விஜயபதம் – வேத மொழியின் வெற்றி வழிகள் -28
(சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)
தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
Team Building
ருக்வேதம் கூறும் வெற்றிக்கான ரகசியம்!
ஒன்றிணைந்து பணி புரியும் வழிமுறையை வளர்த்துக் கொள்ளும்படி கூறும் மந்திரங்கள் ருக் வேதத்தில் பல உளளன. பத்தாவது மண்டலத்திலுள்ள 191வது சூக்தத்தில் இந்த மந்திரங்களை ஜகமத்ய சூக்தம், சாமனஸ்ய சூக்தம், சம்ஞான சூக்தம் என்ற பெயர்களில் குறிப்பிடுவர் அனைத்துயிர்களிலும் ஒற்றுமையை ஏற்படுத்துவது இந்த மந்திர உச்சாரணையின் லட்சியம். ஒரு குழுவாக சேர்ந்து சாதிக்க நினைபப்வர்களை உத்தேசித்துக் கூறிய போதனையாகவும் இதனை ஏற்கலாம்
பல நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், வணிக அமைப்புகள்… இன்று தோன்றி நாளை மறைந்துவிடும் நிலையில் இருப்பதைப் பார்க்கிறோம். அதற்கான காரணங்கள் பல. குழுவில் இருக்கும் உறுப்பினர்களின் சிந்தனை ஒரே லட்சியத்தை நோக்கி இல்லாமலிருப்பது, அவர்களின் உள்ளம் ஒன்றுபடாமலிருப்பது,. நிறுவத்தின் வளர்ச்சி தம் அனைவரின் பொறுப்பு என்பதை உணராமலிருபப்து… இந்த மூன்று காரணங்களால் நினைத்த இலக்கை அடைய முடியாமல் போகும்.
சட்டப் பேரவையில் உறுப்பினர்கள் சண்டையிட்டுக் கொண்டாலும் வணிக நிறுவனங்களில் பார்ட்னர்களிடையே மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து போனாலும் அதற்குக் காரணம் இந்த ருக்வேத மந்திரத்தின் கருத்தைக் கடைபிடியாமல் போவதே!
அதனால் ஒற்றுமையைக் கூறும் இந்த மந்திரத்தின் உள்ளத்தைப் புரிந்து கொண்டு, ஆதரவாளர்களின் உதவியோடு வெற்றியை தலைவன் சாதித்தடைய முயற்சிக்க வேண்டும். அந்த ஒற்றுமை ரகசியம் இதோ…
சங்கச்சத்வம் சம்வதத்வம் சம்வோ மனாம்சி ஜானதாம் !
தேவா பாகம் யதாபூர்வே சஜ்ஜானானா உபாசதே !!
சமானோ மந்த்ர: சமிதி: சமாநீ சமானம் மன: சஹ சித்த மேஷாம் !
சமானம் மந்த்ரமபிமந்த்ரயே வ: சமானேன வோ ஹவிஷா ஜூஹூமி !!
சமாநீ வ ஆகூதி: சமானா ஹ்ருதயானி வ: !
சமானமஸ்து வோ மனோ யதா வ: ஸுஸஹாஸதி !!
ஓம் சாந்தி: சாந்திஸ்சாந்தி:
பொருள்:- ஒருவரையொருவர் சந்தித்தபடி இருங்கள். பேசிக் கொள்ளுங்கள். உங்கள் மனதில் உள்ள யோசனைகள் அனைத்தும் ஒன்றுபோல் இருக்க வேண்டும். முன்பு தேவர்களனைவரும் எவ்விதம் ஒற்றுமையோடு இருந்தார்களோ அதே போல் இருந்து அவரவர் பங்கை அவரவர் அனுபவியுங்கள். உங்கள் அனைவரின் இலக்கும் ஒன்றாக இருக்க வேண்டும். சிந்தனை ஒன்றாக விளங்க வேண்டும். உங்களைவருக்கும் பயன்படும் இலக்கை உங்கள் முன் வைக்கிறேன். உங்களைவருக்கும் தொடர்புடைய ஹோம திரவியங்களால் ஹோமம் செய்கிறேன். உங்கள் மனங்கள் ஒரே விதமாக இருந்து நீங்களனைவரும் சுகமாக இருப்பீராக!
- பஞ்சாங்கம் அக்.03 – செவ்வாய்| இன்றைய ராசி பலன்கள்!
- நம்ம சென்னை சுற்றுலா: திருப்போரூர் கந்தசாமி கோயில்!
- காந்தி சிலைக்கு கதராடை, சந்தனமாலை அணிவித்து, தூய்மைப் பணி செய்த பாஜக.,வினர்!
இதற்கான நவீன கால விளக்கம்:-
மேற்கூறிய மந்திரங்களின் சாராம்சம் எம்பிஏ போன்ற மேனேஜ்மென்ட் கோர்ஸுகளில் Team Management, Coherent leadership போன்ற பல பெயர்களில் கற்பிக்கப்படுகிறது.
அடுத்து, மேற்சொன்ன மந்திரங்களின் கருத்து நாம் தற்போது அடிக்கடி உபயோகிக்கும் ஆங்கிலப் பதங்களில் எவ்விதம் உள்ளது என்பதைப் பார்ப்போம்…
*Righteous conduct – ஒற்றுமையாக தர்ம வழியில் நடங்கள்!
*Clarity of Expression – ஒரே குரலில் பேசுங்கள்!
*Unity of thought – ஒன்று போல் சிந்தியுங்கள்!
*Progressive Partnership –தேவர்களைப் போல் பாகஸ்தர்களோடு நடந்துகொள்ளுங்கள்!
*Clarity of Intent – மனப்பூர்வமாக உள்ளத் தூய்மையோடு சேர்ந்து பணிபுரியுங்கள்!
*Collective Commitment – இலக்கை அடைவதில் ஒரே அபிப்பிராயம் கொண்டிருங்கள்
*Cordial Relationship – நல்ல உள்ளத்தோடு சமமான எண்ணம் கொண்டு வாழுங்கள்
*Unity of Action – ஒரே கருத்தோடும் உறுதியோடும் காரிய சாதனை பெறுங்கள்
*Victory of Right path – தர்ம வழியில் நடந்து வெற்றிப் பாதையை பரஸ்பர உதவியோடு சாதிப்பீர்களாக!
சுபம்!