- Ads -
Home கட்டுரைகள் வரவிருக்கும் வெற்றிகள் பாரத தேசத்துடையவையே!

வரவிருக்கும் வெற்றிகள் பாரத தேசத்துடையவையே!

தேசம் தன் வழியில் தான் முன்னேறிச் சென்றால், இருபதாம் நூற்றாண்டு நாகரிகம் சும்மாயிருக்காது” என்றார் ஒரு கவிஞர். இருபத்தொன்றாம்

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

“ஒரு தேசம் தன் வழியில் தான் முன்னேறிச் சென்றால், இருபதாம் நூற்றாண்டு நாகரிகம் சும்மாயிருக்காது” என்றார் ஒரு கவிஞர். இருபத்தொன்றாம் நூற்றாண்டின் நாகரிகமும் அதேபோல்தான் இருக்கிறது. வளர்ந்த நாடுகளின் அகம்பாவம், பிற தேசங்களின் வளர்ச்சியைப் பொறுப்பதில்லை. பொறாமையோடு கொடூரமான செயல்களைச் செய்வது வரலாறாக உள்ளது.

அண்மையில், பங்களாதேஷில் நடந்த வன்முறைகளும், அங்கிருந்த ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நாட்டை விட்டே ஓடியதும் உலகறிந்த செய்தி. அத்தகைய அக்கிரமங்களுக்கு, வளர்ந்த நாடுகளின் தலையீடே முக்கிய காரணம் என்று அந்நாட்டு பிரதமரே அறிவித்த செய்தியும் உலகம் அறிந்ததே!

கடினமான சூழ்நிலைகளையும் திறமையோடு சமாளித்து, தேசத்தை அனைத்து விதத்திலும் முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்லும் பாரத தேசத்தின் தலைமையின் மீது கொண்ட பொறாமையால், கையாலாகாத கோபத்தோடும், பாரத தேசத்தின் வளர்ச்சியைத் தாங்க இயலாத வெறுப்போடும், இந்த நிலையான தமைமையை, திறமையான பாரதத்தை, தற்சார்பு மிகுந்த தேசத்தை, சுயமான செழிப்பை, தலைகீழாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வெளிநாடுகள் செய்து வரும் சதித்திட்டங்கள் இப்போது தான் பொது மக்களுக்குத் தெளிவாகப் புரிந்து வருகிறது.

அந்நிய நாட்டுத் தீய வியூகங்களில் முக்கிய பங்கு வகிக்கும் ஊழல் தலைவர்கள், தம் அதிகார தாகத்தை தீர்த்துக் கொள்வதற்காக சதிகாரர்களோடு கை கோர்த்து, அவர் கையில் பொம்மலாட்ட பொம்மைகளாக, அவர்கள் ஏற்படுத்திய திட்டங்களின்படி ஜாதிவாரி கணக்கெடுப்பு, ஹிந்து அல்லாத மதங்களை சமதானப்படுத்துதல், தேசிய வெறுப்பு போன்ற கோஷங்களோடு கூத்தாடினார்கள்.

பாரத தேசத்தில் குல, மத வேறுபாடின்றி, ஒவ்வொரு குடிமகனுடைய நலனுக்காகவும், அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்காகவும் எடுத்த சிஏஏ, அக்னிவீர் போன்ற சிறந்த முடிவுகளையும் திட்டங்களையும் கூட தவறாகச் சித்திரித்து, பொய் சொல்வதே தம் வழிமுறையாக, மீண்டும் மீண்டும் பொய்களையே உண்மைகள் என்று வாதம் செய்து மக்களைத் தவறான வழியில் நடத்திச் செல்ல முயற்சித்தார்கள். அந்த முயற்சியில் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் கூட இடையூறு விளைவிக்கத் தயங்கவில்லை.

ALSO READ:  பேரிடர் காலங்களில் கட்சிகள் செய்யும் அரசியல்!

