய்த காரியம்.!

இந்த நிலையில் நேற்று மாலை சுத்துக்கேணி பகுதியில் ஒரு மரத்தில் நைலான் கயிற்றால் தூக்குபோட்ட நிலையில் மணிகண்டன் பிணமாக தொங்கினார்.

‘அதே என்கவுண்டர் ஸ்டோரி’யத்தான் சொல்கிறார்… காவல் ஆணையர் சஜ்ஜனார்!

இது சரியாக அதிகாலை 4.45 மணி முதல் 6.15 மணிக்குள் நடந்தது. அவர்கள் 4 பேரையும் சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லும் போது 10க்கும் மேற்பட்ட போலீசார் காவலுக்கு சென்றனர்.

அடடே…! நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்!

நித்தியானந்தா தனித்தீவு வாங்கியதாகவும் ஈக்வடார் உதவியதாகவும் வந்த செய்திகள் உண்மை யில்லை என்று அந்நாட்டு தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.

வெத்துவேட்டு வெங்காய அரசியல்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தெரிவித்த ஒரு கருத்தும் சர்ச்சையாகி இருக்கிறது.

போக்சோ – குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது!

"போக்சோ சட்ட குற்றவாளிகளுக்கு கருணை மனு தாக்கல் செய்ய உரிமை இல்லை" என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியுள்ளார்.

நிலத்தகராறு இளைஞரை உயிரோடு எரித்து கொன்ற கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு.!

மதியழகன் நொச்சிமேட்டு பகுதியில் இருந்து மலையரசம்பட்டு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, மாணிக்கம் மற்றும் ஒரு சிலர் மதியழகனை வழிமறித்து முகத்தில் மிளகாய் பொடி தூவி, ஈட்டி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கழுத்தை அறுத்துள்ளனா்.
- Advertisement -
- Advertisement -

2019 நவம்பர் 1: செங்கோட்டை தாலுகாவின் ஒரு பாதி, தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைந்ததன் 63ஆம் ஆண்டு!

1956ல் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, மாநிலச் சீரமைப்பு நடைபெற்ற போது, தமிழ்நாட்டின், தமிழ் மண்ணின், தமிழ் மொழியின், தமிழர்களின் உரிமைகளை இழந்துவிடாமல் இருக்க பெரும் போராட்டம் நடந்தது.

கேரளத்தின் திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தானங்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் பெருமளவில் இருந்த தமிழர் குழந்தைகள், தமிழ் படிக்க பெரும் தடை!

கிளர்ந்தெழுந்து உரிமை கோரினர் தமிழர்கள்! திருவிதாங்கூர் தமிழ் நாடு காங்கிரஸ் – உதயமானது! போராடியது! நாள்தோறும் கிளர்ச்சிகள். சபைகளில் குரல் எதிரொலித்தது! மேடைகளில் முழங்கினர்! சாலை மறியல்கள்! முற்றுகைப் போராட்டங்கள்! கைதுகள்! சிறைவாசம்! எல்லாம்தான்!

ஆயினும் தமிழர்கள் முன்வைத்த 9 தாலுகாக்களில் நாலரை தாலுகாக்களே தமிழ்நாட்டுடன் இணைக்கப் பட்டன!

அப்பம் பிய்த்துக் கொடுத்த கதையாக, உனக்கு நாலரை எனக்கு நாலரை என்று தமிழகமும் கேரளமும் பிய்த்து எடுத்துக்கொண்டு சமரச நோக்கத்துக்கு வந்ததாய் பெருமை பீற்றிக் கொண்டது இரு தரப்பிலும் இருந்த காங்கிரஸ்!

திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் பின்னாளில் சென்னை மாகாண காங்கிரஸுடன் இணைப்பு கண்டது!

அப்படி நாலரை பால் கதையாக அரை தாலுகா ஸ்டேடஸ் வந்தது எதற்கு தெரியுமோ? செங்கோட்டை தாலுகாவுக்குத்தான்! செங்கோட்டை தாலுகாவின் வளமையான மலைவளப் பகுதி கேரளத்துடன் ஐக்கியமானது!

