Home கட்டுரைகள் ஹிந்து பெற்றோர்களே … குழந்தைகளோடு பேச நேரம் எடுத்து கொள்ளுங்கள்!

ஹிந்து பெற்றோர்களே … குழந்தைகளோடு பேச நேரம் எடுத்து கொள்ளுங்கள்!

ஹிந்து பெற்றோர்களே மாதா, பிதா, குரு, தெய்வம் .. இதை எதோ சந்தங்கள் சேர்ந்த ஒரு சொற்றடராக பார்க்காதீர்கள் ..

grandma storytelling
grandma storytelling

ஹிந்து பெற்றோர்களே குழந்தைகளோடு பேச நேரம் எடுத்து கொள்ளுங்கள் .

ஒவ்வொரு ஹிந்து குடும்பமும் எப்படி வளர்ந்து உள்ளது என்றால் தாத்தா, பாட்டி, மாமா என்ற உறவுமுறைகளால் ஊட்டி வளர்க்கப்பட்டு வளர்ந்துள்ளது.  அது வரும் காலங்களில் இருக்குமா ?    90% சதவிகிதம் இருக்காது !

ஏன்? தாத்தா பாட்டி மாமா வோடு இப்போது குடும்பங்கள் இல்லை .
சில குடும்பங்களில் மாமா  என்ற உறவே இருக்க போவது இல்லை. ஒற்றை பெண்ணாக வளரும் கன்னிக்கு திருமணத்திற்கு பின் பறக்கப் போகும் குழந்தைக்கு ஏது மாமா , ஏது சித்தி, ஏது பெரியம்மா  ?  சரி இந்த விஷயத்தை பின்பு பார்ப்போம் ..

ஹிந்து பெற்றோர்களே மாதா, பிதா, குரு, தெய்வம்  .. இதை எதோ சந்தங்கள் சேர்ந்த ஒரு சொற்றடராக பார்க்காதீர்கள் ..
.
இது மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆச்சார்யா தேவோ பவ என்ற வேத வாக்கியங்களை மட்டும் பிரதிபலிக்க வில்லை .
.
மாதா-பிதா வே குரு…   குரு–வே தெய்வம் .. என்ற பொருளையும் வழங்குகிறது.
ஆகையால் பிள்ளைகளின் முதல் குரு மாதா , பிதா .. ஆகையால் அவர்கள் தெய்வங்களாக வணங்கப்பட வேண்டியவர்கள் என்பதனை உணர்வோம்.
.
நான் வளர்ந்து ஆளாகி சமூகத்தில் பழகும் போது எனக்கு ஹிந்து, முஸ்லிம், கிருத்துவ, நாத்திக நண்பர்கள் அதிகம். 
.
அவர்களில் யாரேனும் ஹிந்து தர்மத்திற்கு எதிராக ஏதாவது சொன்னால் நான் என் தந்தையிடம் கேட்டு அவர்களை மறுத்து கருத்து கூறுவேன். மேலும் என் பாட்டி சொன்ன கதைகள் மூலம் நானே நேரடியாக சில விஷயங்களையும் எடுத்து சொல்வேன்.

lion story

ஆகையால் உங்கள் பிள்ளைகளை  – உயிரே போனாலும் ஹிந்து தர்மத்தின் சாராம்சங்களில் தவறு இருக்கிறது என்பதை ஒப்பு கொள்ளாதீர்கள்.. என்று சொல்லி கொடுத்து வளர்க்கணும். நமக்கு வேண்டுமானாலும் தெரியாமல் இருக்கலாமே அன்றி தவறாக எதுவும் இருக்க வாய்ப்பே இல்லை என்பதை சொல்லி கொடுங்க.  

படையெடுப்பாளர் கும்பல் நாட்டில் புகுந்த பின் அவர்கள் மாற்றி அமைக்க முன்னெடுப்பு எடுத்தது… நம் கலாச்சாரத்தையும், புராணத்தை பற்றியும் நமக்கு இருக்கும் நம்பிக்கையை கெடுப்பது என்பதுதான்.

