― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்கல்விக் கொள்கையில் மொழிச் சாயம் பூசினால்... இப்போது கதைக்கு ஆகுமா?!

கல்விக் கொள்கையில் மொழிச் சாயம் பூசினால்… இப்போது கதைக்கு ஆகுமா?!

- Advertisement -
new education policy

-வேதா டி. ஶ்ரீதரன் –

உண்மை புரியாமல் எழுதி இருக்கிறார், சத்யா! கல்வி அமைச்சரின் எதிர்ப்பு கவலைக்குரியது (துக்ளக் 2-6-2021) கட்டுரையில் சத்யா குறிப்பிட்டுள்ளது போல 3, 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்ற கருத்து புதிய கல்விக் கொள்கையில் இருப்பது உண்மையே. இது கல்விக் கொள்கையின் நான்காவது அத்தியாயத்தில் (உட்பிரிவு 4.40) குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அத்தியாயம் பள்ளிகளின் பாடத்திட்டம் (curriculum), கற்பிக்கும் முறை (pedagogy) ஆகிய இரண்டு விஷயங்களைப் பற்றியது.

இந்த அத்தியாயத்தை முழுமையாகப் படித்தால் இந்தத் தேர்வுகளின் நோக்கத்தைப் புரி்ந்து கொள்ள முடியும். இவை எந்த வகையிலும் குழந்தைகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் தேர்வுகள் அல்ல. இந்தத் தேர்வுகளுக்கும் மாணவர் தேர்ச்சிக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. அதுமட்டுமல்ல, இவற்றின் முடிவுகளை மாணவர்களுக்கு அறிவிக்கவும் கூடாது.

உண்மையில், இந்தப் பொதுத் தேர்வுகள் குறித்துக் கவலை கொள்ள வேண்டியது ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும்தானே தவிர மாணவர்கள் அல்ல. ஏனென்றால், பள்ளிகளின் கல்வித் தரத்தை எடைபோடும் விதத்தில் இந்தத் தேர்வுகள் இருக்கும்.

மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலும் மாணவர்கள் பள்ளிப் படிப்பு முடித்த கையோடு வேலைக்குச் சென்று விடுகிறார்கள். இவர்களால், நல்ல சம்பாத்தியம் தரும் வேலைகளில் சேர்ந்து திறம்படப் பணியாற்ற முடிகிறது. இத்தகைய பொதுவான திறன்களை அவர்களிடம் வளர்க்கும் விதத்தில் அந்த நாடுகளின் பள்ளிக் கல்வி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிற்காலத்தில் அவர்கள் தங்களின் சூழலுக்கு ஏற்ற விதத்தில் தாங்கள் விரும்பும் துறைகளில் மேற்படிப்புப் படிப்பார்கள். மேற்படிப்புக்கு உரிய பாடங்களை அவர்கள் பள்ளிக் கல்வியில் படித்திருக்க வேண்டும் என்ற தேவை எதுவும் கிடையாது.

அதாவது, பள்ளிக் கல்வி அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும். இதை முடித்தவர்கள் தரமான வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் ஆற்றல், மேற்கொண்டு எந்தத் துறையிலும் கல்வி கற்கும் ஆற்றல் ஆகிய இரண்டு திறன்களும் உடையவர்களாக இருப்பார்கள். இதையே employability & educability என்று கல்வியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இதே போன்ற பள்ளிக் கல்வியை நமது நாட்டின் பன்முகத் தன்மைக்கும் கல்விச் சூழலுக்கும் ஏற்ற விதத்தில் இந்தக் கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது.

மேலும், இந்தக் கல்விக் கொள்கையைத் திமுக எதிர்ப்பதற்குக் காரணம் இந்தக் கொள்கையில் வலியுறுத்தப்படும் தாய்மொழி வழிக் கல்வி தானே தவிர, ஹிந்தியோ ஸம்ஸ்கிருதமோ அல்ல. இதைக் கொஞ்சம் விரிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

திமுகவினர் நடத்தும் பள்ளிகளை நேரடியாகப் பாதிக்கும் நிறைய அம்சங்கள் இந்தக் கல்விக் கொள்கையில் காணப்படுகின்றன. ஆங்கிலத்தில் Unique Selling Proportion என்று சொல்வார்கள். பிஸினெஸ் மார்க்கெட்டிங்கில் வியாபாரிகளால் தங்களது பொருளின் தனிச்சிறப்பான அம்சங்களாகக் குறிப்பிடப்படும் விஷயங்கள் என்பது இதன் பொருள்.

