- Ads -
Home கட்டுரைகள் ஹிந்துக்களின் உதாசீன குணத்தால் தேசத்திற்கு ஆபத்து

ஹிந்துக்களின் உதாசீன குணத்தால் தேசத்திற்கு ஆபத்து

எந்த ஒரு அரசியல் கட்சியும் இதற்குத் தகுந்த வகையின் எதிர்வினையாற்றவில்லை. ஹிந்து சமூகத்தைப் பற்றி கேட்கவும் வேண்டுமா?

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

ஒரு காலத்தில் இந்தியாவின் பகுதியாக இருந்து, பின்னர் மதத்தின் காரணமாக துண்டாடப்பட்டு தனி தேசங்களாக மாறிய நிலப்பகுதிகளில் மதவெறியைத் தவிர வேறு எந்த முன்னேற்றமும் பெயரளவுக்குக் கூட காணப்படவில்லை. நாட்டின் வளர்ச்சி, அமைதி, சமரசம் ஆகியவை அந்த மதத்தவருக்கு பிடிக்காது. பிறரோடு கலந்து வாழவும் மாட்டார்கள். பிறரை வாழ விடவும் மாட்டார்கள். இந்த உண்மை தெள்ளத் தெளிவாகப் புரிகிறது.

நம் தேசத்திலிருந்து பிரிந்த பங்களாதேஷில் கடந்த சில காலமாக ஹிந்துக்களின் மேல் நடத்தப்படும் வன்முறைகளும், கொலைகளும் செய்திகளாக சில தெரிய வந்தாலும், பல வெளியில் வராமலே தொடர்கின்றன. எங்கோ அமெரிக்கா போன்ற தொலை தூர நாடுகளில் வசிக்கும் ஹிந்துக்கள் சிலர் இது பற்றி கண்டனம் தெரிவித்தார்கள். ஆனால் ஹிந்துக்கள் அதிகமாக வாழும் பாரத தேசத்தில் இன்று வரை தகுந்த அளவு எதிர்வினை எழவில்லை. அரசியல் கட்சிகளுக்கு இதெல்லாம் கண்ணில்படாது எனபது தெரிந்ததே.

ஹிந்துக்கள் மீது கரிசனம் காட்டினால் ஓட்டு வங்கிகளுக்குக் கோபம் வரலாம் என்றும், என்றுமே ஒன்றுபடாத ஹிந்து சமுதாயத்தால் எந்த பயனும் இல்லை என்றும் அரசியல் கட்சிகளுக்கு திடமான அபிப்பிராயம் உள்ளது. இந்து சங்கங்கள், இயக்கங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படியாகவோ, தாக்கம் ஏற்படுத்தும் அளவிற்கோ எதிர்வினையோ, கண்டனமோ தெரிவிக்கவில்லை.

ஆனால், எங்கோ ஏதோ வெளிநாட்டில் யாரோ ஒரு தீவிரவாதி கொல்லப்பட்ட போது, அந்த தீவிரவாதியின் மதத்தைச் சேர்ந்தவர் கூட்டம் கூடி டில்லியில் கண்டன ஊர்வலம் நடத்தினார்கள். அதுவும் ‘ஒரே ஒரு’ தீவிரவாதி கொல்லப்பட்டதற்காக. அப்படியிருக்கையில் பாமர ஹிந்துக்கள் பலியாக்கப்பட்டலும் அனுதாபமோ, உதவிக்கரமோ அவர்களுக்குக் கிட்டவில்லை. உதாசீனம், அலட்சியம், கவனக் குறைவு இவையே உள்மூச்சு, வெளிமூச்சாக வாழும் ஹிந்துக்களின் இத்தகு விட்டேத்தியான
இயல்பு, பாரத தேசத்திலும் ஹிந்து எதிர்ப்பாளர்களுக்கு ஊக்கத்தை அளித்து வருகிறது.

ALSO READ:  சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (45): அன்யோன்யாஸ்ரய ந்யாய:

இந்திய விடுதலைக்கு முன்பு இந்தியாவை ஆண்டு, வன்முறையைத் தூண்டிவிட்டு நாகரிகம், கலாசாரம், ஒழுக்கம் ஆகியவற்றுக்கு இருப்பிடமாக இருந்த பாரதத்தின் பண்பாட்டை தரைமட்டமாகச் செய்த வன்முறையாளர்களின் கொடுமைக்கு பலியாகி துயரமடைந்த ஹிந்துக்கள், உதவியற்ற நிலையில் இருந்தபோதிலும் சனாதன தர்மத்தைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்தார்கள். ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு சிறிது சிறிதாக ஹிந்து எதிர்ப்பு அரசுகளின் துணையால் கல்வி, நீதி அமைப்புகள் போன்ற அனைத்தும் ‘ஹிந்து அல்லாத பிற மதத்தினரை திருப்திப்படுத்துதல்’ என்ற திசை நோக்கி நகர்ந்தன. வரலாற்றையும் கலாசாரத்தையும் வக்கிரமாக சித்திரித்து,
ஹிந்துக்களின் தன்னம்பிக்கையையும், தன்மானத்தையும் சீரழித்தார்கள். அதனால்தான் எத்தனை தாக்குதல்கள் நடந்தாலும், ‘நமக்கென்ன?’ என்று ஹிந்து சமூகம் உறங்கிக் கிடக்கிறது. குலம், ஜாதி என்ற அபிமானத்தால் கூட்டம் சேரும் சக்தி வாய்ந்தவர்கள், தர்மத்தைக் காப்பாற்றும் விஷயத்தில் பலவீனமானவர்களாகவே உள்ளார்கள்.

