― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்காசி தமிழ் சங்கமம்: வடக்கு தெற்கை இணைக்கும் கலாச்சார சங்கமம்!

காசி தமிழ் சங்கமம்: வடக்கு தெற்கை இணைக்கும் கலாச்சார சங்கமம்!

- Advertisement -

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

நவம்பர் 19, 2022 அன்று தொடங்கிய காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோதி அவர்களின் உரையையும் உத்திரபிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களின் உரையையும் மேடையிலேயே மொழி பெயர்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் நானும் பங்கு கொண்டேன் என்ற பெருமையில் நான் சில நாட்கள் தரையில் நடக்கவில்லை. அவ்வளவு பெருமை.

இந்த ஒரு மாத நிகழ்ச்சி பிரதமர் அவர்களால் திட்டமிடப்பட்டு, மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. உத்திரபிரதேச மாநில அரசு, காசி இந்துப் பல்கலைக்கழகம், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம், மத்திய அரசின் பல்வேறு துறைகள் இதில் இணைந்து பணியாற்றுகின்றன.

யோகி அவர்களின் அரசு

உத்திரபிரதேச அரசு காசியில், பிராயாக்ராஜில், அயோத்தியில் தமிழகத்திலிருந்து வருகின்ற விருந்தினர்களுக்குத் தேவையான அத்தனை ஏற்பாடுகளையும் செய்திருந்தது. சரியான நேரத்திற்கு விருந்தினர்களை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்ல எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. போக்குவரத்தினால் தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

I.I.T மெட்ராஸ் ஆற்றிய அருந்தொண்டு

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் தமிழகத்திலிருந்து காசி செல்லும் விருந்தினர்களை தேர்வு செய்து அனுப்பும் பணியில் ஈடுபட்டது. 210 பேர் கொண்ட 12 குழுக்கள் அனுப்படவுள்ளனர். இவர்களின் தேர்வு இணையம் மூலம் எந்த வித சிபாரிசும் இல்லாமல் செய்யப்பட்டது. பல பெரிய மனிதர்கள் தங்களை அனுப்பிவைக்குமாறு கோரியும், அவர்களை இணையம் மூலமாக விண்ணப்பியுங்கள் எனச் சொல்லப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ரூ 1500 முன் பணமாகச் செலுத்தவேண்டும் எனச் சொல்லப்பட்டது. இது ஏனென்றால், இரயில் பயணத்தில் பயணச்சீட்டு ரிசர்வ் செய்தபின்னர் பயணத்தை யாரும் ரத்து செய்யக்கூடாது என்பதற்காக. வெற்றிகரமாகப் பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய பின்னர் அவர்களுக்கு ரூ 1500 இணையம் மூலமாகவே திருப்பி செலுத்தப்பட்டது.

IRCTCஇன் விருந்தோம்பல்

IRCTC, இங்கிருந்து காசி, மீண்டும் சென்னை திரும்பிவர இரயில் கட்டணம், பயணம் முழுவதற்குமான அதாவது இரயிலில், காசியில், பிராயாக் ராஜில், அயோத்தியாவில் உணவு, காசியில் பயணிக்க, கசியிலிருந்து பிரயாக்ராஜ்-அயொத்யா சென்று வர பேருந்துகள், விருந்தினர்கள் தங்கும் அறைகள் அனைத்தும் ஏற்பாடு செய்தது. காசியில் கங்கையில் பயணம் செய்ய ஒரு இரண்டடுக்கு உல்லாசப் படகு ஏற்பாடு செய்திருக்கிறது. பிராயாக்ராஜில் கங்கை-யமுனை சங்கமத்திற்குச் செல்ல படகு ஏற்பாடு செய்திருந்தது.

வாராணசி கலெக்டர்

உத்திரபிரதேச அரசு விருந்தினர்களை காசி இரயில்வே நிலையத்தில் இறங்கியதில் இருந்து அவர்களை மீண்டும் காசி இரயில் நிலையத்தில் இரயிலேறிவிடும் வரையில் அவர்களை வரவேற்றல், காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம், போக்குவரத்தைக் கண்காணித்தல் ஆகியவற்றைச் செய்தது. வாராணாசி மாவட்ட ஆட்சியர் திரு இராஜலிங்கம் தெங்காசியைச் சேர்ந்தவர். எனவே அவர் இதில் சிறப்புக் கவனம் எடுத்துக்கொண்டார்.

காசி இந்துப் பல்கலைக்கழகம்

காசி இந்து பல்கலைக்கழகம் தன்னுடைய வளாகத்தில் ஒரு பெரிய மைதானத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இங்குதான் தொடக்க விழா நடந்தது. காசியைச் சேர்ந்தவர்கள் உள்பட சுமார் 5000 பேர் அமர்ந்து பார்க்கும் வண்ணம் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இங்கே தமிழகக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம் ஒரு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சுமார் 50 கடைகள் இக்கண்காட்சியில் திறக்கப்பட்டுள்ளன. இந்த மைதானத்தில் ஒவ்வொரு குழுவும் ஒருநாள் மாலையில் ஒரு கலாச்சார நிகழ்ச்சியைக் காணலாம்.

காசி விஸ்வநாதர் ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலயப் பெருவழி வழியாக கங்கை நதிக்கரை வரை செல்லுதல், அன்னபூரணி ஆலயம், விசாலாக்ஷி ஆலயம், கங்கா ஆர்த்தி, உல்லாசப் படகில் பயணம் இவை ஒருநாள் நிகழ்ச்சிகள். அடுத்தநாள் கங்கையில் நீராடல், பாரதியார் வீடு, காமகோடீஸ்வரர் ஆலயம், காலபைரவர் ஆல்யம் தரிசனம், சாரநாத் பயணம் ஆகியவை காலையிலும் மாலையில் காசி இந்து பல்கலைக்கழகத்தில் சிறப்பு நிகழ்ச்சி. இவை அனைத்திற்கும் சென்று வர மிக அருமையான தாழ்தளப் பேருந்துகள்.

அதன் பின்னர் பேருந்தில் பிரயாக்ராஜ் எனப்படும் அலஹாபாத் ஒருநாள், அங்கிருந்து அயோத்யா ஒரு நாள் பயணம். அன்று இரவே காசி திரும்பி மீண்டும் சென்னைக்கு இரயிலில் பயணம்.

காசிக்கும் தமிழகத்திற்கும் உள்ள உறவினை தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்கள் புரிந்துகொள்ள பிரதமரின் அற்புதமான திட்டம். இதில் த்மிழக அரசும் இணைந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அந்தக் குறையை பாரதீய ஜனதா கட்சியினர் பூர்த்தி செய்துவிட்டனர்.

டிசம்பர் 16ஆம் தேதிவரை இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ளதால் இனி பயணம் செல்பவர்கள், குளிர் தாங்கும் உடைகளை எடுத்துச் செல்லுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version