இதற்காக அவர்கள் கோடி கணக்கில் செலவழித்து உள்ளார்கள் , செலவழித்து கொண்டும் இருக்கிறார்கள்
.
எனக்கு தெரிந்த ஒரு நபர் அவர் இப்போது உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. அவரின் குடும்பம் ஒட்டு மொத்தமும் கிருத்துவ மதத்திற்கு மாறி விட்டது. அவரின் சகோதரர்கள் சர்ச்களில் மிகப்பெரிய பதவிகளில் எல்லாம் இருந்து போப் க்கு நெருக்கமானவர்களாக எல்லாம் வளர்ச்சி பெற்ற குடும்பம். அவர் மட்டும் ஹிந்து தர்மத்தின் மீது …கிறிஸ்தவம் வியாபார ரீதியாக திணிக்கும் பொய் அனைத்தையும் நம்ப மறுத்தார். ஒரு குரு விடம் சந்தேகம் கேட்டு தெளிவடைந்தார், பின்பு தாய் மதம் திரும்பினார். ஒரு கார்டினல் அளவுக்கு உயர்ந்த ஒரு கிருத்துவ குடும்பத்தில் ஒருவர் தாய் மதம் திரும்பினால் அது கிருத்துவத்திற்கு மிகவும் இழுக்கு என்று உணர்ந்த கிருத்துவர்கள் அவர் வீடு நோக்கி படை எடுத்தனர். அனைவரிடம் ஹிந்து தர்ம சிந்தனைகள் சார்ந்த கேள்விக் கணைகளை தொடுத்தார். காமா சோமா என்று பதிலளித்தனர். கூட வந்து இருந்த.. சதா சர்வ காலமும் ஊழியம் செய்யும் ஒருவரை காண்பித்து இவர் மகன் ஏன் ஊனத்தோடு பிறக்க வேண்டும் இவ்வளவு நாள் இவர் ஏசுவுக்கு செய்த ஊழியம் வீணா.. இவர் சிறு வயது முதல்  ஊழியம் செய்தார் ஏசு ஆசீர்வாதத்தால் படித்தார் , வேலை பெற்றார், திருமணம் பெற்றார் என்று சொல்லும் நீங்கள் அந்த குழந்தையை ஏசு ஆசீர்வாதத்தால் பிறந்தான் என்று சொல்வீர்கள் என்றால் இதுதான் ஆசீர்வாதமா? இப்படி ஆசீர்வாதம் செய்பவர் கடவுளா என்று வருத்தெடுத்தார். சும்மா விடுவார்களா .. இவரே ஹிந்துவாக இருந்து ஹிந்து கடவுளுக்கு ஊழியம் செய்து இருந்தார் என்றால் அந்த குழந்தை ஊனமில்லாமல் பிறக்க ஹிந்து தெய்வங்கள் ஆசீர்வதித்து இருப்பார்களா ? என்று கேள்வி கேட்டு துளைத்தனர்.
.
வாய்ப்பே இல்லை என்றார். அனைவரும் சிரித்தனர்.

பொறுங்க ..பிள்ளை பேறு மட்டுமல்ல எந்த பேறும் .. ஊழ்வினை பொறுத்து தான். சனாதன தர்மத்தில்   

குறள்:377

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

குறள் விளக்கம்:

கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும், இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.

இதுதான் ஹிந்து தர்மம் சொல்கிறது அதைதான் வள்ளுவ பெருமான் பத்து குறளில் சொல்லி உள்ளார் .என்றவுடன் வந்திருந்தவர் அனைவரும் வாயடைத்து போனார்கள் .

எதற்கு இந்த நிகழ்வை குறிப்பிடுகிறேன் என்றால் நம் வீட்டிலேயே ஹிந்து எதிரிகளை வளர்க்க முயற்சிகள் நடக்கிறது. நல்ல குடும்பத்தில் இருந்து வந்த ஒரு நெறியாளர் தன் தொழில் தர்மம் என்று நினைத்து கொண்டு ஒரு ஹிந்து பக்தரை வேண்டுமென்றே (திக்கு முக்காட வைப்பதாக நினைத்து ) மோசமான கேள்விகள் கேட்கிறார். நல்ல வேலை மறுமுனையில் உள்ளவர் கெட்டிக்காரர். இல்லை என்றால் யோசித்து பாருங்கள் .. ஒரு நிமிடத்தில் எப்படி நாத்திகம் பரவி இருக்கும் என்று. ஆனால் வளர்ப்பு சரியாக இருந்தால் அந்த நெறியாளர் அந்த கேள்விகளை தேர்ந்தெடுத்து இருக்க மாட்டார்.
.
VGP போன்ற மிகபெரிய செல்வந்தர்கள் தங்கள் நிறுவனங்களில் பலவேறு விதங்களில் ஹிந்து எதிர்ப்பு கருத்துக்களை ஹிந்து மதம் சார்ந்திருக்கும் பணியாளர்களிடம் நிர்பந்திப்பதை எல்லாம் கேள்வி பட்டு இருக்கிறேன். அங்கெலாம் பணிபுரியும் நம் குழந்தைகள் மன உறுதியோடு இருக்க வேண்டும். சூப்பர் சிங்கர் போன்ற தேன் கலந்த விஷ நிகழ்சிகள் .. பார்ப்பவரை மட்டுமல்ல .. பங்கேற்பாளர்களையும் மறைமுகமாக ஹிந்து மதத்தில் இருந்து தூர அழைத்து செல்ல வேண்டிய எல்லா அம்சங்களையும் தன்னகத்தே கொண்டு உள்ளது.   

இப்படி கல்வி நிறுவனம், பணியிடம் என்று ஆரம்பித்து கேளிக்கை அரங்கம் வரை எங்கும் ஹிந்து துவேஷம்…. கண்டிக்காமல் இருக்கலாம், ஆனால் கண்டுகொள்ளாமல் இருப்பது தவறு என்பது நம் குழந்தைகளுக்கு தெரிய வேண்டும். கண்டு கொள்ள ஆரம்பித்து விட்டோம் என்று தெரிந்தாலே மாற்றங்கள் ஆரம்பித்து விடும்.

கருத்தாய் இருப்போம்.. சனாதன தர்மத்தை கருவறுக்க நினைப்போரை எதிர்ப்போம்.

ஜி.சூரிய நாராயணன் (suryg12@gmail.com)


.
   

1 COMMENT

  1. ஹிந்து பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இந்த கட்டுரை அமைந்துள்ளது. ஒரு குடும்பத்தை சரி செய்யாமல், சமுதாயத்தை சரி செய்ய முடியாது. சிறப்பான, அவசியமான கட்டுரை…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + 16 =

Translate »