இந்தப் போராட்டங்களில் முன்னணியில் நின்றவர்கள் பட்டியல் பெரிது! நாகர்கோவில் பகுதியில் நேசமணி உள்ளிட்டோர் நின்றார்கள் என்றால், செங்கோட்டையில் சட்டநாதக் கரையாளர் உள்ளிட்டோர் முன் நின்றனர்.

இது குறித்த விரிவான விளக்கக் கட்டுரை, சரித்திரப் பின்னணியும் மண் சார்ந்த அனுபவமும் கொண்ட தகவல்கள்… இங்கே!

பிரிவினை என்று வந்தாலே அதில் சோகம்தான் மிஞ்சும் போலும்! 1956இல் மொழி வாரி மாநிலங்கள் சீரமைப்பு செய்யப்பட்ட போது, பிரிவினைக்கு உள்ளான செங்கோட்டை தாலுகா அதற்கு ஓர் உதாரணம்! நவம்பர் 1 ஆம் தேதி மாநிலம் புதிதாய் உருவானதன் 60 ஆம் ஆண்டை இப்போது நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் (?)…

தமிழ்நாடு என்று பெயர் தாங்கி நம் மாநிலம் இப்போது அறியப் படுகிறது. இதற்காக நடைபெற்ற போராட்டங்கள், சுதந்திரப் போராட்டத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் தொடர் போராட்டங்களாகவே அமைந்துவிட்டது!
1947 நாட்டின் பெரும்பான்மை நிலப் பகுதி சுதந்திரம் பெற்றாலும், சமஸ்தானங்களின் பின்னணியில் ஒளிந்து கொண்டிருந்த சர்வாதிகாரம் சர்தார் வல்லப பாய் படேலின் மூலம் சரியாகிக் கொண்டிருந்தது. 1950ன் இறுதியில் சமஸ்தானங்கள் தேசியப் பெருஞ்சோதியில் கரைந்துபோய் விட்டாலும், அடுத்து தலைதூக்கிய மொழிப் பாகுபாடு, மொழி பேசும் மக்களிடையே காட்டப்பட்ட பாரபட்சங்கள் என சில முக்கியப் பிரச்னைகள் கொளுந்துவிட்டு எரிந்தன. விளைவு அடுத்த ஐந்து ஆண்டுகளும் மொழி வழி மாநிலப் பிரிவினை குறித்த போராட்டங்கள், அறிக்கைகள், மாநில மறு சீரமைப்பு விவாதங்கள், காங்கிரஸில் பிளவுகள், புதிய புதிய காங்கிரஸ் கூட்டமைப்புகள் உருவாக்கம், போட்டிக் கூட்டங்கள், அவற்றின் அடிப்படையில் மத்திய அரசுக்கு அனுப்பப் பட்ட அறிக்கைகள் என பரபரப்புக்குப் பஞ்சமில்லைதான்!

இந்தப் போராட்டங்கள், தமிழகத்தின் வட எல்லையில் சென்னை, திருப்பதி துவங்கி தெலுங்கு பேசும் மக்கள் பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மலையாளம் பேசும் மக்கள் பகுதி என வளர்ந்து கொண்டுதானிருந்தது.

இவை பற்றியெல்லாம் விரிவாக தற்போது தகவல்கள் வந்து கொண்டிருந்தாலும், என் சிறுவயதில் நான் கண்ட சொந்த மண்ணின் அனுபவப் பகிர்வை மட்டும் இங்கே வெளியிட எண்ணம் கொண்டேன்!

குற்றாலம் சுற்றுலா செல்பவர்களின் காதுகளில் இப்போது புரோட்டா சத்தம் அதிகமாய்க் கேட்டிருக்கும்! அதுவும் பார்டர் புரோட்டா என்று குற்றால சீஸன் காலத்தில் மக்கள் குவியலைக் கண்டிருக்கலாம்! இந்த பார்டர் எனும் பகுதிதான், அறுபது வருடங்களுக்கு முந்தைய சென்னை மாகாண எல்லை! பிரானூர் பார்டர் என்று கூறப்படும் ஹரிஹரா நதியை ஒட்டிய கிழக்குப் பகுதிதான் சென்னை மாகாணத்துடன் இருந்தது. மேற்குப் பகுதி, செங்கோட்டை தாலுகா! அங்கிருந்து துவங்கும் நிலப்பரப்பு, மலையில் பெரும்பான்மைப் பகுதிகளையும் கொண்டிருந்தது!

