Homeகட்டுரைகள்பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி, பகத் சிங் பிறந்த பொன்நாடு – ராஷ்ட்ரம் தேவோ பவ!

பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி, பகத் சிங் பிறந்த பொன்நாடு – ராஷ்ட்ரம் தேவோ பவ!

lala-lajpat-rai
lala-lajpat-rai

மாதா.. பிதா.. குரு.. தெய்வம்.. என்று நாம் நம் சந்ததியினருக்கு அறிவு பரிமாற்றம் செய்து வருகிறோம்.

ஒரு படி மேலே போய் நம் தர்மம் என்ன சொல்கிறது என்றால் மாத்ரு தேவோ பவ. .பித்ரு தேவோ பவ… ஆச்சர்ய தேவோ பவ… என்பதற்கு அடுத்து அதிதி தேவோ பவ என்கிறது.. ஆம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களையும் தெய்வத்திற்கு சமானமாக சொல்வது சனாதன தர்மம். இது சார்ந்து நாம் பல புராண நிகழ்வுகளை பார்த்து இருக்கிறோம்..பிள்ளைக்கறி படைத்த நாயனார் சரித்திரம் வரை ..

தினம் ஓர் அதிதி.. (விருந்தாளி)- க்கு உணவளித்து பின்புதான் தான் உண்ணுவேன் என்ற விரதம் இருந்தவர்களை பற்றியெல்லாம் என் தந்தை சொல்ல கேட்டு இருக்கிறேன்.
.
நிற்க .. இதற்கும் மேலாக – நம் சந்ததியினருக்கு ஒன்றை சொல்லி தர வேண்டும் என்பது என் அவா.. ஆம் ராஷ்டிரம் தேவோ பவ.. அதாவது மாதா, பிதா, குரு, தேசம்., தெய்வம் என்று சொல்லி தரவேண்டும். இதையே தேவர் பெருமான் தேசமும் தெய்வமும் நம் இரு கண்கள் என்று தாரக மந்திரமாக கொண்டு வாழ்ந்தார்.

இது இந்த காலக்கட்டத்தில் மிக அவசியமாகிறது.
தேசமே நமகெல்லாம் கொடுக்குது … நாமும் சிறிது கொடுக்க பழகணும்… என்று வாழ்வோர் சிலரே..

bhagat-sing

தேசமே நமெக்கெல்லாம் கொடுக்குது நாம் மேலும் அதனை சுரண்ட பழகணும் என்று வாழ்வோர் பலரே …இந்த தேசத்தையும் தேசத்தின் பல பகுதிகளையும் அரசியல் என்ற பெயரால் ஆண்டு இருக்கின்றனர் .
.
எதோ திட்டங்கள் போட்டு தேசத்தின் வளங்களை திருடியவர்களை கூட மன்னிக்கலாம். ஆனால் தேசத்தை காட்டி கொடுத்து உலகெங்கும் சொத்து சேர்த்த எட்டப்பர்களை எப்படி மன்னிப்பது.

அரசியல் வாழ்விற்கு, வருவோருக்கு முதலில் சொல்லி தர வேண்டியது ..
.
பாரில் எல்லா தேசங்களில் எங்கள் தேசம் உயர் தேசம்..
இதனில் நாங்கள் வாழ்ந்துள்ளோம் இதனுணவுண்டு வளர்ந்துள்ளோம்.. என்ற சிந்தனை.

ஏன் திடீர் என்று இந்த சிந்தனை.. .ஆம் குடியரசு நாள் அன்றாவது தேசபற்று கொஞ்சம் கூட இருக்க வேண்டிய நாளில் தேசத்தின் எட்டப்பர்கள், பிரிவினை வாதிகள் அந்நிய கைகூலிகள் .. இவர்கள் நாட்டின் தலைநகரில் நடத்திய வன்முறை .நினைத்தால் நெஞ்சம் கணக்கிறது.. கண்களில் ரத்த கண்ணீர் வருகிறது. ஆம் இந்த வன்முறையில் டெல்லி செங்கோட்டையில் காலிஸ்தான் என்ற பிரிவினைவாதிகள் பேயாட்டம் ஆடி உள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு மாதமாக இதற்கான திட்டம் போட்டு உள்ளனர்.
.
லாலா லஜபதி ராய், பகத்சிங் போன்ற எண்ணற்ற விடுதலை போராட்ட காரர்களை தந்த அதே பஞ்சாப்… சாராகாரி யில் சண்டையிட்ட அதே பஞ்சாப் மக்களை நினைத்தால் இன்றும் நரம்புங்கள் துடித்தெழும்.. ஆனால் வைரம் விளைந்த அதே பூமியில் தான் பிந்தரன்வாலே, பியான்ட் சிங், சத்வந்த் சிங் போன்ற கொலைகார பிரிவினை வாதிகளும் தோன்றினர்.

