- Ads -
Home உரத்த சிந்தனை இந்திய விமானப் படை தினம் இன்று!

இந்திய விமானப் படை தினம் இன்று!

அடுத்த வரும் நான்கு ஆண்டுகளில் வானில் பறக்கும் போர் விமானங்கள் இந்திய தயாரிப்பாக இருக்கும். அல்லது இந்தியாவில் தயாரான உதிரி பாகங்களை கொண்டதாக இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

#image_title
chennai air show

— ஜெய்ஹிந்த் ஸ்ரீராம்

இந்திய விமானப் படை தினம் இன்று.

அக்டோபர் 8, 1932 ஆம் ஆண்டு இந்திய விமானப் படை தொடங்கப்பட்டது. அப்பொழுது அதன் பெயர் ராயல் இந்தியன் ஏர் ஃபோர்ஸ். RIAF. இன்று 92 ஆம் ஆண்டு தினம்.

இந்தியர்கள் முதலாம் உலகப் போரிலேயே பிரிட்டன் சார்பில் கலந்து கொண்டு போர் விமானங்களை இயக்கி அசத்தி இருக்கிறார்கள். அப்போது அப்படி அவர்கள் இயக்கிய போர் விமானத்தின் பெயர் பிரிஸ்டோல் டைப் 22 என்பதாகும் என்பர்.

(இதன் தரவுகளை தற்சமயம் சரி பார்க்க  இயலவில்லை)

ஆனால் ராயல் இந்தியன் ஏர் ஃபோர்ஸ் ஆக மலர்ந்த தருணத்தில் வெஸ்ட் லேண்ட் வாபிட்டி எனும் பெயர் கொண்ட போர் விமானத்தை  இயக்கி இருக்கிறார்கள். ஐந்து நபர் கொண்டு ஒரு குழுவாக ஒருங்கிணைக்கப்பட்டு அவர்களுக்கு சீருடை வழங்கி தொடங்கப்பட்ட நாள் தான் அக்டோபர் 8, 1932. அந்நாளையே இன்றளவும் இந்திய விமானப் படை தினமாக கொண்டாடப்படுகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது இந்திய அணி விமானப் படை வீரர்கள் அதிக அளவில் பயன்படுத்தியது வெஸ்ட் லேண்ட் லைஸாண்டர் என்கிற விமானம்.

ராயல் இந்தியன் ஏர் ஃபோர்ஸ் என்கிற பெயரில் கடைசியாக கலந்து கொண்டது சுதந்திர இந்தியாவின் காஷ்மீர் விஷயத்தில் தான்.

அப்போது நம் விமானப் படை இயக்கிய விமானத்திற்கு பெயர் டக்கோட்டா. காஷ்மீர் மாநிலத்தின் உள்ள ஸ்ரீ நகரில் தரையிறங்கிய சாகஸம் ஓர் உன்னத காவியம். தனித்த பதிவாக விரிவாகவே பிரிதொரு சமயத்தில் பார்த்து விடுவோம்.

இந்தியா தனது நவீன கால தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்திக் கொண்டு வருகிறார்கள், இதன் ஒரு பகுதியாக சொந்தமாகவே இலகு ரக ஒற்றை இஞ்சின் கொண்ட போர் விமானத்தை உருவாக்கி வெற்றிகரமாக சோதனை செய்து தற்போது அதில் மேம்படுத்தல்களை மேற்கொண்டும் வருகிறார்கள்.

இது இன்றைய தேதியில் அதி நவீன அதி உயர் தொழில்நுட்ப தரத்திலான அதிக எடை சுமந்து செல்லும் ஒற்றை இஞ்சின் கொண்ட உலகின் முதலாவது அதி வேகமான போர் விமானம் ஆகும். இது நம்மில் பலருக்குமே சரியாக தெரியவில்லை. அதுபோலவே இது தான் உலகிலேயே மிக குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட போர் விமானம் ஆகும்.