SONY DSC
SONY DSC

பிரானூர் பார்டரை அடுத்து செங்கோட்டை நகருக்குள் புகும்போது, வரவேற்பு வளைவும், கோயில்களில் இருக்கும் துவார பாலர்களைப் போன்ற அமைப்பில், ஒற்றை விரல் காட்டி ஒற்றைக் காலில் ஒய்யாரமாய் நின்று கொண்டிருக்கும் துவார பாலர்களையும், வரவேற்பு வளைவின் மேல் பகுதியில் சங்கு முத்திரையும் இருப்பதைப் பார்க்கலாம். சங்கு – திருவாங்கூர் சமஸ்தானத்தின் இலச்சினை! இந்த வரவேற்பு வளைவைக் கடந்துதான் நீங்கள் அந்தக் காலத்தில் திருவாங்கூர் ராஜ்ஜியத்தில் நுழைவீர்கள்! ஆன்மிக பூமியாய் விளங்கியது சிவன்கோட்டை என்று கூறப்பட்டு பின்னாளில் மருவி செங்கோட்டா.. செங்கோட்டை என்றும் ஆன பகுதி!

1950களில், திருவாங்கூர் சமஸ்தானம் இந்தியக் கூட்டமைப்பில் கொண்டுவரப்பட்ட பிறகு, மாநில சீரமைப்புக்கான நடவடிக்கைகள் துவங்கின. அப்போது, திருவாங்கூர் ராஜ்ஜியத்தில், தமிழ் பேசும் தமிழர்கள் அதிகம் இருந்த ஒன்பது தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க தமிழர்கள் கோரிக்கை வைத்தனர்.

தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரையின் தென்பகுதி, நெடுமங்காடு கிழக்குப் பகுதி, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு ஆகிய ஒன்பது தாலுகாக்களை முன்வைத்து பிரச்னை எழுந்தது.

இவற்றில் முதல் நான்கு மற்றும் செங்கோட்டையில் பாதியும் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. மற்றவை கேரளத்துடன் இணைக்கப்பட்டன.

செங்கோட்டையைப் பொறுத்தவரை, செங்கோட்டை தாலுகாவின் சமதள நிலவளம் கொண்ட பகுதி தமிழ்நாட்டுடனும், மலைவளம் கொண்ட மறுபகுதி கேரள மாநிலத்துடனும் சேர்க்கப்பட்டது. இதனால், செல்வாக்கும் வணிகமும் மேலும் பல வசதிகளும் அனுபவித்து வந்த நிலப்பரப்பைச் சேர்ந்தவர்கள், இந்த 60 ஆண்டுகள் கழித்துப் பின்னோக்கிப் பார்க்கும்போது, தாங்கள் ஏதோ ஏமாற்றப்பட்டதாகவும், முன்னேற்றம் தடைப்பட்டதாகவும் எண்ணத் தொடங்கியிருக்கிறார்கள்; ஒட்டுமொத்தமாக இல்லாவிட்டாலும் பெரியவர்களில் சிலர் இவ்வாறு வெளிப்படையாகச் சொல்கின்றனர்! அதற்குக் காரணம் இல்லாமலில்லை!

துவக்கப் பள்ளி பருவத்தில் நான் கண்டது…

SONY DSC

செங்கோட்டை பஸ் ஸ்டாண்ட், கேரள பஸ்களால் நிரம்பி வழியும். கேரளப் பேருந்துகள் நிறுத்துவதற்கென்று தனி பகுதி இருக்கும். மலைப் பகுதியில் இருந்து மக்கள் பெருமளவில் பஸ்களில் வந்து, செங்கோட்டை மேல பஜாரில் பொருள்களை வாங்கிச் செல்வர். அங்கே வியாபாரம் சூடு பிடித்திருக்கும்! மலைப் பகுதியில் இருந்து மிளகு, தேன் என விவசாயிகள் எடுத்து வந்து கீழ்ப் பகுதியில் விற்றுவிட்டு மற்ற பொருள்களை வாங்கிச் செல்வர். மறுசீரமைப்புக்குப் பின்னும் வெகு காலம் இப்படி நடந்து கொண்டிருந்தது, செங்கோட்டை பஸ்ஸ்டாண்ட் நவீனமாக்கப் பட்ட போது தலைகீழானது. கேரளப் பேருந்துகள் தென்காசிக்கு நீட்டிக்கப் பட்டன. செங்கோட்டையில் வியாபாரம் ’டல்’லானது! இப்போது இந்நிலையே தொடர்கிறது!

