― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்உடல்நிலை சரியில்லைன்னா வெளிநாட்டு டாக்டர் கிட்டே ‘ஆலோசனை’ கேட்கலாம்; ஆனால்...?!

உடல்நிலை சரியில்லைன்னா வெளிநாட்டு டாக்டர் கிட்டே ‘ஆலோசனை’ கேட்கலாம்; ஆனால்…?!

- Advertisement -

உடம்பு சரியில்லைன்னா வெளிநாட்டு டாக்டர்கிட்டே எக்ஸ்பர்ட் ஒப்பீனியன் வாங்கலாம்… சிகிச்சை பெறலாம்… ஆனா, அரசு விவகாரங்கள்ல தலையிடும்படியா, பொருளாதார ஆலோசனைக் குழு என்று வைத்து, தமிழக அரசு வெளிநாட்டு நபர்களை உள்நுழைப்பது, ஆலோசனை கேட்பது இதெல்லாம் சரியா? சட்டம் அனுமதிக்கிறதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் சரி, அரசியல் ரீதியாகவும் சரி பல்வேறு கருத்துகள் முன்வைக்கப் படுகின்றன.


Dr P Thiaga Rajan (PTR) @ptrmadurai – “நல்லுள்ளம் கொண்ட திறமைமிக்க குழுவோடு பணியாற்றுவதை நல்வாய்ப்பாக கருதுகிறேன். சக உறுப்பினர்கள் யார் என்று கேட்காது தங்கள் பொறுப்பை ஏற்றனர் @mkstalin & நானும் நன்றியோடும், அவர்கள் முன்வைக்கும் ஆலோசனை, அரசு பரிந்துரைகள் மீதான கருத்துகளை ஏற்று செயல்படுவோம்…” என்று தனது டிவிட்டர் பதிவில் நன்றி தெரிவித்திருக்கிறார் மாநில நிதி அமைச்சர் பிடிஆர் தியாகராஜன்.


ஸ்டாலினுக்குப் பிரதமருடன் வெறும் எட்டு நிமிடங்களே அனுமதிகப்பட்ட நிலையிலும் அதற்கும் ஒத்துக்கொண்டு ஸ்டாலின் பிரதமரைச் சந்தித்ததில் ஆச்சரியப் பட்டவர்களுள் நானும் ஒருவன்.

சந்திப்பு முடிந்தவுடன் Cowin விவரங்களை வெளியிடக் கூடாது என்ற பிரதமர் அலுவலகத்தின் நிபந்தனையைத் திரித்து அரசியல் செய்தபோதே நேருவிய இடதுசாரிகளின் தோழமைக் கட்சியான திமுக மத்திய அரசுடனான உறவுகளில் தமிழகத்தை எந்த நிலையில் வைக்கும் என்பதைக் குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தேன்.

இதோ அடுத்த கட்ட மோடி எதிர்ப்பு அரசியலின் டூல்கிட் வெளியாகி உள்ளது. ரகுராம் ராஜன் உள்ளிட்ட பொருளாதார ஆலோசகர் குழுவின் நியமனத்தில் இருந்து ஆரம்பமாகிறது. இந்தப் பொருளாதாரப் புலிகளின் சித்தாந்தங்கள் மோடி அரசின் சித்தாந்தங்களுக்கு நேர்மறையானவை.

தேசிய அளவில் எடுக்கும் பொருளாதாரபம் தொடர்பான முடிவுகளை மத்திய அரசு மாநிலத்துக்கு மாநிலம் மாற்றிக் கொள்ளாது. இதில் மாநிலங்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாக இவர்கள் எதிர்ப்பார்கள். இந்த எதிர்ப்புக்கு நேருவிய இடதுசாரிகள், ஒரிஜினல் இடதுசாரிகள், மமதா, பினரயி, உத்தவ் போன்றவர்கள் ஆதரவு அளிப்பார்கள்.

