விஜயபதம் – வேத மொழியின் வெற்றி வழிகள் -17
(சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)
தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் ராஜி ரகுநாதன்
17. Talent Management
நல்லவர்களைக் கவர வேண்டும்
ஒரு பெரிய மாநிலம். அங்கு 20 ஆண்டுகளாக ஒரு தேசிய கட்சி அரசாளுகிறது. தேர்தல் வந்தது. மற்றுமொரு தேசிய கட்சி நல்ல போட்டி கொடுத்தது. ஒரு இளைய தலைவரை களத்தில் இறக்கியது. வெற்றி பெற்றது. அவர்தான் முதலைச்சராக வேண்டும் என்று அனைவரும் விரும்பினர். அந்த இளந்தலைவர் கூட ஆசைபட்டார். தலைமை நன்றியைக் காட்டவில்லை. வேறொருவரை முதலமைச்சராக்கியது. பின்னர் அந்த இளைஞர் வேறொரு தேசிய கட்சியில் சென்று சேர்ந்தார்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேசிய கட்சி (ஏ) வைச் சேர்ந்த மாநில இளைஞர் தன் தேசிய தலைவரைச் சந்திப்பதற்கு அவருடைய இல்லத்திற்குச் சென்றார். பல முக்கிய விஷயங்கள் குறித்து கலந்து பேச வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறவில்லை. வளர்ப்பு நாயோடு விளையாடிக் கொண்டு பிஸ்கட் ஊட்டியபடி இருந்த அந்த தேசிய தலைவர், வந்த மனிதருக்கும் அதே பிஸ்கட்டை கொடுக்க முனைந்தாராம். மதித்துப் பேசவில்லை. எதற்காக வந்திருக்கிறார் என்று ஆர்வத்தோடு கேட்டகவில்லை. பின் என்ன நடந்தது? அந்த அவமானத்தைப் பொறுக்க முடியாமல் அந்த மாநிலத் தலைவர் வேறொரு தேசிய கட்சியிடம் (பி) சென்றார். அந்தக் கட்சி அவரைத் தம்மோடு சேர்த்துக் கொண்டது. வெற்றி பெற்றது.
தேவைகளை அடையாளம் காண வேண்டும்:-
தலைவனுக்கு நாற்புறமும் கண்களிருக்க வேண்டும் என்பார்கள். சுற்றிலும் நடக்கும் விஷயங்களை ஆராய்ந்து பார்க்கும் அறிவும் புத்திசாலித்தனமும் வெற்றியைக் கோருபவருக்குத் தேவை. பல்வேறு துறைகளில் யார் யார் இருக்கிறார்கள்? அவர்களின் திறமை, சாமர்த்தியம், செயல் நேர்த்தி எந்த நிலையில் உள்ளது? அப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு தம் குழுவில், தம் அரசியல் கட்சியில், தம் வணிகச் செயல் முறைகளில் அவர்களை கூட்டாளராக சேர்த்துக் கொள்வதன் மூலம் சமூக நலன், முக்கியமாகத் தம் நிறுவனத்திற்கு நன்மை விளைவதற்கு தலைவன் முயற்சிக்க வேண்டும். அப்படிபட்ட திறமைசாலிகளை பயன்படுத்திக் கொள்வது தலைவனின் சிறந்த குணம். தலைவன் ஈர்த்து சேர்த்துக் கொள்ளும் மனிதர் அவருடைய நிறுவனத்தில் பெரிதாக பெயரெடுப்பவராக இல்லாமல் இருக்கலாம். அல்லது எதிர்கட்சியில் கூட இருக்கலாம். அவருடைய திறமையின் சிறப்புகள் என்ன? அவருடைய பலவீனங்கள் என்ன? இப்படிப்பட்ட விஷயங்களை தலைவன் கவனித்துக் கொண்டே இருக்கவேண்டும்.
மார்க்கெட்டிங் தொழிலில் உள்ள தலைவர்கள் தம் போட்டிக் கம்பெனியில் உள்ள மனிதர்களையும் அவர்களுடைய செயல்களையும் கூர்ந்து கவனித்துவர வேண்டும். அதில் தன் நிறுவனத்துக்குத் தேவையானவர்களை தன் பக்கம் திருப்பிக் கொள்ள வேண்டும்.
‘காமந்தக நீதி’ சாஸ்திரத்தில் சாமர்த்தியம் மிக்க தலைமை பற்றி கவி இந்த யோசனைகளை பரிந்துரைக்கிறார்…
அலப்தவேதனோ லுப்தோ மாநீ சாப்யவமானித:
க்ருத்தஸ்ச கோபிதோ கஸ்மாத் ததா பீதாஸ்ச பீஷித:
யதாபிலஷிதை: காமை: பிந்த்யாதேதாம் ஸ்சதுர்விதான் !!
(காமந்தக நீதி சாஸ்திரம்)
பொருள்:-
போட்டிக் கம்பெனியில் சம்பளம் சரியாகக் கிடைக்காமல் அதிருப்தியில் இருப்பவர்
எஜமானரால் அவமதிக்கபட்ட தன்மானமுள்ளவர்கள், புத்திசாலிகள்
காரணமின்றி எஜமானரின் கோபத்திற்கு ஆளானவர்கள்
எஜமானரின் மிரட்டலுக்கு உள்ளானவர்கள், நற்குணம் கொண்டவர்கள்
-இந்த நான்கு வகையானவர்களை ஈர்த்து தனக்குத் தேவையானவரைத் தன் பக்கத்திற்கு இழுத்துக் கொள்ள தலைவன் முயற்சிக்க வேண்டும்.
தம் நிறுவனத்தில் உள்ளவர்களை கவனித்து அவர்களுக்குச் சரியான பணியுயர்வு அளிக்க வேண்டும். போட்டிக் கம்பெனியில் உள்ள திறமையாளர்களையும் தம் பக்கம் ஈர்க்க வேண்டும். அரசியல்துறைக்கும் பிற சமூகத் துறைகளுக்கும் கூட பொருந்தும் வெற்றிச் சூத்திரங்கள் இவை.
அதிருப்தி உள்ளவர்களை திருப்திப்படுத்தி தம்மோடு சேர்த்துக் கொண்டு தம் இலக்கை சாதித்துக் கொள்வது தீர்க்கதரிசியான தலைவனின் குணம். முக்கியமாக அரசியல் கட்சிகளோ மார்கெடிங் கம்பெனிகளோ அதிருப்தியாளர்களை திருப்திபடுத்துவதில் திறமையோடு விளங்க வேண்டும்.
“யாரும் வேண்டுமென்றே வேலையை மாற்ற மாட்டார்கள். தங்கள் பாஸ்களை, தலைவர்களை, எஜமானர்களை மாற்றுவார்கள்” என்பது ஒரு பழமொழி. People never change their jobs. But they change their bosses. அதனால் யுக்தி உள்ள தலைவன் ஊழியர்களை இழக்க வேண்டாம் என்கிறது இந்த சுலோகம். இன்கிரிமென்ட், பிரமோஷம் விரும்புபவர்களிடம் ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
சுபம்!
உண்மை. கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை இந்த சூத்திரங்கள்.