இந்தப் பின்னணியில் பங்களாதேஷின் அருகில் இருக்கும் இந்திய மாநிலத்திலும் ஹிந்துக்களின் மீது கொடூரங்கள் நடந்த வண்ணம் உள்ளன. பெண்களின் மீது மானபங்கமும் கொடுமைகளும் தாக்குதல்களும் அழிவுகளும் நடக்கின்றன. இவை, கொடுங்கோன்மை, ஹிம்சை, மதவெறி ஆகியவற்றைக் கையாளும் ஹிந்து எதிர்ப்பு வாதிகளின் தீய செயல்களே என்பது அனைவருக்கும் தெரிந்தாலும், மனிதநேய வாதிகளோ, மனித உரிமைப் போராளிகளோ, சுதந்திரவாதிகளோ வாய் திறப்பதில்லை. ஹிந்துக்களுக்கு எதிரான அரசு ஆட்சி செய்யும் மேற்கு வங்காளம், கர்நாடகா, தெலங்காணா, தமிழ்நாடு
போன்ற மாநிலங்களில் ஹிந்துகளின் மீது தாக்குதல்களும், ஹிந்து ஆலயங்களைஅழிப்பதும் தடையின்றி நடந்து வருகின்றன.

ALSO READ:  மகாகவி பாரதியார் தீபாவளி பற்றி எழுதிய கட்டுரை

அதுமட்டுமல்ல, கேதார்நாத்திலிருந்து கேரளா வரை ஒவ்வொரு ஹிந்து ஆலயத்தைச் சுற்றிலும் பிற மத பிரார்த்தனை நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. அதோடு பல ஆலயங்களின் சொத்துக்கள் அந்நியர்களின் கைகளுக்குச் சென்றுள்ளன. மறுபுறம் இமயம் முதல் குமரி வரை கோவில்களைச் சுற்றிலும் அதிக எண்ணிக்கையில் ஹிந்துவல்லாத பிறரே கடை வைத்திருகிறார்கள். ஹிந்து தெய்வங்களை சைத்தான்கள் என்று வெறுத்தும், விக்ரஹங்களை துவம்சம் செய்வது தங்களின் மத நோக்கம் என்று அறிவித்தும், ஹிந்துக்களை காபிர்கள் என்று பழித்தும் தூற்றியும் அலையும் இந்த அந்நியர்கள், ஹிந்து கோவில் விக்ரஹங்களுக்கு பூக்களும் பழங்களும் பூஜை சாமான்களும் விற்கும் கடைகளுக்கு உரிமையாளர்களாக உள்ளார்கள். அவர்களின் வாழ்வாதாரம் ஹிந்து கோவில்களைச் சார்ந்தே இருந்தாலும், ஹிந்து கோவில்களின் மீதும், ஹிந்துக்களின் மீதும் ஹிம்சையும் நாசமும் செய்யும் கண்ணோட்டம் அவர்களிடம் நிரந்தரம் இருப்பதைப் பார்க்க முடிகிறது, கேதாரநாத், ஸ்ரீசைலம், சபரிமலை என்று… ஒன்றல்ல பல இடங்களில் நம் கோவில்களைச் சார்ந்து வாழ்ந்தாலும் அவற்றின் அழிவிற்காகக் காத்திருக்கும் ராட்சசக் கும்பலே இவர்கள் அனைவரும். இவர்களைக் கொஞ்சி, கெஞ்சி, சலுகைகளும் சௌகர்யங்களும் ஏற்படுத்திக் கொடுத்து, நம் கோவிகளின் சொத்தை அக்கிரமமாகத் தின்று, உத்தரவாலும் அக்கிரமத்தாலும் கோவில்களை தொல்லைக்குட்படுத்தும் அரசுகள் செய்யும் அநியாயமும் அநீதியும் இமயம் முதல் குமரி வரை வெளிப்படையாகவே தெரிகிறது.

ALSO READ:  சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (44): த்ருண ரஜ்ஜு நியாய:

நம் தேசத்தில் சமீபத்தில் நவராத்திரி நாட்களில் பல மாநிலங்களில் துர்காதேவி மண்டபங்களை நாசம் செய்து, சிலைகளைக் காலால் மிதித்து உதைத்து, நீக்கிய செய்திகள் சமூக ஊடங்கங்களின் மூலம் ஓரளவிற்கு வெளிச்சத்திற்கு வந்தன. எந்த ஒரு அரசியல் கட்சியும் இதற்குத் தகுந்த வகையின் எதிர்வினையாற்றவில்லை. ஹிந்து சமூகத்தைப் பற்றி கேட்கவும் வேண்டுமா?

(ருஷிபீடம் மாத இதழ், தலையங்கம், நவம்பர் 2024)

ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version