
சமீபத்து திருமாவளவனின் ஹிந்து விரோதப் பேச்சு கோயில் கோபுரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அதில் உள்ள பொம்மைகள் ( அவருக்கு சிற்பங்கள் என்று சொன்னால் இழுக்கு போலும்) காமத்தைப் பற்றியே சொல்கிறது அவை அசிகங்கள் என்பது .
இதன் பின்னமாவது நாம் கோபுரம் என்றால் என்ன என்று பார்ப்போம் . அடியேனுக்கு தெரிந்த சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன் !
கோபுரம் என்பதே ஒரு சிற்பம் .
தமிழகத்து கோபுரம் தமிழர்களின் பெருமை அதில் உள்ள ஒரு தூணைக்கூட நம்மால் இன்று கட்டமுடியாது . கேலி பேசலாம் அதனைப் பாழ் செய்யலாம் அவ்வளவு தான் !
கோபுரம் வாழ்வியலின் பிரதிபலிப்பு ! சமயச் சன்னங்களும் அதில் அடக்கம் ஆனால் முழுவதும் சமயம் பற்றியது இல்லை !
அதில் தர்மம் , செல்வம் , காமம் , மோட்ஷம் என்று நான்கு நிலைகளைப் பற்றியும் குறிப்புக்கள் உள்ளன ! ஆனால் நம் திருமாவளவனுக்கு காமத்தைத் தாண்டி பார்வை போகவில்லை !
தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டு முதல் பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை சிற்பக்கலை மிக்க கோயில்கள் பல இருந்தாலும் அடுத்து இரண்டு நூற்றாண்டுகளில் இஸ்லாமியப் படையெடுப்பால் பல சிதையுண்டன !
பின்னர் நாயக்கர் காலங்களில் அது தூக்கி நிறுத்தப்பட்டது .
ஒரு முட்டாள் சதஸில் , திருமா கூறுகிறார் ஏதோ மசூதி கூம்பாய் இருக்குமாம் , சர்ச் உயராமாய் இருக்குமாம் , ஆனால் கோயிலில் அசிங்க பொம்மை இருக்குமாம் அஹா என்ன அறிவு !
பெரிய கோயிலுக்கு இணையாக ஒரு வேற்றுமத வழிபாட்டுத் தலம் உலகில் எங்காவது உள்ளதா ?
கோயிலில் சிற்ப சாஸ்த்திரம் , ஆகம விதிமுறைகள் , கட்டுமான நுணுக்கங்கள் , ஸ்திரத்தன்மை என்று காண்பவர் கண்டு மலைக்கும் பல அறிவுத்திறனை உள்ளடக்கியது .
பொது நலணுக்காக கோபுரங்களில் “விதை நெல்லை” வைத்து கட்டுவதும் மரபு . அக்காலத்து டிஸ்சாஸ்டர் மெனஜ்மெண்ட் அது . இதுவெல்லாம் கண்ணுக்குத் தெரியாது பதர்களுக்கு !
கோயிலில் விமானப் பகுதியில் அதிஷ்டானம் ( பாதக்கட்டு) , சுவர், பிரஸ்தரம் (கூரை) , கிரீவரம் , ( கழுத்து) , சிகரம் , ஸ்தூபி என்று பல கட்டுகளை உள்ளடக்கியது .
பிற்பகுதியில் கருவறை , பலிபீடம் , கொடிமரம் , மண்டபம், இரண்டாம் கோபுரம் என்று பல கட்டுக்கள்.
“ வானாறும் மதிள் சூழ் “ பெரும் மதிள் சுவர்களும் அங்கு உண்டு ! நினைத்தாலே பிரமாண்டம் !
காமம் நம் வாழ்வில் ஒர் அங்கம் என்பதால் அதற்கும் அங்கு இடம் உண்டு ஆண் பெண் இணைதல் , பிறப்புறுப்பை காட்டிய படியான சிற்பங்கள் , முத்தமிடுதல் போன்றவையும் காணலாம் அரைகுறை அறிவுடன் கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் சமயத் தொடர்பானவை என்று நினைத்துக் கொண்டு உளறுதல் உங்கள் புரிதலின்மையைக் காட்டுகிறது !
செக்ஸ் எஜிக்கேஷன் என்று இன்று மேற்கத்திய உலகம் சொல்வதை இரண்டாயிரம் ஆண்டு முன்னே நாம் பேசியுள்ளோம் !
இதைத்தான் சிறுமை என்று ஓட்டரசியலுக்காக மாற்று மதத்தினரை சந்தோசப்படுத்த நீர் பேசுகிறீர் !
“சுருக்கணிகள்” என்று ஒரு சிற்ப நுணுக்கம் ஒன்று உண்டு இதையெல்லாம் நீங்கள் கண்டதுண்டா ?
கல்லால் சிற்பி கயிறு போல் குடைந்து தூண்களில் அலங்காரமாய் தொங்க விடுவது தான் சுருக்கணிகள் ( chain block made out of stone ) இதுபோன்ற ஒரு அதிசய வேலையை உலகில் எங்காவது காட்ட முடியுமா ?
அதனால் தான் நம் முன்னோர் தமிழகத்திற்கு ஒரு கோயிலின் படத்தை அரசு சின்னமாய் வைத்தனர் !
நீங்கள் திருந்தப் போவதில்லை வெறுப்பரசியல் பேசியே உங்கள் வாழ்நாள் முழுதும் போகும் ! தமிழகத்தை பின்னே தள்ளுவது தான் உங்கள் அஜெண்டா . மதம் , ஜாதி , அது இது என்று பேசி வாழ்வாங்கு வாழ்ந்து போவீரே !
- Ramaseshan Ks