இதே போல தனியார் பள்ளிகளால் தங்களது பள்ளியின் Unique Selling Proportion என்று இதுவரை சொல்லப்பட்டு வந்த அம்சங்கள் அனைத்தையும் அரசுப் பள்ளிகளில் கட்டாயமாக்கும் விதத்தில் இந்தக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு தனியார் பள்ளியில் உள்ள அனைத்து அம்சங்களும் அதன் அருகிலேயே உள்ள அரசுப் பள்ளியிலும் கிடைக்கும் என்றால், பெரும்பான்மையான பெற்றோர்கள் அரசுப் பள்ளியின் இலவசக் கல்வியைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். இயல்பாகவே இது தனியார் பள்ளிகளின் வியாபாரத்தைப் பாதிக்கும்.

மேலும், ஆங்கில மீடியம்தான் தனியார் பள்ளிகளின் மிகப் பெரிய Unique Selling Proportion. அது தாய்மொழி வழி – அதாவது, தமிழ்வழி – கல்வியாகி விட்டால் தனியார் பள்ளிகளின் தனித்தன்மை அடியோடு போய்விடும்.

இத்தகைய அம்சங்கள் அமலாகும்போது ஸ்டாலின், கனிமொழி போன்ற கருணாநிதி குடும்பத்தினர் நடத்தி வரும் பிரமாண்டமான சிபிஎஸ்இ பள்ளிகளின் வியாபாரத்துக்குப் பெரிய ஆபத்து எதுவும் நேரிடாது. ஆனால், வட்டம், மாவட்டம் லெவலில் திமுகவினரால் நடத்தப்பட்டு வரும் பல நூறு மெட்ரிக் பள்ளிகளின் வியாபாரம் மரண அடியைச் சந்திக்க வேண்டி வரும்.

இதுதான் திமுகவின் அடிப்படைப் பிரச்சினை.

உண்மையை மறைத்து அதற்கு மொழிப் பிரச்சினைச் சாயம் பூசினால் மத்திய அரசு பயந்து விடும் என்று திமுக தலைமை கணக்குப் போட்டு பூச்சாண்டி காட்டுகிறது. ஆனால், ‘’உன்னால் ஆனதைப் பார்த்துக் கொள்’’ என்று மத்திய அரசாங்கம் தைரியமாக இந்த அம்சங்களை நடைமுறைப் படுத்தினால் திமுகவின் சாயம் வெளுத்து விடும் என்பதே யதார்த்த நிலை.

காரணம், தற்போது தமிழ்நாட்டு மாணவர்கள், பெற்றோர் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இதனால் முன்பு போல ஹிந்தி எதிர்ப்பு மனநிலை தற்போது இல்லை. எனவே, திமுகவினர் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தினால் அதற்கு வெகுஜன ஆதரவு இருக்க வாய்ப்பே இல்லை.

மேலும், இப்போது தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வலுவாக உள்ளது. ஹிந்திக்கு எதிராக என்று சொல்லி அரசுப் பள்ளி மாணவர்கள் மத்தியில் திமுகவினர் போராட்டத்தைத் தூண்ட முயற்சித்தால், திமுகவினர் நடத்தும் பள்ளிகள் முன்பாக அதே ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்களை பாரதிய ஜனதா கட்சி நடத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?

nationaleducationpolicy

From the NEP…
4.40. To track progress throughout the school years, and not just at the end of Grades 10 and 12 – for the benefit of students, parents, teachers, principals, and the entire schooling system in planning improvements to schools and teaching-learning processes – all students will take school examinations in Grades 3, 5, and 8 which will be conducted by the appropriate authority. These examinations would test achievement of basic learning outcomes, through assessment of core concepts and knowledge from the national and local curricula, along with relevant higher- order skills and application of knowledge in real-life situations, rather than rote memorization. The Grade 3 examination, in particular, would test basic literacy, numeracy, and other foundational skills. The results of school examinations will be used only for developmental purposes of the school education system, including for public disclosure by schools of their overall (anonymized) student outcomes, and for continuous monitoring and improvement of the schooling system.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version