பாலராம வர்மா டெக்ஸ்டைல் மில் – பிவிடி மில் என்று புகழடைந்த ஒன்று! திருவாங்கூர் ராஜ்ஜியத்தின் மிகவும் பலவீனமான மகாராஜா என்று பேரெடுத்தவர், பதினாறு வயதில் பட்டத்துக்கு வந்த பாலராம வர்மா! அவர் பெயரில் செங்கோட்டை கட்டளைக்குடியிருப்பு பகுதியில் இயங்கி வந்த அந்த மில், பள்ளிப் பிள்ளைகளான எங்களுக்கு அந்தப் பகுதியின் ஒரே கண்காட்சி மையம்!

கண்ணுப்புளி மெட்டு அணை, பிவிடி மில், புகழ்பெற்ற புளியரை கடந்து கோட்டைவாசல் அருகில் உள்ள எஸ் பெண்டு வளைவு, ரயில் குகை என, இவையெல்லாம் மாணவர்களின் கண்காட்சி இடங்களாக இருந்தன. அத்தகைய பிவிடி மில், திருவாங்கூரில் இருந்து தமிழகம் வந்த பின்னர், நேஷனல் டெக்ஸ்டைல்ஸ் கார்பரேஷனின் புண்ணியத்தில் மிகப் பழைமையான இயந்திரங்கள் என்ற சாக்கினாலும், மேலும் தொழிலாளர் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளாலும் இழுத்து மூடப்பட்டு, இருந்த இடம் தெரியாமல் போனது! தொழில் வாய்ப்பு, தொழிலாளர்களின் வருவாய்க்கு வழி செய்து வந்த ஒரே மில்! போனதுதான் மிச்சம்! அதன் எதிரே இருந்த சட்டநாதக் கரையாளர் கல்லூரி, காணாமல் போனவை பட்டியலில் சேர்ந்து கொண்டது.

SONY DSC

(இப்போதைக்கு செங்கோட்டையில் இருக்கும் ஒரே ஒரு சிறு மற்றும் குறுந் தொழிற்சாலை என்றால் அது ப்ரீமியர் மில்தான்! ’’இந்தச் சிறு ஊரிலும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ப்ரீமியர் மில் ராமன், அவரது தந்தையார் ஈ.சுப்ரமணிய ஐயர் ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள்’’ என்று நினைவுகூர்ந்தார் செங்கோட்டையின் மூத்தகுடிமக்களில் ஒருவரான திரு.கே.எச்.கிருஷ்ணன். இவர் எஸ்.எச்.கல்யாணசுந்தரம் எம்.ஏ.பி.எல்., அவர்களின் திருமகனார்.

இவரே செங்கோட்டை திருவாங்கூர் ராஜ்ஜியத்தில் இருந்த போதான கடைசி தாசில்தார். அதுபோல், தமிழ்நாட்டுடன் இணைந்த செங்கோட்டை தாலுகாவின் முதல் தாசில்தாரும் இவரே! செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் எழுதப் பட்டிருக்கும் தாசில்தார்கள் குறித்த பட்டியலில் திரு.கல்யாண சுந்தரத்தின் பெயர் முதலில் இருக்கும். தன் தந்தையார் குறித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட திரு.கிருஷ்ணன், தமிழை அதிகம் நேசித்த என் தந்தையார், 1959ல் டெபுடி கலெக்டராக பதவி உயர்வு பெற்றார். ஆனால் தமிழ்நாட்டுடன் இணைந்த தாலுகாவில் அவருக்கு உரிய மரியாதையோ சலுகையோ வழங்கப்படவில்லை. திருவாங்கூர் கொச்சினில் அவருடன் பணியாற்றிய சக தாசில்தார்கள் பலர் கேரள அரசின் செயலர்கள் என்ற அளவில் பணியாற்றி ஓய்வு பெற்றனர். ஆனால் இவரோ தமிழகத்தில் உதவி ஆட்சியராகவே ஓய்வு பெற்றார். தமிழின் மீதான உந்துதலில் தான் எடுத்த முடிவு பற்றி பின்னாளில் அவர் வருத்தப் பட்டதுண்டு!” என்றார்.