இதன் திறனை அறிந்து அமெரிக்கா சுமார் 400 விமானங்களை வாங்க முன் வந்து காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறது. அவர்களின் ஒற்றை இஞ்சின் போர் விமானங்களை காட்டிலும் இது செயல் திறன் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு கொண்டு விமானமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் 17,..  #F35 விமானங்களுக்கு நம்முடைய தேஜாஸ் இலகுரக மாக்-2, … 400 விமானங்களை வாங்க முடியும் என்கிறார்கள்.

ALSO READ:  திருச்செந்துறை எழுப்பிய கேள்விகள்! புரிந்தால் சரி!

இந்த இடத்திற்கு இந்தியா வெறுமே முன்னேறி வந்துவிடவில்லை.

இதன் பின்னணியில் பலரது தியாகங்கள், சிலரின் துரோகங்கள் என பலதும் இருக்கிறது.

சுதந்திர இந்தியாவில் இப்போது தான் கடந்த இருபது ஆண்டுகளாக தான் போர் விமானங்களை தயாரிக்கிறார்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அது தவறு.

1952 ஆம் ஆண்டு முதல் இந்த பணியில் இருந்து வருகிறோம். இன்னமும் சரியாக சொன்னால் தேஜாஸ் நமது முதல் போர் விமானம் அல்ல.

இந்திய சூறாவளி என்று செல்லப் பெயரிட்டப்பட்ட #HF_24_MARUT தான் நமது நாட்டின் முதல் போர் விமானம் ஆகும். இது முழுக்க முழுக்க நமது சொந்த தயாரிப்பு. இது முதன் முதலில் ஜூன் 17 ஆம் தேதி 1961 ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் இணைந்தது.

ஒரு சுவாரஸ்யம் உண்டு……

அன்றைய காலகட்டத்தில் அதாவது 1950களின் இறுதியில் அமெரிக்க தயாரிப்பு B-24 லிபரேட்டர் என்ற பெயர் கொண்ட போர் விமானத்திற்கு இணையாக இந்த இந்திய தயாரிப்பு HF 24 மரூத் இருந்ததாக சொல்வர்.

இதனை வடிவமைத்தவர் ஜெர்மனியரான குர்த் தாங் என்பவர். 1,127 வேகத்தில் பயணித்த இது அக்காலத்தில் மிக ஆச்சர்யகரமாக பார்க்கப்பட்டது. பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்கல் லிமிடெட் சுருக்கமாக #HAL தான் இதனை தயாரித்தது. HF 24 Marut என்று பெயர் இடப்பட்டிருந்தது. இதில் #மரூத் என்பது சமஸ்கிருத பெயர், அதன் அர்த்தம் சூறாவளி.

அந்நாளில் இதற்கு பாகிஸ்தானில் மிகப்பெரிய அளவில் பயம் இருந்தது. 1949 பிறகு சுமார் பத்து ஆண்டுகளுக்கு இந்தியா பக்கம் தலை வைத்து படுக்க வில்லை அவர்கள். என்னென்னவோ செய்தும் அவர்களால் இது போன்ற விமானங்களை சொந்தமாக தயாரிக்க முடியவில்லை. முடிவில் தகிடுதத்தங்களில் இறங்கி விட்டனர்.

இந்தியா இந்த விமானத்தை மாக் 1.5 வேகத்தில் இயங்கும் விதமாக வடிவமைத்து தர சொல்லி கேட்டிருந்தார்கள். ஆனால் இந்த விமானம் 1.2 எட்டிப் பிடிக்கவே முனங்கியது.

ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது எருமை மாடு மாதிரி உழைத்தது., ஓடுபாதை இல்லாத இடங்களிலும் அநாயாசமாக தரை இறக்கி மேலேறியது. என்ன செய்தாலும், எப்படி உபயோக்கித்தாலும் அதன் உறுதி தன்மை கட்டுக்குலையாமல் இருந்தது. வேகம் தான் மாக் 1.2 தாண்டவில்லை.

