Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் தினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன?!

தினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன?!

daily one veda vakyam 2 5

68. வாழ்வின் இலக்கு என்ன?

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன் 

“ஜீவா ஜ்யோதிரஸீமஹி” – சாமவேதம்.
“உடலெடுத்தவர்களான நாங்கள் சிறப்பான ஜோதியைப் பெறுவோமாக!”

மனித உடலை சுக போகம் அனுபவிக்கும் பொருளாக அன்றி, அமிர்த தத்துவத்தை பெரும் சாதனமாக தரிசித்தார்கள் வேதரிஷிகள்.

ஜோதியை சாதிப்பதே வாழ்வின் பரமார்த்தம். உடலே நாம் என்று எண்ணாமல் உடலை ஆத்மாவுக்கு ஒரு மேடையாக தரிசிப்பதே உண்மையான பார்வை. உடலைக் கொண்டு போகங்களை அனுபவித்து காலத்தை வீணடிக்கக் கூடாது .

ஜோதி என்றால் ஒளிக் கற்றை. ஒளி என்பது ஞானத்திற்கு சின்னம். ஞான மயமான ஜோதியை பெறுவதிலேயே பாரதிய தத்துவ சிந்தனை முழுவதும் ஈடுபட்டுள்ளது.

பௌதீகமான செல்வத்தையும் கேளிக்கையும் விடுத்து ஆத்ம ஜோதியை பெறுவதே சிறந்த வழி என்று பாரதிய பண்டைய மார்க்கங்கள் அனைத்தும் போதிக்கின்றன.

வித்யை, ஞானம் என்பவை உலகியல், பாரமார்த்திகம் என்ற இரண்டு வேறுபாடுகளோடு கூடியது. இவ்விரண்டுமே தேவைதான். உலக விவகாரங்களுக்கு உலகியல் கல்விகளும் விஞ்ஞானமும் தேவையே. ஆனால் அவை பரமார்த்திகப்  பலனை மறக்கக்கூடாது. அதனை முக்கிய நோக்கமாகக் கொண்டு உலகியல் வாழ்வை நியமத்தோடு வாழவேண்டும். அத்தகு நியமத்திற்கே  தர்மம் என்று பெயர். 

thiruvedagam vivekananda college yoga day

தர்மத்தை கடைப்பிடிப்பதற்கு ஒரு சாதனமாக உதவுவதே உடல் என்பது வேதக் கொள்கை.  அதாவது உடலை தர்மத்திற்கான கருவியாக பயன்படுத்த வேண்டுமே தவிர போகத்திற்கு மேடையாக அல்ல என்கிறது சனாதன மதக்கொள்கை.

மனிதன் தாற்காலிக உலகியல் பயன் மீது விருப்பம் இல்லாமல் சாஸ்வதமான பரமார்த்திகத்தின் மீது பார்வையை செலுத்துவது சமுதாயத்திற்கும் இயற்கைக்கும் பாதுகாப்பை அளிக்கக்கூடியது. 

தர்மப் பார்வை இல்லாத சமுதாயம் சுயநலத்திற்காக எத்தகைய தீமைக்கும் துணியும்.  உலகியல் விஞ்ஞான வளர்ச்சி உன்னதமானது என்று கூற இயலாது. பதார்த்தத்தையும் பரமார்த்தத்தையும் மறந்து விட்டால் உலகியல் முன்னேற்றத்தால் அடையக் கூடியது எதுவுமில்லை. எத்தனை வளர்ந்தாலும் புலனின்பத்தின் மேல் மனம் சென்றால் அது முன்னேற்றம் எவ்வாறு ஆகும்?,

இதனைக் கருத்தில் கொண்டு பல வழிமுறைகளோடு கூடிய பாரதிய விஞ்ஞானம் ஒரே பரபிரம்மத்தின் மீது பார்வையை வைத்தது. இங்கு எத்தகைய கல்விக்குமான லட்சியம் ஆத்மஜோதி, சத்யஜோதி, சாட்சாத்காரம். ஒவ்வொரு வித்யைக்கும் தார்மீகமான

நியமங்களை கடைப்பிடிப்பது மிக முக்கியம் என்றார்கள். எந்த கல்வியானாலும் ஒன்றுக்கொன்று கருத்து வேறுபாடு இருக்காது. மேலும் பரஸ்பரத் தொடர்பு கொண்டிருக்கும். ஜோதிடம் யோகம், சங்கீதம், சிற்பம், நாட்டியம், வைத்தியம் அனைத்தும் ‘ஜோதி சாட்சாத்காரமே’ பரம பிரயோஜனம் என்று எடுத்துரைத்தன.

பாரத தேசம் ஆதியிலிருந்தே பௌதிக உலகின் கேளிக்கைகளுக்காக அன்றி ஆத்மாவின் உயர்வுக்கும் உத்தம குணங்களை வளர்த்துக் கொள்வதற்கும் முக்கியத்துவம் அளிப்பதன் காரணம் இதுவே. 

ஞானம், வைராக்கியம் இரண்டும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும். வைராக்கியம் என்பது மனதிற்கு பயிற்சி. இது மானசீகமான பல நோய்களை நீக்குகிறது. சத்தியத்தை நோக்கி திடமாகப் பார்வையை நிறுத்துவதே வைராக்கியம். இது ஞானத்தை விட்டு தொலைவாக விலகும் மனச்சோர்வு அல்ல.

ஞானத்தோடு கூடிய வைராக்கியமே நம்மில் உள்ள சுயநலம் எனும் பாம்புப் பகையின் நிழலை சமுதாயத்தின் மீது விழாமல் காக்கும்.

நித்திய ஜோதியை நோக்கித் தொடரும் வாழ்க்கை, தர்மத்தோடு ஜோடி சேரும்போது ஞான நோக்கத்தோடு கூடிய வைராக்கிய மாகிறது. இது முன்னேற்றத்தைத் தடுக்காது. அதற்கு ஒரு திசையையும் இலக்கையும் வழி காட்டும். அந்த இலக்கையே ஜோதியாக, சத்தியமாக, ஆத்ம சாக்ஷாத்காரமாக விளக்கியது சனாதன வேத மதம்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version