2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி அன்று உலகில் யாருமே எதிர்பாராத விதமாக காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டது இந்தியா. சட்ட ரீதியாக நுணுக்கமான திட்டமிடல் இதில் முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது.
தற்போது அது போல ஒரு திட்டத்தை முன்னெடுக்க மத்திய அரசு நிர்வாகம் முனைப்புடன் செயலாற்றி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் பகுதியை ஒன்றாகவும்,…… லடாக் பகுதியை மற்றொன்றாகவும் இருண்டு யூனியன் பிரதேசமாக மாற்றி மத்திய அரசு நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இருக்கிறார்கள். தற்போது லடாக் தவிர்த்து விட்டு மற்ற பகுதியான ஜம்மு காஷ்மீர் பகுதியில் மாத்திரம் தேர்தல் நடந்த முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இது மிகவும் தந்திரமான ஒரு நடவடிக்கை.
பாகிஸ்தானிய ஆக்ரமிப்பு பகுதியில் உள்ள காஷ்மீர் பகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் தற்போது அங்கு நடைபெற்று வருகின்றன….. இதற்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்த மத்திய அரசு தற்போது சமயோசிதமாக வேறு விதமான செயலில் இறங்கி இருக்கிறார்கள். இங்கு வேறோர் காரியத்தையும் செய்து இருக்கிறார்கள் அது தான் இந்த விஷயத்தில் மிக முக்கியமான ஒரு நடவடிக்கை.
ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளிவ் தலா 50 லட்சம் வரை வசித்து வருகிறார்கள். ஆனால் தொகுதி அடிப்படையில் ஒன்றுக்கு 36 மற்றொன்றில் 47 சட்டமன்ற தொகுதி என ஏற்பாடு செய்து வைத்து கொண்டு கடந்த காலத்தில் ஆட்டம் காட்டி வந்திருக்கிறார்கள் மெஹபூபாஹா மற்றும் அப்துல்லா வகையறாக்கள்… அதாவது தங்கள் சௌகரியத்துக்கு இவ்வாறான பங்கீடு செய்து வைத்து கொண்டு தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அவர்களில் ஒருவரே தேர்ந்தெடுக்கப்படுவது போன்ற ஏற்பாடு இது.
சரியான சொன்னால் குறிப்பிட்ட ஒரு சமூகத்தவரே…. ஒரு மதத்தினரே வெற்றி பெறுவது போன்ற……. உள்கட்டமைப்பு இது.
இதனை உடைத்து இருக்கிறது மத்திய அரசு.,தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரில்…. வரும் நாட்களில் ஜம்மு என்பதோ அல்லது காஷ்மீர் என்பதோ இல்லாமல் போனாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை…… அல்லது ஜம்மு தனியாக காஷ்மீர் தனியாக மீண்டும் பிரித்து தனித் தனியாக உருவாக்கப்பட்டாலும் ஆச்சரியப்பட வேண்டாம்.
இது போன்ற விவகாரங்களினால் பாகிஸ்தான் இப்போதே தினற ஆரம்பித்து விட்டனர். அவர்களை பொறுத்து வரை புலி வால் பிடித்த கதை. நிஜமும் அதுதான் என்பது வேறு விஷயம்.
தற்போது அவர்கள் வசம் உள்ள காஷ்மீர் பகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது…… இதனை தற்போது உள்ள சூழ்நிலையில் நிறுத்த முடியாது…. அதேசமயம் நடத்தி அதில் தேர்ந்தேடுக்கப்படும் உறுப்பினர்…..நாளையே இந்திய வசம் உள்ள காஷ்மீர் பகுதியை சேர்ந்த ஏதேனும் ஒரு அரசியல் கட்சியோடு சேர்ந்தால் விஷயம் அத்தோடு முடிந்து விட்டது….. மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு ஊர் திரும்பி வேண்டியதை தவிர வேறு வழி இல்லை பாகிஸ்தானுக்கு.
காஷ்மீர் விவகாரத்தில் அப்படி ஒரு ஷரத்து உண்டு…. மக்கள் விரும்பும் நாட்டினரோடு அதாவது இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது எந்த நாட்டுடன் சேர விரும்புகிறார்களோ அந்த நாட்டுடன் இணைந்து கொண்டு விட முடியும். அப்படி செய்ய வாக்கெடுப்பு வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததே அன்றைய பாகிஸ்தான் அரசு தரப்பு தான். அது இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது….. ஏனெனில் இது வரை காலமும் தேர்தல் அங்கு நடைபெறவில்லை….. இது முதல் தேர்தல்….. அவர்களுக்கு…
அதனால்பேய் முழி முழித்து கொண்டு இருக்கிறார்கள் பாகிஸ்தானியர்கள். அவர்களின் கைவிரலை கொண்டே அவர்கள் கண்களை குத்தப்போகிறது நம் மத்திய அரசு.
இதனிடையே…. மத்திய அரசு நிர்வாகம் கடந்த காலத்தில் எடுத்த ஷரத்து 370 சட்ட வரையறை தீர்மானமத்தை விலக்கி கொண்ட பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது. மக்கள் வாக்களிக்க வந்தாலேயே போதும் இந்திய மத்திய அரசு தரப்பில் செயல்படுத்தப்பட்ட தீர்மானம் அங்கு உள்ள மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று அர்த்தம் வரும்…. சரியாக சொன்னால் அவர்களும் இந்திய பிரஜை என்கிற அந்தஸ்தை அதிகாரப் பூர்வமாக ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள் என்று அர்த்தமாகும்.