இதில் பயன் படுத்த பட்ட இஞ்சின் ஆர்பியஸ் ரகம். இதனை கொண்டு மற்ற வெளிநாடுகளில் இருந்த விமான ரகங்கள் மாக் 1.5 வேகத்தில் பறக்க இந்திய விமானம் மட்டும் மாக் 1.2 வேகத்தை தொடவே இல்லை. இதனால் இந்த விமானம் மீது தொழில்நுட்ப ரீதியாக சந்தேகம் கொண்டனர். இதற்கு குர்த் தாங் மட்டும் ஒன்றும் பாதகமில்லை விமான எடையோ அல்லது உடல் அமைப்போ பாதகமில்லை என்று மட்டும் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார்.

ALSO READ:  முக்கோண அரசியல்! முதற்கோணம் இங்கிருந்து!

ஒரு கட்டத்தில் இத்திட்டத்தையே நிறுத்தி விட முடிவு செய்தது இந்திய அரசு.

தவறு செய்கிறீர்கள் என்று எச்சரிக்கை செய்தார். இதற்கு தீர்வாக சொந்தமாக விமான இஞ்சினை தயாரிக்கும் படி ஆலோசனை சொன்னார். யாரும் காது கொடுத்து கேட்பதாக இல்லை.

சரி என்ன நடந்தது இதன் பின்னணியில் என்று பார்த்தால்….,

விமான இஞ்சினை நமக்கு கொடுத்த நிறுவனம் அதன் இயக்கத் திறனில் #கை வைத்திருக்கிறார்கள். எரிபொருள் சிக்கனம் என்ற பெயரில் இதனை நுட்பமாக செய்து இருக்கிறார்கள்.

இது பின்னாளில் தான் அதாவது 1985 ஆம் ஆண்டுகளுக்கு பிறகே இந்திய தொழில்நுட்பக் பிரிவினருக்கு தெரிய வந்தது. அதன் ஒரிஜினல் தரத்திலான இஞ்சினை தேடிப்பிடித்து கொண்டு வந்து இதில் பொருத்தி இயக்கி பார்த்த போது அது 1.8 மாக் வேகத்தில் பறந்திருக்கிறது. ஆடிப் போனார்கள் இந்திய ராணுவத்தினர் மற்றும் HAL நிறுவனத்தார்.

இப்பொழுது என்ன செய்ய முடியும் நிரம்ப தூரத்திற்கு வந்துவிட்டு இருந்தார்கள். அந்த விமானமும் காலாவதியாகி விட்டிருந்தது.

மிகப் பெரிய சோகம் ஆட்கொண்டது. நயவஞ்சகமாக தங்களை ஏமாற்றி இருக்கிறார்கள் என்பது புரிந்தது.

அன்று தான் தீர்மானம் செய்தது இந்தியா. அனைத்தும் தனித்தனியாக பிரித்து கொடுப்பது …… வேலை செய்வது… என்கிற நிலைக்கு தங்களை தயார் படுத்திக் கொண்டனர். புதியதாக கட்டமைக்க நிதி ஆதாரங்கள் இல்லை என்கிற நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டனர்.

அதன் பிறகு இந்தியா வாங்கி வந்த விமானங்களை அதன் தொழில்நுட்ப கட்டமைப்புடனே விற்பனை செய்ய சொல்லி நிர்பந்தம் கொடுத்து வாங்கி வந்தனர்.  அப்படி வாங்கி வந்த முதல் விமான ரகம் தான் மிக்21.

ரஷ்ய தயாரிப்பு. மிக்கியான் குரிவிக் சுருக்கமாக மிக்,  அதில் 21 யோராவது ரகம். முதன் முதலில் வெளிவந்த ஆண்டு 1959. அதனை இந்திய தொழில்நுட்பக் பிரிவினர் பிரித்து மேய்ந்தனர். மறு கட்டுமானம் செய்தனர். காலாவதியான விமான ரகம் என்று பெயர் எடுத்த விமானங்களை மூன்றாம் தலைமுறை விமானங்களுக்கு ஈடாக தொழில்நுட்ப பண்புகளை கொண்டு மாற்றீடு செய்தனர்.

இதனை கொண்டு தான் நம் அபிநந்தன் அமெரிக்க தயாரிப்பு #F16  ரக போர் விமானத்தை அடித்து வீழ்த்தினார்.

