
ஆதி வள்ளியப்பன் என்கிற அறிவியல் எழுத்தாளர் தி இந்து தமிழ் என்ற ஒரு தினசரி பத்திரிக்கையில் தொல்லியல் அறிவியல்: ஆரியர் வருகை: அறிவியல் சொல்வது என்ன? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
கட்டுரையின் கடேசிவரியாக, ‘New reports clearly confirm “Arya” migration into India’ என்ற தலைப்பில் The Hindu Magazineல் Tony Joseph எழுதிய கட்டுரையை தழுவி எழுதப்பட்டது என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
இந்த கட்டுரையை படித்தாலே தெரியும், கட்டுரை ஆசிரியர், அதன் மூல கட்டுரை ஆசிரியர் இருவருமே, அறிவியல் சஞ்சிகைகளின் நடைமுறைகள் தெரியாமலும், அதைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமலும், உளறியிருக்கிறார்கள் என்று.
மதிப்புமிக்க ஆராய்ச்சி என்ற தலைப்பின் கீழ் ரெண்டு ஆய்வுக் கட்டுரைகளைப்பற்றி குறிப்பிடும் இடத்தில் அதில் ஒரு கட்டுரை 117 அறிவியலாளர்களை இணை ஆசிரியர்களாக கொண்டு மேம்படுத்தப்பட்டு சயின்ஸ் என்ற இதழில் வெளியாகியுள்ளதாக சொல்லியிருக்கிறார்கள்.

இதை சொல்வதன் நோக்கம், இந்த தமிழ் கட்டுரையில் சொல்லப்படும் கருத்துகள் உலகெங்கும் உள்ள சிறந்த அறிவியலாளர்கள் 117 பேரால் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டுவிட்டது என்று. ஆதி வள்ளியப்பன் அட் லீஸ்ட் ஒரே ஒரே ஆய்வு கட்டுரை தன் வாழ்நாளில் அறிவியல் சஞ்சிகையில் எழுதியிருந்தால், இப்படி ஒரு நாற்றமெடுக்கும் வாந்தி எடுக்கமாட்டார். அல்லது, தெரிந்தே, வேண்டுமென்ற விஷமகருத்துக்களை பரப்புவதற்காக, இப்படி ஒரு முட்டாள்தனமான முட்டு கொடுத்து எழுதுகிறார் என்றே கருத வேண்டியிருக்கிறது.
அடுத்ததாக, தமது கருத்துகளை புதிய தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் மீது திணித்து, ஒரு வெகுஜன பரவலாக்க முயற்சிப்பதாகவே இதை கருதவேண்டியிருக்கிறது.

அதில் ஓரிடத்தில் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு, தென்னகம், அந்தமான் உட்பட வந்தடைந்தனர், இந்த மக்களே சிந்து சமவெளி நாகரீகத்தை கட்டமைத்தனர், சிந்துசமவெளி நாகரீகம் சரிவடைந்ததை தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறி, ஏற்கனவே 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வந்து தென்னகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தவர்களோடு கூடி நவீன தென்னிந்திய மூதாதையர் மரபை உருவாக்கினார் என்று ஓரிடத்தில் சொல்கிறார்.
இதேகாலத்தில் மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர் வடஇந்தியாவிற்கு, அதாவது சிந்துசமவெளி நாகரீக இடங்களுக்கு வந்து, வடஇந்திய மூதாதையர் மரபை உருவாக்கினார் என்கிறார். பஞ்சம், பட்டினியால், சிந்துசமவெளி நாகரீகம் சரிந்தது, அதனால், அங்கிருந்த மக்கள் வெளியேறி தென்னிந்தியாவுக்கு வந்தனர் என்றால், மத்திய ஆசியாவிலிருந்து வந்ததாக சொல்லப்படுபபவர்கள் சரிந்துபோன சிந்துசமவெளி நாகரீக மக்களை எங்கு சந்தித்து புதிய மரபை உருவாக்கினார்கள்?
இதற்கு வள்ளியப்பனிடமும் விடை இல்லை, டோனி ஜோசப்பின் கட்டுரையிலும் விடை இல்லை; இந்த இருவரும் படித்த மூல ஆதார அறிவியல் சஞ்சிகையில் வெளியான ஆய்வுக்கட்டுரைகளிலும் விடை இல்லை. அப்புறம் என்ன கேசத்துக்கு இந்த ரெண்டுபேரும் ஆரியர் வருகைன்னு கூவிட்டிருக்குறாங்க? கால்டுவெல்ல-தான் கேக்கணும்.
அடுத்ததாக, தென்னிந்திய மக்கள் சிந்துசமவெளி மக்களின் வழித்தோன்றல்கள் என்ற கருத்தை செருகுகிறார். அதுமட்டுமல்லாது, சிந்துசமவெளி மக்களின் மொழியிலிருந்துதான் தென்னிந்திய திராவிட மொழியும், சிந்துசமவெளி மக்களிடமிருந்துதான் ஜல்லிகட்டும் தமிழர் கடன்வாங்கியிருக்கக்கூடும் என்றும் பொருள்படும்படி கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.
எல்லாஞ்சரி, சென்னை அருகே சுமார் 385000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால கருவிகள் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதே, அவை என்ன சொல்கின்றன? 65000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவங்க 385000 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில செஞ்சுவச்சுட்டு போயி அத திரும்ப எடுக்கவந்தாங்களா? இல்லே, ஏதாவது ஏலியன் வந்து வச்சுட்டுப்போச்சா?

வைகை சமவெளியில, தாமிரபரணி சமவெளியில, 10000 -15000 வருட பழமையான நுண்கற்கால கருவிகள் கிடைக்கிறதாமே ? அவையெல்லாம் என்ன, 4200-4600 வருடத்துக்கு முந்தைய சிந்துசமவெளி மக்கள் தாம் பிறகப் பதற்கு 10000 வருடத்துக்கு முன் கொண்டு வந்து இங்க போட்டுட்டு பின்னர் அவற்றைத் தேடி வந்தனரா?
முட்டு குடுக்கறதுன்னா ஒழுங்கா குடுங்க, பஹுத்தறிவு கொண்டையை மறச்சிட்டு குடுங்க, கால்டுவெல் பரம்பரை அடிவருடி என்பதை முக்காடு போட்டு மறைச்சுட்டு குடுங்க.
- பேராசிரியர் மு. ராம்குமார்