முழுமையான தேச முன்னேற்றத்திற்காகவும், பழுதடையாத ஒருமைப்பாட்டிற்காகவும், அனைத்து மக்களின் வளர்ச்சிக்காகவும், திடமான பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வலிமைக்காகவும், நிரந்தரம் உழைக்கும் அரசாட்சியை ‘ஹிந்துத்துவம்’ என்று முத்திரை குத்தி, மத வெறுப்பைத் தூண்டும் முயற்சி மும்முரமாக நடத்தப்பட்டது. தேசத்தைத் துண்டாடவேண்டும் என்று இந்த துக்கடா கும்பல்கள் செய்த அட்டகாசம் கொஞ்சமல்ல. அத்தனை வீராவேசமாக உக்கிர முயற்சி செய்தாலும் அவர்களால் எதிர்க் கட்சியாக மட்டுமே இடம் பெற முடிந்தது. அதையே பெரிய வெற்றியாக எண்ணி டம்பமடித்துக் கொள்கிறார்கள்.

அதோடு நில்லாமல், பொருளற்ற வாய்ச் சவடால்களால், வெட்கமின்றி பச்சைப் புளுகுகளை பரம சத்தியமாக பிரகடனம் செய்து, இரு சபைகளிலும் சற்றும் கௌரவமோ மரியாதையோ இன்றி நடந்து கொள்கிறார்கள். பங்களாதேஷில் மாணவர்களின் போராட்டம் என்ற பெயரில் தீவிரவாத மதக் குழுக்கள் மிருகத்தனமான, கொடூரமான செயல்களைத் தூண்டி, விபரீதமான திகிலூட்டும் ஹிம்சையைப் பரப்பியது போல, பாரத தேசத்திலும் செய்ய வேண்டும் என்று திட்டங்களை பலமாகத் தீட்டி வருகிறார்கள்.

விவசாயிகளின் போராட்டத்தைப் போலவே போலி போராட்டங்களை நடத்திக் காட்டி, செயற்கை இயக்கங்களை ஏற்பாடு செய்து, வெளிநாட்டு நிதி உதவியோடு ஆட்டம் போடுகிறார்கள். “பாரத தேசம் என்னாவானாலும் பரவாயில்லை. வளர்ச்சி குன்றினாலும் நஷ்டமில்லை. தம்முடைய மதமே இந்த தேசம் முழுவதும் பரவ வேண்டும். தம் மதத்திற்கு மாறாதவர்களை ஹிம்சை செய்து, வன்கொடுமை செய்து, குரூரமாகக் கொல்ல வேண்டும்” என்பதையே கொள்கையாகக் கொண்ட மத வெறியர்களின் உதவியோடு, பாரத தேசத்திலும் மரண காண்டத்திற்கு வழிசெய்யத் துடிதுடிக்கிறார்கள்.

நம் வீட்டிற்கு அருகிலேயே இருந்தாலும், நம்மவர்களின் நட்பையும் உதவியையும் பெற்றாலும், இந்த ‘அமைதிவழியினர்’ என்று கூறிக்கொள்ளும் ஹிம்சைவாதிகள், தம் தலைவர்களிடம் இருந்து செய்தி வந்தவுடனே பெரும் பயங்கரவாதிகளாக மாறி விடுகிறார்கள். நேற்றுவரை ‘பாய், பாய்’ என்று பழகி விட்டு, தேவைக்கு உதவி புரிந்தவர்களைக் கூட தயவு தாட்சிண்யமின்றி நன்றிகெட்டு, கிழித்துக் கொன்ற வரலாற்றை அவர்களுடைய கடந்த காலத்தில் மட்டுமின்றி நிகழ்காலத்திலும் பார்க்க முடிகிறது.

ALSO READ:  இந்திரா செளந்தரராஜன் காலமானார்!

ஆனால் செக்யூலர் என்ற முகமூடியிட்டு, கபட இயக்கங்களின் மறைவில் நின்று, கொடூரர்களின் உதவியோடு, ஹிந்துக்களை ஜாதி வாரியாகப் பிரித்து, ஒன்றுபட விடாமல் தடுத்து, தேசத்தின் முன்னேற்றத்தை உடைத்துத் துண்டாடுவதற்கு முயற்சித்து வருகிறார்கள்.

மத தீவிர வாதிகளின் வன்முறையால் சொந்த தேசமே வேற்று நாடாக மாறிப் போகையில், நடந்த, நடந்துவருகிற, கோரதாண்டவத்தைக் கண்டித்து, எந்த ஒரு தலைவரும், எந்த ஒரு முக்கியஸ்தரும் வாயே திறக்கவில்லை. அனுதாபமும் தெரிவிக்கவில்லை. தாம் மனிதாபிமானம் மிக்கவர்கள் என்று டமாரம் அடித்துக் கொள்பவர்கள் ஊமையாகிப் போனார்கள்.

