Homeகட்டுரைகள்இலங்கை சிறையில் வாடிய தமிழக மீனவர்கள் விடுவிப்பு: மத்திய அரசுக்கு அண்ணாமலை நன்றி!

இலங்கை சிறையில் வாடிய தமிழக மீனவர்கள் விடுவிப்பு: மத்திய அரசுக்கு அண்ணாமலை நன்றி!

என்னுடைய பயணத்திற்கு முறை பயணத்திற்கு ஈடான ஊடக வெளிச்சம் தந்த பத்திரிக்கை தொலைக்காட்சி நண்பர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக்

srilanka prison jaffna - Dhinasari Tamil

-K. அண்ணாமலை (தமிழ் மாநிலத் தலைவர், பாஜக.,)

பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் பயணத்தில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு என்னுடைய இலங்கை பயணம் தமிழக அரசு சார்பில் இல்லாமலும், இந்திய அரசு சார்பு இல்லாமல் தனிப்பட்ட முறையில் சில முக்கிய விடயங்களுக்காக நான் மேற்கொண்ட இந்த பயணம் உண்மையிலேயே மிக வெற்றிகரமாக அமைந்தது.

என்னுடைய பயணத்திற்கு முறை பயணத்திற்கு ஈடான ஊடக வெளிச்சம் தந்த பத்திரிக்கை தொலைக்காட்சி நண்பர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில் வடகிழக்குப் பகுதியில் உள்ள தமிழர்களின் நிலையும் அறிந்துகொள்ள என்னுடை பயணம் உதவிகரமாக இருந்தது

அறைக்குள் அமர்ந்து கொண்டு அயலகத் தமிழர்களின் அல்லல்களை ஆராய்வதை விட கண் கூடாகக் கண்டு திரும்பியது எனக்குள் மிகப்பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது.

இலங்கையில் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த மீனவர்களையும் நான் சந்தித்து திரும்பி இருந்தேன். அவர்களை மீட்பதற்கு இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று அவர்களுக்கு ஆறுதல் மொழிகள் கூறி வந்தேன்.

இலங்கைப் பயணம் குறித்த என்னுடைய விரிவான அறிக்கையை கட்சியின் உயர்மட்ட தலைவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அதிலே விடுதலை கிடைக்காமல் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் விடுதலை குறித்தும் விரிவாக கூறியிருந்தேன். இந்திய அரசும் துரிதமாக செயல்பட்டு உடனடியாக அந்த மீனவர்களின் விடு­த­லைக்கு ஏற்­பா­டு செய்து நாடு திரும்ப நடவடிக்கை எடுத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

எந்த சிக்கலாக இருந்தாலும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதிலிருந்து விலகிச் செல்லாமல் அணுக்கத்தில் சென்று ஆராய்ந்து பார்க்கும்போது தீர்வுகள் தீர்க்கமாக புலப்படும்.

இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிக்கலான சூழலிலும் மீனவர்களுக்கு கிடைத்திருக்கும் இந்த விடுதலை நமது வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்று தான் நான் குறிப்பிட வேண்டும்.

இந்திய ராஜ தந்திர உறவுகளுக்கும் வெளியுறவு கொள்கைகளுக்கும் கிடைத்திருக்கும் இந்த வெற்றியின் மூலம் தமிழக மக்களையும் தமிழக மீனவர்களையும் மத்திய அரசு எத்துணை அக்கறையாக, எத்துணைக் கவனமாக, எத்துணைக் கரிசனமாக கையாளுகிறது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கை பல்வேறு வகையான சிக்கல்களில் சிக்கியிருக்கும் இந்த வேளையில், சரியான நேரத்தில் எடுத்த துல்லியமான, துரிதமான திட்டமிடலுக்காகவும் நடவடிக்கைகளுக்காகவும் மத்திய அரசை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இலங்கையில் சிக்கியிருந்த தமிழக மீனவர்களை சட்ட சிக்கல் இல்லாமல் முயற்சி எடுப்பதில் தீவிர முனைப்பு காட்டி வெற்றிகரமான விடுதலைக்கு செய்த மாண்புமிகு மத்திய மீன் வளத்துறை இணை அமைச்சர் திரு முருகன் அவர்களுக்கும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்படும்போதெல்லாம் தன்னுடைய உறவுகளும் சொந்தங்களும் பாதிக்கப்பட்டார் போல, உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை அரசு ரீதியாக முன்னெடுக்கும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திரு முரளிதரன் அவர்களுக்கும், தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிட்டு, இந்திய அரசின் வெளியுறவு கொள்கைகளை வெற்றிகரமாக வடிவமைத்து, வெளிநாட்டுப் உறவுகளில் வித்தகம் காட்டி, சட்டரீதியான மீட்பு நடவடிக்கைக்கு வித்திட்ட வித்திட்ட மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.ஜெய்சங்கர் அவர்களுக்கும், நம் நாட்டின் கடைக்கோடி குடிமகனின், நலத்திற்காக நாளெல்லாம் திட்டமிட்டு ஓயாது உழைக்கும் நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக மக்களின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,140FansLike
376FollowersFollow
65FollowersFollow
74FollowersFollow
2,819FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...

Exit mobile version