ஆக பாகிஸ்தானை தனது ராஜதந்திர நடவடிக்கைகளால் இந்தியா வெற்றிக் கொண்டுவிட்டது.
சரி….. நம் பக்கத்தில் சில குயுக்திவாதிகள் இருக்கிறார்கள் அல்லவா….. அவர்கள் கேட்பர்… ஒரு வேளை தேர்தல் நடைபெறவில்லை என்றால் என் செய்வது என்று…..
இந்த மொத்த விஷயத்தில் அது தான் மிகவும் நல்லது. தேர்தல் நடத்த விடாமல் யாரேனும்… எவரேனும்… காய் நகர்த்தினால்….. மத்திய அரசு நிர்வாகம் நேரிடையாகவே இந்த பிராந்தியத்தில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள இன்னும் வசதியாக இருக்கும். அதாவது நம் மத்திய அரசு பிரகடனம் செய்த லடாக் பகுதியில் தான் மேற்படி இடங்கள் அனைத்துமே வருகிறது சட்டபடி. ஆகையால் அதனை மீட்க இந்திய அரசு முயன்றால் அது சர்வதேச நீதிமன்ற நடவடிக்கைகளின் சட்ட ரீதியிலான நடவடிக்கை. எந்த ஒரு விசாரணைக்கு பதில் சொல்ல வேண்டியது இல்லை. அப்படி ஒரு சட்டவரைவு இந்தியாவுக்கு சாதகமாக இருக்கிறது.
இல்லை என்றால் இன்னேரம் பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும்…… ஆனால் செய்யவில்லை காரணம் இது அவர்களின் இடம் என்று எங்குமே பாகிஸ்தானில் பதிவாகவில்லை.
இது அவர்களது ஜின்னா காலத்திய பச்சோந்தி தனமான செயல்.அதாவது இந்த பிராந்தியத்தில் காஷ்மீர் தனி அந்தஸ்து கொண்ட நாடாகவே சர்வதேச அரங்கில் இத்தனை நாளும் பொய் சொல்லி ஏமாற்றி கொண்டு வருகிறார்கள். இதற்கு அவர்களின் சட்டவரைவே சாட்சி.
இந்த இடத்தில் தான் ஆணி வைத்து அடித்து இருக்கிறார்கள் நம்மவர்கள்.
பாகிஸ்தான் அரசு தேர்தல் நடத்தவில்லை அவர்கள் வசம் உள்ள இந்த காஷ்மீர் பகுதியில்……. அது தான் அவர்களின் தற்போதைய வாதம்.
ஆச்சா….
ஆக அங்கு நடக்கும் தேர்தல் என்பது அந்த பிராந்தியத்தில்….. அந்த காஷ்மீர் பகுதியை சேர்ந்த மக்களால் நடத்தப்படும் ஜனநாயக நெறிமுறை…… அப்படி தான் வெளிப் பார்வைக்கு சொல்லி கொண்டு இருக்கிறார்கள் பாகிஸ்தானியர்கள்.
ஆக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் இந்திய வசம் உள்ள காஷ்மீர் பகுதியில் இனிமேல் நடக்கும்…… தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சியோடு கூட்டு சேர்ந்தால் விஷயம் அத்தோடு முடிந்தது.
அநேகமாக தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டு இருப்பார்கள் பாகிஸ்தானிய மேல் மட்ட அரசியல் வியாதிகள்.
தேர்தல் நடக்காமல் போனால் பாகிஸ்தான் தான் அதை செய்தது என்கிற விஷயம் அதிகார பூர்வமாக வெளி உலகிற்கு தெரிந்து போகும். ஆக அந்த வகையில் பாகிஸ்தான் வசம் தான் அந்த பகுதிகள் இருக்கின்றன என்பதை நிரூபணம் ஆகி விடும். சட்டரீதியாக இந்திய அரசு பாகிஸ்தான் மீது தனது பிராந்தியத்தில் ஆக்ரமிப்பில் ஈடுபட்டு உள்ளது என்று போர் பிரகடனம் செய்ய முடியும்.
எத்தனை நுட்பமான வலைப்பின்னல் இது உலகின் சட்ட வல்லுநர்கள் ஆடிப் போய் இருக்கிறார்கள்…..
எதிரியை அவன் வைத்து இருக்கும் ஆயுதத்தை வைத்தே அடித்து விளையாட்டு காட்ட இந்தியா தயாராகி வருகிறது. இதில் மேலும் ஒரு லாபம் உண்டு. இப்படி செய்வதால்…. இத்தனை நாளும் ஆடிய ஆட்டத்திற்கு பாகிஸ்தானிடம் சட்டப்படி தண்டம் வசூலிக்க முடியும். ஒரு வழி பண்ணாமல் நம்மை விடப் போவதில்லை இந்தியா என இப்போதே ஊளையிட ஆரம்பித்து விட்டனர் பாகிஸ்தானிய அரசியல் மட்டத்தில்.
பாஸ்மதி அரிசி தங்கள் தேசத்திற்கு சொந்தம் என வழக்காடியவர்களுக்கு வாய்க்கு அரிசி போடவே இந்தியா இத்தனை நாளும் பொறுமையாக தயாராகி கொண்டு இருந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்கள்.
கத்தி இன்றி …… யுத்தம் என்றானாலும் சரி…. புத்தியோடு ஒதுங்கி நின்றாலும் சரி…. இதோ வந்துக்கொண்டே இருக்கிறோம் தயாராக இருங்கள் என்று இந்தியா சொல்லாமல் சொல்லி விட்டது. பார்க்கலாம் பாகிஸ்தான் என்ன செய்ய போகிறது என்று!