இப்பொழுது அதே மாநிலத்தில் உள்ள இடைத்தரகர்கள் விவசாயிகள் என்ற போர்வையிலே ஒரு தேசபக்தர் இந்த நாட்டை ஆள கூடாது என்ற ஒற்றை குறிக்கோளில் சதி செய்து வருகிறார்கள்.
.
பாமரனும் கேட்கும் ஒரு கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை ..
சட்ட்டத்தில் சில தவறு இருக்கலாம் ..ஒட்டுமொத்த சட்டமே எப்படி தவறாக இருக்கும்? என்று கேட்கிறார்கள்
ஆம் ஒட்டுமொத்த நாட்டு மக்களால் தேர்ந்தெடுத்த அரசிற்கு சட்டம் இயற்றுவதுதான் ஜனநாயக கடமை.. இயற்றுகிற சட்டம் சரி பார்க்க வேண்டியது பாராளுமன்றத்தின் கடமை. அதையும் தாண்டி இயற்றப்பட்ட சட்டம் சரியாகத் தான் இருக்க வேண்டும் என்பதல்ல.

ஆனால் ஒட்டு மொத்த சட்டமே தவறு என்றால் அது ஜனநாயகத்தையே இழிவு படுத்தும் செயலாகும். அதைத்தான் இந்த தரகர் கூட்டம் செய்கிறது.

ஜாங்கரி செய்து கொடுத்தால் ஜாங்கரியில் சுற்று கம்மியாக இருக்கு எனலாம் . ஜாங்கரியில் இனிப்பு போதாது எனலாம்.. ஜாங்கரி கலர் சரி இல்லை எனலாம். இதற்கு பெயரே ஜாங்கிரி என்று வைக்க கூடாது.. பாதுஷா வை தான் நீங்க ஜாங்கிரி என்று சொல்ல வேண்டும் என்று தலைமை சமையல் காரருக்கு ஹோட்டலில் சாப்பிட வந்தவர் சொல்லுவது போல். பல முறை சந்தித்த எல்லா பேச்சு வார்த்தைகளிலும் இதுவரை பல விஷயங்களை திறம்பட சாதித்த.. அண்டை நாடுகளை அடக்கி ஒடுக்கிய ஓர் அரசு சொல்கிறது உங்களுக்கு இதில் என்ன மாற்றம் வேண்டும் தெளிவாக சொல்லுங்கள் என்று… அதெல்லாம் கிடையாது சட்டத்தையே திரும்ப பெறுங்கள் அது ஒன்றுதான் எங்கள் கோரிக்கை என்பது எவ்வளவு கேவலம். முன்பு ஒரு கதை கேள்வி பட்டு இருக்கிறோம் .. ஒரு குழந்தைக்கு தவறாக உரிமை கோரும் தாய்.. குழந்தை யாரிடமும் இருக்க வேண்டாம் நானும் கேட்டு விட்டேன் அவளும் கேட்டு விட்டாள் ஆகையால் குழந்தையை சரி பாதியாக வெட்டி கொடுங்கள் என்றாளாம்.. அதாவது குழந்தை சாக வேண்டும் அரசர் தீர்ப்பில் தோற்க வேண்டும் என்ற அந்த தாயின் அதே எண்ணம் தான் இந்த தீய சக்திகளுக்கு.
.
இவர்களுக்கு தேச பக்தி என்பதன் அரிச்சுவடி கூட தெரியாது என்பதற்கு .. இவர்கள் குடியரசு தினம் அன்று ஆடிய வெறி ஆட்டமே சாட்சி.
.
சாம; தான; பேத; முறைகள் முடிந்து விட்டன.
.
தடி எடுத்தால் தான் குரங்கு அடங்கும் என்றால் அரசு தடி எடுக்கவும் தயங்கக் கூடாது. பஞ்சாபின் பெருமை மட்டுமல்ல ஒட்டு மொத்த பாரதத்தின் இறையாண்மை காக்கப் பட அரசு எது வேண்டுமானாலும் செய்யலாம்.
.
ஆம் அந்த நடவடிக்கை ..நாட்டு மக்களுக்கு தன்னால் உணர்த்தும்
ராஷ்ட்ரம் தேவோ பவ….. என்ற பதத்தின் முக்கியத்துவத்தை.

  • ஜி. சூரிய நாராயணன்
    (G.Surya Narayanan, suryg12@gmail.com )

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,118FansLike
377FollowersFollow
71FollowersFollow
74FollowersFollow
3,304FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி....

அஞ்சலி-நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம்...

Latest News : Read Now...

Exit mobile version