பகை நாடுகளில் இருந்து அக்கிரமமாக பாரத தேசத்திற்குள் நுழைந்து, மேற்கு வங்காளம், கேரளா முதல் ஹைதராபாத், தமிழ்நாடு, கர்நாடகா, காஷ்மீர் வரை செயற்கை அடையாள அட்டைகளோடு, இந்திய குடிமக்களாக, ஓட்டுரிமை பெற்று, வன்முறையையும் குற்றங்களையும் செய்து வரும் மத வெறிகள் குவிந்து வருகிறார்கள். அவர்களை ஒன்று திரட்டி, வளர்த்து, போஷித்து, தேச துரோக மாநில அரசுகள் அச்சமின்றி நடந்து கொள்கின்றன.

இந்த நிலையில் நம் தேசத்தின் கதி என்ன என்ற அச்சம் தேச பக்தி உள்ளவர் அனைவருக்கும் ஏற்படுகிறது. இதற்கான பதில் – சமூக ஊடகங்களின் புண்ணியத்தால் இப்போதுதான் சிறிது சிறிதாக, வெளிநாட்டு சதிகளும், எதிர்கட்சிகளின் தீய நோக்கங்களும் உலகில் அனைவருக்கும் தெரிய வருகின்றன. உண்மை என்ன என்பதை செய்திகளாக மக்கள் அறிகிறார்கள்.

வர்க்கம், மதம் என்ற பாகுபாடின்றி பாரத தேசத்தைச் சேர்ந்த அனைவரின் நலனுக்காகவும் பாதுகாப்புக்காகவும் சுயநலமின்றி அயராது பாடுபடும் தலைமையின் திறமையை அடையாளம் காண்கிறார்கள். சதிகளைத் தாங்க முடியாமல் தேசத்தை விட்டு வந்த தலைவிக்கு அடைக்கலம் கொடுத்து, வெளிநாட்டு சதிகளுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை அளித்துள்ளது பாரதம்.

எத்தகைய போராட்டத்தை சாக்காக வைத்துக் கொண்டு கொடுமைகளைத் தூண்டினாலும், அழிக்கும் சக்திகளைத் தகர்க்கும் பலமான பாதுகாப்பு அமைப்பை, பலம் பொருந்திய பாரத தேசம் ஏற்பாடு செய்துள்ளது.

ALSO READ:  சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (45): அன்யோன்யாஸ்ரய ந்யாய:

ஒற்றுமையாக, உற்சாகத்தோடு பணி புரியும் அதிகாரிகளுக்கும் தலைவர்களுக்கும் குறைவில்லை என்று அடித்துக் கூறும் நம் தேசத் தலைமை அற்புதமான வியூகத்தைத் திட்டமிடுகிறது. விழித்தெழுந்து வரும் பாரத தேசத்தவர் அனைவரும், இந்த தலையின் திறமையின் கீழ் தம் உண்மையான பாதுகாப்பும் நலனும் முன்னேற்றமும் இருப்பதை அறிந்து வருகின்றனர்.

உலகிலேயே அமைதியையும் சௌபாக்கியத்தையும் நிலைநாட்டக் கூடிய திறமை, தர்மம் மிகுந்த பாரத பூமிக்கு மட்டுமே உண்டு என்ற உண்மையை வெகு விரைவில் உலகம் தெளிவாக உணரும்.

இந்தப் போராட்ட காலத்தில் மேலும் திடமாக இந்த தெய்வீக பாரத பூமியின் மகிமை வெளிப்படும். அதற்கு ரிஷிகளின் தவ சக்தியும், மகா யோகிகள் தாரை வார்க்கும் நற்செயல்களின் பலமும் ஆதரவாக இருக்கும்.

பரமேஸ்வரனின் அரவணைப்பும் நிரம்ப கிடைத்து வருகிறது. பாரத மாதா விஜயதுர்காவாக நிச்சயம் ஒளிர்வாள். வந்தே பாரதமாதரம்.

(ருஷிபீடம் மாத இதழ், தலையங்கம், செப்டம்பர், 2024)

ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version