பொருளாதாரம் தொடங்கி விலங்குகள் இனப் பெருக்கம் வரையிலான அனைத்துத் துறைகளுக்கும் ஒரு எக்ஸ்பர்ட் ஒபீனியன் வாங்கி வைத்துக் கொண்டு மோடி எதிர்ப்பு அரசியலை இவர்கள் செய்யப் போகிறார்கள். எதிர்ப்பாளர்கள்… மொத்தத்தில் மாட்டிக் கொண்டவர்கள் தமிழக மக்கள். மத்திய அரசின் எந்தத் திட்டமும் மத்திய அரசின் திட்டப்படி மக்களைச் சென்றடையாது. எதிர்ப்பு அரசியலில் மக்கள் நலம் பின்னுக்குத் தள்ளப்படும்.

||ஸ்டாலினுக்கு இரண்டு பொருளாதார ஆலோசனைக் குழுக்கள்.இந்த வீடியோவை ஒரு நிமிடம் கேட்கவும். ரகுராம்ராஜன் அரவிந்த் சுப்ரமணியம் பற்றி மிக நச்சுடன் ஜெயரஞ்சகன் பேசியது. என்ன புரிகிறதா? வலது இடது என்று எப்படி பாவம் திமுக tight rope balance செய்கிறது? @mkstalin @EPSTamilNadu @sgurumurthy || ~ R. Rajagopalan.
ஆர். ராஜகோபாலன்


சமீபத்தில் தமிழக கொள்கை வளர்ச்சிக் குழுவின் துணை தலைவராக நியமிக்கப்பட்ட ஜெயரஞ்சன் என்ற பொருளாதார வல்லுநர்(?), நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குப் பொருளாதார ஆலோசனைகள் வழங்க நியமிக்கப்பட்டுள்ள ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியம் போன்றோர் குறித்து கண்ணியமற்ற, தரம் தாழ்ந்த முறையில் விமர்சிக்கும் காணொளி இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.முரண்பாடான கருத்துக்களை கொண்டிருப்பதில் தவறில்லை. ஆனால், தரம்தாழ்ந்த வார்த்தைகளை கொண்டு தனி நபர் விமர்சனம் செய்பவர்களுக்கு மிக பெரிய பொறுப்புகளை கொடுப்பதன் மூலம் என்ன கொள்கைகளை தமிழக அரசு வகுக்க முடியும்?
தமிழக முதல்வர் சிந்தித்து செயல்படுவாரா?
– நாராயணன் திருப்பதி.


தற்போது சட்டமன்றத்துக்கு வெளியே சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி தமது டிவிட்டர் பதில் எழுப்பியிருக்கும் கேள்விகள்…

இலவசங்களை அள்ளி வீசி, ஆசையைத் தூண்டி; வறுமையில் தவிக்கும் மக்களை நூறுக்கும் ஐநூறுக்கும் விலைக்கு வாங்கி வெற்றி பெறுவது தானே திராவிட சித்தாந்தத்தின் மந்திரம்?

தமிழர்களின் அறியாமையின் மீதும் இயலாமையின் மீதும் தானே திராவிட பொருளாதார கோட்பாடும் சமூக நீதியும் கட்டியமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 வருடமாக நல்ல திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போட்ட இவர்களிடத்தில் உலக பொருளாதார நிபுணர்கள் வேறு என்ன புதிய திட்டங்களைத் தந்து விடப் போகிறார்கள்?

அல்லது அவர்கள் நல்ல திட்டங்களைத் தந்தாலும் இவர்கள் ஏற்றுக் கொண்டு முறையாக நடைமுறைப்படுத்தப் போகிறார்களா?-

திமுக அரசிற்கு நிதிப்பற்றாக்குறை மட்டும் அல்ல, செயல் ஆக்கத்திற்கான சிந்தனை பற்றாக்குறையும் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது!