இன்னும் பெரியவர்கள் பலர் சொல்வது ~ எப்படி இருந்திருக்க வேண்டிய பேரூர் – செங்கோட்டை! தமிழ்நாட்டில் பாதியளவுக்குத் தாரை வார்க்கப் பட்டதால், தனியான ஒரு தொகுதி என்ற அந்தஸ்தை இழந்துவிட்டது கண்கூடு! இன்று தென்காசி தொகுதிக்கு உட்பட்ட சிற்றூராக மாறிப் போனது!

chennai-pathinamthitta-via-trichy-madurai-tenkasi-sencottah-ariyankavu-punalur

தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையே 7 கி.மீ. தொலைவுதான் என்றாலும், செங்கோட்டையை தமிழகத்துடன் இணைத்தபோது, சில உறுதிமொழி பெறப்பட்டதாம்!

அவற்றில் ஒன்று – செங்கோட்டை மன்றத் தொகுதியில் எப்படி ஒரு நீதிமன்றம், தலைமை மருத்துவமனை, தாலுகா அலுவலகம் எல்லாம் இயங்கி வருகிறதோ, அதன் நிலைக்கு எந்தக் குறைவும் வரக்கூடாது, அவற்றை எக்காரணம் கொண்டும் மாற்றவோ, நீக்கவோ கூடாது என்பதாக, செங்கோட்டை நல்லாசிரியர் அமரர் வி.ஜனார்த்தனன் என்னுடனான தனிப்பட்ட உரையாடல்களின்போது கூறியிருக்கிறார். அந்த அரசு மருத்துவமனையில் மகாராவின் படம் பெரிதாக மாட்டப் பட்டிருக்கும். 80களில் என் சிறு வயதில் பார்த்திருக்கிறேன்.

SONY DSC

செங்கோட்டையில் பிரிட்டிஷார் காலத்தில் அமைக்கப்பட்ட ரயில் நிலையம், நல்லவேளையாக இன்றும் தூய்மையாகக் காட்சி தந்து, ஊரின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
நல்லவேளையாக, அய்யாபுரம் சுப்ரமணியன் எம்.டி., அதிகாரத்தில் இருந்தபோது, செங்கோட்டையில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனை ஒன்றும், அரசுப் போக்குவரத்துக் கழக (விருதுநகர்) கிளை பணிமனை ஒன்றும் அமையக் காரணமாக இருந்தார். இதனால் இரண்டு பணிமனைகள் உருப்படியாக ஊரின் பெயரைச் சொல்லிக்கொண்டு, போக்குவரத்து வசதிகளுக்குப் பஞ்சமில்லாமல் இருக்கிறது!

இன்னும் ஏக்கங்கள் பல; ஏமாற்றங்கள் பல! இப்போதைய நிலை இது என்றாலும், 60 வருடங்களுக்கு முந்தைய நிலை வேறாக இருந்துள்ளது!

அன்றைய செங்கோட்டை தாலுகா, மிகப் பரந்த அளவில், நெடுமங்காடுக்கு முந்தைய இடம் வரையிலும், ஆரியங்காவு, அச்சங்கோவில், தென்மலையின் கீழ்ப் பகுதி உள்ளிட்ட காட்டுப் பகுதிகளையும் உள்ளடக்கி, திருவாங்கூர் கொச்சின் ராஜ்ஜியத்தின் கொல்லம் சட்டமன்றத்துக்கு உட்பட்ட தொகுதியாக இருந்துள்ளது. முக்கியமாக, அச்சங்கோவில் வைப்பாற்றின் நீர்வளம், தென்மலை பகுதி நீர்வளம் எல்லாம் செங்கோட்டை தாலுகாவில் இருந்தது! மாநில சீரமைப்புக்குப் பின்னர் நீர்வளம் ‘மிஸ்ஸிங்’! வாய்க்கால் வரப்புத் தகராறுகள் தொடர்கின்றன!

இவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்! செங்கோட்டை பகுதி தமிழ்நாட்டுடன் இணைக்கப் பட வேண்டும் என்று குரல் எழுப்பப் பட்டதன் ஆணிவேரை அறிந்து கொள்ள வேண்டாமா?

இது 1910லேயே தொடங்கப்பட்ட போராட்டம்தான்! திருவிதாங்கூரின் தமிழர் பகுதி பள்ளிகளில் மலையாளமே முதன்மை மொழியாக இருக்கிறது; தமிழ் கற்றுக் கொடுக்கப் பட வேண்டும் என்பதை முன்வைத்து போராட்டம் துவங்கியது. அதற்கும் முன் 1905ல் வங்கப் பிரிவினையின் போது, காங்கிரஸ் பேரியக்கம் அதை எதிர்த்து, மொழி வழியே மாகாணம் அமைக்கப்பட வேண்டும்; மக்களை ஒன்று படுத்த வேண்டும் என்று கூறியது.

1920 நாக்பூர் காங்கிரஸில் எதிர்கால இந்தியாவைப் புனரமைக்க மொழிவழியே சிறந்த வழி எனத் தீர்மானம் இயற்றப் பட்டது. பின்னும் கூட 1928ல் நேரு தலைமையில் காங்கிரஸால் அமைக்கப்பட்ட குழு, மொழிவழி பிரிப்புக் கொள்கையை ஏற்று பரிந்துரைத்தது.

1928ல் திருவிக., மொழி வழி தமிழர் தேசம் குறித்து விதை போட்டார். 38ல் சுபாஷ் சந்திரபோஸ், காங்கிரஸ் தலைவரானபோது, தாய்மொழிக் கல்வியே நாட்டின் முன்னேற்றத்துக்கு வழி செய்யும் என்றார்.
38ல் தமிழர்களுக்கு என தனி மாகாணம், தனித் தமிழ்நாடு கோரிக்கை எழுந்தது.

இதே 38ல் திருவனந்தபுரத்தில் ஒரு மாநாட்டை கூட்டி, தமிழர்கள் நலன் காக்க ஓரணியில் திரள வேண்டும் என்று கோரினர். கோட்டாறில் தமிழ்ச் சங்கப்பொதுக்கூட்டத்தில் கே.என்.குமரேசபிள்ளை என்பார், திருவிதாங்கூரில் மலையாளம் பேசுவோர், தமிழர்களைப் பல வகையிலும் துன்பப் படுத்துகின்றனர் என்றார்.

44ல் சி.பா. ஆதித்தனாரின் நாம் தமிழர் இயக்கம், தென்னிந்திய தமிழ்ப் பகுதி, வட இலங்கை, தென் திருவிதாங்கூர் இணைந்த தனித்தமிழ்நாட்டுக்கு குரல் கொடுத்தது.

44ல் வி.எஸ். சுப்ரமணிய ஐயர், திருவிதாங்கூர் தமிழர் சங்கம் தோற்றுவித்து, பள்ளிகளில் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் கற்றுத் தரப்பட வேண்டும் என்று திருவிதாங்கூர் அரசைக் கேட்டுக் கொண்டு தீர்மானம் போட்டார்.

46ல் ம.பொ.சி., புதிய தமிழகம் எவ்வாறு அமையவேண்டும் என ’தமிழ் முரசு’வில் கட்டுரை எழுதினார்.
இன்னும் ஜெபமணி நாடார் ஸ்ரீமூலம் சபையில், தகுந்த வேலை வாய்ப்பு முன்னுரிமை, மரியாதையுள்ள குடிமக்களாக நடத்துதல் குறித்த பார்வையைப் பதிவு செய்தார்….

தினமலரும் தன் பங்குக்கு திருவிதாங்கூரில் தமிழர் பகுதிகள் குறித்து உறுதியாக நின்றது!