அப்படி ஒரு அற்புதமான விஷயத்தை நம் இந்திய தொழில்நுட்பக் பிரிவினர் சாதித்திருந்தனர். காரணம் கடந்த காலத்தில் ஏற்பட்ட அவமானகரமான ஏமாற்றம் மற்றும் தோல்வி.

ALSO READ:  சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (44): த்ருண ரஜ்ஜு நியாய:

இன்றளவும் HF 24 தான் இவர்களது ராஜா.

அந்த திட்டம் தோல்வி அடைய காரணமாக இருந்தவர்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு 1990 களில் சோவியத் யூனியன் என்கிற தேசம் உடைந்த சமயத்தில் கண்டு பிடித்தனர்.

இதனிடையே HF 36 என்கிற பெயரில் சொந்த தயாரிப்பில் பேகஸஸ் இஞ்சின் கொண்டு தயாரித்து அசத்தி இருந்தனர். இதன் ஏரோடைனமிக்ஸ் அசாத்தியமானது. டால்பின் போன்ற வடிவமைப்பில் இது காணப்பட்டது. ஆனால் போர் விமானமாக மாற்றீடு செய்யும் வகையில் நிதி ஆதாரங்கள் இதற்கும் கிடைக்கவில்லை.

போராடி தொன்னூறு சதவிகிதம் முடித்த ஒருவன் தோல்வியை தழுவும் மனநிலையில் தான் இந்திய தொழில்நுட்பக் பிரிவினர் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் அன்று ஏற்பட்டது. ஆனாலும் மனம் தளராமல் உருவாக்க பட்ட விமானங்கள் தான் தேஜாஸ் ரூபத்தில் தற்போது நாம் பார்ப்பது.

இன்று இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்க நான் நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியா தயாரித்து வைத்துக் கொண்டு இருக்கும் ப்ரோடோடைப் அதி அற்புதமான ஏரோ டைனமிக் பண்புகளை கொண்டு இருக்கிறது என்று பாராட்டு தெரிவித்தவண்ணம் இருக்கிறார்கள்.

இன்று உலகிலேயே மிக மிக குறைந்த விலையில் அதிக அளவிலான செயல் திறன் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு என்று சொல்லி அடித்து கொண்டு இருக்கிறார்கள் நம்மவர்கள் இந்த பிரிவில்.

இந்திய பாணிக்கு பல உலகளாவிய விமான வர்த்தக நிறுவனங்கள் மாறிக் கொண்டு இருக்கிறது. தனித்தனியாக தயாரிக்க … விற்க… முன்வந்து இருக்கிறார்கள்.

விமான உடல் பாகங்கள்….

அதில் பயன் படுத்தும் மின்னணு உபகரணங்கள்…..

இஞ்சின் அமைப்பு….. என்று பிரித்து விற்பனை செய்ய முன்வந்திருப்பது நம் இந்திய பாதிப்பால் தான்.

பிரபலமான ரோஸ் ராய்ஸ் விமான இஞ்சின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அமெரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் விமான இஞ்சின் தயாரிப்பாளர்கள் இந்திய பாணிக்கு மாறி இருக்கிறார்கள். இந்தியாவில் வைத்து தயாரிக்க ஆலைகளை உருவாக்கி வருகிறீர்கள். ஏற்கனவே போயிங் நிறுவனத்தின் 60% சதவிகித விமான உதிரி பாகங்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இங்கு நம் நாட்டில் தான் தயாராகி வருகிறது.

அவர்களின் அப்பாச்சி ஹெலிகாப்டர் முற்று முழுதாக இந்தியாவிலேயே தயாரிக்கும் வண்ணம் டாட்டா குழுமத்திற்கு கொடுத்து இருக்கிறார்கள்.

அடுத்த வரும் நான்கு ஆண்டுகளில் வானில் பறக்கும் போர் விமானங்கள் இந்திய தயாரிப்பாக இருக்கும். அல்லது இந்தியாவில் தயாரான உதிரி பாகங்களை கொண்டதாக இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

தினசரி செய்திகள்
Dhinasari Tamil News Web Portal Admin

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version