கொடுத்த முக்கிய வாக்குறுதி ஒன்று கூட நிறைவேற்றப் படவில்லை. குழுக்கள் மேல் குழுக்கள் மட்டும் போட்டு மக்களை குழப்பிக்கொண்டு இருக்கிறார் குழு முதல்வர்! @DrKrishnasamy Shyam Krishnasamy @DrShyamKK

அரசு உயர் பொறுப்புக்கு அந்நிய நாட்டு பிரஜை நியமிக்கப்பட முடியுமா ? ரகசிய காப்பு பிரமாணம் எடுத்தவர்களை தவிர வேறொருவர் அரசின் ரகசிய ஆவணங்களை பார்க்க அனுமதிப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாதா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் பாஜக.,வின் கே.டி.ராகவன்.

இந்த விவகாரம் இப்போது தமிழக அரசியலில் சூடு பிடித்திருக்கிறது. அதுபோல், ஜெயரஞ்சனின் கருத்தும் கடும் புயலைக் கிளப்பியுள்ளது.


ஜெயரஞ்சன் அவர்கள் வளர்ச்சிக் குழுவில் நியமிக்கப்பட்டதும் திராவிட அரைகுறைகள் சாமியாட்டம் ஆடினார்கள். எந்த வெட்கமும் ஆதாரமும் இல்லாமல் ஜெயரஞ்சன் ஏதோ வாராது போல் வந்த பொருளாதார மேதை என்று கொண்டாடினார்கள். பெரியாரையே மாமேதை என்று சொல்லும் கூட்டத்திலிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது என்று தெரிந்தாலும் ஏதும் சொல்ல வேண்டாம் என்று பேசாமல் இருந்தேன். ஆனால் ஜெயரஞ்சன் முழு பிராமண வெறுப்பில் உளறியிருப்பதைப் பார்க்கும் போது அவரைப் பற்றி மேலும் தகவல்களைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

எச் இன்டெக்ஸ் என்று ஒன்று இருக்கிறது. இது அறிவாலயத்தில் இருந்து வரும் இன்டெக்ஸ் அல்ல. ஆராய்ச்சியாளர்களின் இன்டெக்ஸ். ஆராய்ச்சி உலகத்தில் அறிஞர்களின் மதிப்பு என்ன என்பதை அளவீடு செய்யும் இன்டெக்ஸ்.
இது செய்திருக்கும் அளவீடு:

ரகுராம் ராஜன் 80 -கூகிள் ஸ்காலர்
எஸ்தர் டஃப்லோ 78 -கூகிள் ஸ்காலர்
அரவிந்த் சுப்ரமணியன் 58 -கூகிள் ஸ்காலர்.
ழான் ட்ரெஜ் 45- ஸெமான்டிக் ஸ்காலர்
ஜெயரஞ்சன் 5 ஸெமான்டிக் ஸ்காலர்
இதுதான் ஜெயரஞ்சனுக்கு சர்வதேச அளவில் மதிப்பு.

முதலாளித்துவ உலகில் அளவீடுகள் இப்படித்தான் இருக்கும் என்று மார்க்சியவாதிகள் சொல்லலாம். ஆனால் ஜெயரஞ்சன் மார்க்சியவாதியைப் போலவா பேசுகிறார்? மூன்றாம்தர திராவிடர் கழகப் பரப்புரையாளர் போலத்தான் ஹிட்லரிய இனவெறியோடு பேசுகிறார். மேலும் கம்யூனிஸ்டுகளின் இதழான தீக்கதிர் முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களை திரு ஸ்டாலின் சேர்த்திருப்பதைக் குறித்து எந்த விமரிசனமும் செய்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

சொல்லப்போனால் இந்நியமனங்களைப் பற்றி மார்க்சிய நோக்கில் எந்த விமரிசனமும் என் கண்ணில் படவில்லை. கம்யூனிஸ்டுகள் குறுங்குழு இனவாதம் பேசுபவர்களின் அடியாட்களாகச் செயற்பட்டால் வாயை மூடிக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை.
– அனந்தகிருஷ்ணன் பக்‌ஷிராஜன்


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version