பிப்ரவரி 24, 2021, 9:32 மணி புதன்கிழமை
More

  உன் எதிர்காலத்தை தீர்மானிப்பவன் நீயே!

  Home கட்டுரைகள் உன் எதிர்காலத்தை தீர்மானிப்பவன் நீயே!

  உன் எதிர்காலத்தை தீர்மானிப்பவன் நீயே!

  தன்னம்பிக்கையோடும் நற்சிந்தனைகளோடும் முன்னேறிச் சென்றால் இளைஞர்களால் செய்ய முடியாதது என்று எதுவுமே

  vivekananther
  vivekananther

  உன் எதிர்காலத்தை தீர்மானிப்பவன் நீயே!
  ஜனவரி 12- சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்!
  தேசிய இளைஞர் தினம்!

  பாரத தேசத்தின் கலாச்சார பாரம்பரியத்தைக் காத்துப் போற்றும் சாமர்த்தியம் இளைஞர்களுக்கு இருக்கிறது என்றும் தேசத்தை முன்னேற்றப் பாதையில் எடுத்துச்சென்று முன்னிலையில் நிறுத்தும் பொறுப்பு இளைஞர்களுக்கு உள்ளது என்றும் தீவிரமாக நம்பினார் விவேகானந்தர்.

  சுவாமிஜி வெறும் உபதேசங்களோடு எல்லை வகுத்துக் கொள்ளவில்லை. தான் நம்பிய கொள்கைக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.

  கலாச்சாரமும் பண்பாட்டு பாரம்பரியமும் பாரத தேசத்தின் ஆழமான சொத்துக்கள் என்று எண்ணிய விவேகானந்தர் எங்கு சென்றாலும் இளைஞர்களின் பொறுப்புகளை அவர்களுக்கு நினைவூட்டி வந்தார். நாட்டை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்வது இளைஞர்களால் மட்டுமே சாத்தியமாகும் என்று அவர் தன் உரைகளில் முக்கியமாக குறிப்பிட்டார்.

  vivekananda quote 1
  vivekananda quote 1

  தன்னம்பிக்கையோடும் நற்சிந்தனைகளோடும் முன்னேறிச் சென்றால் இளைஞர்களால் செய்ய முடியாதது என்று எதுவுமே இல்லை என்று எடுத்துரைத்தார்.

  இளைஞர்களின் சக்திக்கு இருக்கும் முக்கியத்துவத்தை இந்தியா மட்டுமே அல்ல உலகம் முழுவதும் அடையாளம் காண வேண்டும் என்று விவேகானந்தர் முழங்கினார். தலைமுறைகள் கடந்தாலும் அவருடைய சொற்கள் இன்றும் கடைபிடிக்கத் தக்கவையாதலால் இளைய பாரதத்தின் முக்கியத்துவத்தை நினைவுறுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12ஐ தேசிய இளைஞர் தினமாக கொண்டாடி வருகிறோம்.

  இளைஞர்களுக்காக அவர் ஆற்றிய சொற்பொழிவுகள், செய்த போதனைகள் பல மொழிகளில் உலகமெங்கும் சிறப்பாக பரவியுள்ளன. நவீன பாரதத்தை விரும்பிய விவேகானந்தர் காட்டிய மார்க்கத்தில் இளைஞர்கள் பயணிக்க வேண்டும் என்ற உத்தேசத்தோடு அரசாங்கம் தேசிய இளைஞர் தினம் தொடர்பாக பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.