இவ்வாறாக முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்களின் இறுதிக் கட்டம் 1954ல் வந்து நின்றது. திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ், திருவிதாங்கூர் கம்யூனிஸ்ட் கட்சி என அமைப்புகள் ஒரு புறம் நிற்க…

ஏ.நேசமணி, ஏ.குஞ்சன் நாடார், சிதம்பரநாதன் நாடார், எஸ்.எஸ்,.சர்மா, பி.ராமசாமி பிள்ளை, ஏ.எம். சைமன், என்.ஏ.நூர்முகமது, பிஎஸ் மணி, ஜீவா, ஜி.எஸ். மணி, ரோசம்மாள் குஞ்சன் நாடார், கிருஷ்ணம்மாள், தாணுபிள்ளை என பலரின் கைகோப்பு, இந்த இயக்கத்துக்கு வலு சேர்த்தது.

மார்த்தாண்டத்தில் மாணவர் போராட்டம், மக்கள் சேர்க்கை, மோதல், காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு, 7 பேர் பலி என போராட்டம் திசை திரும்பியது.

சரி.. ஏன், இந்தப் பகுதிகளை கேரளத்துடன் இணைப்பதில் மலையாளிகள் முரண்டு பிடித்தார்கள்? … என்றால், வளமைதான் காரணம்!

இதனை அவர்களின் சில தீர்மானங்களில் காணலாம்!
இங்கே தனித் தமிழ்நாடு குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, அங்கே ஐக்கிய கேரளம் குறித்து பேசினாங்கள்.

திருவாங்கூர் கொச்சி பிரதேச காங்கிரஸின் தீர்மானம் (27.10.1954) ஐக்கிய கேரளம் பற்றிக் கூறியது. “பாரம்பரியமான கன்னியாகுமரி முதல் கோகர்ணம் வரை, கேரளம் அமையவேண்டும். மேலும், தென் கன்னடம், காசர்கோடு, கூர்கு, மலபர், கூடலூர், உதகமண்டலம், கோவையின் மேற்குப்பகுதி, பக்கவாட்டுத் தீவுகள் அடங்கிய ஐக்கிய கேரளம் அமையவேண்டும்” என்று தீர்மானம் போட்டனர்.

இதனை ம.பொ.சி. எதிர்த்தார். எழுதினார்.
ஆனால், மலையாளிகளோ, மொழியை காரணம் காட்டாதீர் என்றனர். தேவிகுளம் பீர்மேட்டில் தமிழர்கள் அதிகம் இல்லை. தோட்டத் தொழிலாளரே அனைவரும். ஒரு வாரம் விடுமுறை விட்டால், அங்கே 200 பேர் கூட வசிக்க மாட்டார்கள். எனவே, மொழியைக் காரணம் காட்டி அதைப் பிரிக்கக் கூடாது என்றனர்.

தோவாளை, அகத்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு இவை எல்லாம் மீன்பிடி பிரதேசம், முக்கிய உலோகங்கள், நெல் வயல்கள் நிரம்ப உள்ளன. நம் வருமானத்துக்கு இவையே ஆதாரம். எனவே விடக்கூடாது என்று அடம்பிடித்தனர்.
இப்படியான மலையாள காங்கிரஸாரின் வாக்குமூலத்தை, கடுமையாக சாடினார் ம.பொசி.

மலையாள மொழி வழங்கும் பகுதிகள் எல்லாம் – ஒரு அங்குலம் விடாமல் மலையாளிகளுகே = இது மொழி அடிப்படையில்;
மலையாள மொழி வழங்கும் கேரள நாட்டின் எல்லையிலுள்ள தமிழ் தாலுகாக்களும் மலையாளிகளுக்கே=- இது தேவையின் அடிப்படையில் என்பதுதான் கேரள காங்கிரஸாரின் கோரிக்கை. அவர்கள் இப்படிக் கேட்குமளவுக்கு அவர்கள் துணிவு பெற பஸல் அலி கமிஷனில் சர்தார் கே.எம்.பணிக்கர் அங்கம் வகித்தது காரணம். மலையாளி எங்கிருந்தாலும் மலையாளிதான் என்று சாடினார் ம.பொ.சி.

திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இதற்கு நேர் மாறான திசையில் இருந்தது. பரவலாக இதன் போராட்டங்கள் இருந்தாலும், செங்கோட்டையில் மிகத் தீவிரமாக இருந்தது. கொல்லம் மாவட்டத்தில் சேர்ந்திருந்த செங்கோட்டை தாலுகா, 98 சதம் தமிழர்கள் நிறைந்த பகுதி. நெல்லை மாவட்டத்தின் தமிழர் வாழ்வியலுடன் ஒத்ததாக இருந்தது செங்கோட்டை பகுதி! ஆட்சி அதிகாரத்தில் மட்டுமே மலையாளிகள் இருந்தனர்.

திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸின் முன்னணி வீரர்களாக இருந்தவர்கள், கிருஷ்ண சாமி கரையாளர், சபரி பெருமாள் பிள்ளை, ஏ.ஆர். கரையாளர் ஆகியோர்.

1.8.1954ல் செங்கோட்டையில் நடந்த சர்வகட்சிக் குழுப் போராட்ட பொதுக் கூட்டத்தில், காந்திராமன், சங்கரலிங்கம் ஆகியோர் தமிழ்நாட்டுடன் இணைய வேண்டியதன் அவசியம் குறித்து உரையாற்றியுள்ளனர். தொடர்ந்து 4ம் நாள் திருவிதாங்கூர் கொச்சி சட்டசபையில், ஐக்கிய முன்னணி உறுப்பினரான கே.சட்டநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., ஏ.ஆர். கரையாளர் ஆகியோர் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைத் திரட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டையில் நீதிமன்ற மறியல், போராட்டங்களில் ஈடுபட்டு பலர் சிறை சென்றுள்ளனர்.
தொடர்ந்து போராட்டங்கள் நடந்துள்ளன. அப்போதைய செங்கோட்டைப் போராட்ட கதாநாயகர் சட்டநாதக் கரையாளர்!

இவ்வாறு போராட்டங்கள் பல கண்டு, தமிழ்நாட்டுடன் இணைந்தது செங்கோட்டை! எல்லாம் தமிழுக்காகத் தான்! தமிழர் உரிமைக்காகத்தான்!

வட எல்லை மீட்பு, தென் தமிழக மீட்பு என இரு வேறு நிலைகளில் நாம் இழந்தது அனேகம். பெற்றது சொற்பம்! அவை முழுதாகப் பெறப்பட்டோ, அல்லது இழந்தோ போயிருக்கலாம்!

ஆனால்… செங்கோட்டை மட்டும், குரங்குக்கு அப்பம் பிய்த்துக் கொடுத்த கதையாக, கம்பீரமான தாலுகாவாக இருந்து, பிரிவினை கண்டு, பாதி இங்கும் பாதி அங்குமாய்த் தொங்கிப் போய் இணைப்பு கண்டது.

அதன் காரணத்தாலேயே, ஏமாற்றம் ஏக்கம் சோர்வு எல்லாம் இந்த 63 ஆண்டுகளில் அண்டியிருக்கக் கூடும்!

அந்தச் சோர்வு போக வேண்டுமானால், தமிழ் நாடு அரசு, தாய்ப் பார்வையுடன் எங்கள் பகுதியை நோக்க வேண்டும்!
வேலை வாய்ப்பு, வேலை வாய்ப்பு, வேலை வாய்ப்பு…
விவசாயப் பொருள்களின் உற்பத்தி, பாதுகாப்பு, ஏற்றுமதி…
இவற்றுக்காக தொழிற்சாலைகளோ, கிடங்கிகளோ அரசு ஏற்படுத்த வேண்டும்.

செங்கோட்டையில் இருந்து கிழக்கே 100 கி.மீ. தூத்துக்குடி! மேற்கே 95 கி.மீ., கொல்லம்! கடற்கரைகள் பலம்தான்! ஏற்றுமதி, தொழில் சார் நடவடிக்கைகளுக்கும் பஞ்சமிருக்காது!

இந்த 60ம் ஆண்டிலாவது செங்கோட்டையின் குரலை சென்னைக் கோட்டை சற்றே காது கொடுத்துக் கேட்கட்டும்!

– செங்கோட்டை ஸ்ரீராம்

Sponsors
Sponsors

- Advertisement -

1 COMMENT

-Advertisement-

Follow Dhinasari :

17,941FansLike
174FollowersFollow
722FollowersFollow
14,600SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்!

உளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

குட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா? இத செய்யுங்க!

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

ஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி

குழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |