― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைபெரியார் சிலை உடைப்பு - கருத்து - வன்முறை - இதற்கு என்ன தீர்வு?

பெரியார் சிலை உடைப்பு – கருத்து – வன்முறை – இதற்கு என்ன தீர்வு?

- Advertisement -

பெரியார் சிலை உடைப்பு – கருத்து – வன்முறை – இதற்கு என்ன தீர்வு??? பிஜேபி வன்முறையைத் தோண்ட விரும்புகிறதா?

முதலில் இந்த லெனின் சிலை விவகாரத்தை கூறிவிட்டு அடுத்து ஈவேரா விவகாரம் வருகிறேன்.. இரண்டும் வேறு வேறு.

லெலின் சிலை உடைப்பு கண்டிக்கத்தக்கது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஏன் என்றால் இது நேரடியாக ரஷ்யா தூதரகம் மூலம் அந்த நாட்டுக்குச் செல்லும். இதனால் நிச்சயம் ரஷ்யா இந்திய உறவில் முக்கியமாக பிஜேபி மீதான பார்வையில் பெரும் களங்கம் உருவாக்கும். எனவே இது எப்படிப் பார்த்தாலும் நல்ல விஷயம் அல்ல. இப்போது எந்தச் சிலையை இடித்ததால் என்ன நல்லது நடந்துவிடப் போகிறது. மக்கள் ஆதரவு கிடைத்துவிட்டது ஆட்சியை ஒழுங்கா செய்து மக்கள் மத்தியில் பெயர் எடுத்து இந்துத்துவ சித்தாந்தமும் , பிஜேபி முன்வைக்கும் பொருளாதார சீர்ந்திருத்தமும் தான் சரி – இடதுசாரிகள் கொள்கை தோல்வி என்று ஆட்சி மூலம் நிரூபிக்க வேண்டும். அது தான் ஆரோக்கியமான விஷயம்.

{வன்முறையால் அதிகம் உயிர்களைக் கொடுத்தது RSS இந்துத்துவா மாணவர்கள் தான். அதிகம் கொலைகள் செய்த பெருமை கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்குத் தான் சென்று சேரும். ஆனால் அது என்றுமே விவாதம் ஆகாது – பிஜேபி ஆட்சிக்கு வந்துவிட்டது இனி திரிபுராவில் நடக்கும் கெட்ட சம்பவங்கள் மட்டுமே செய்தியாக மாறவேண்டும். ஏன் என்றால் அதானே நமது செய்தி ஊடக தர்மம்.}

லெலின் சிலை உடைப்பும் வன்முறையும் நல்ல பெயர் பெற்றுத் தராது – மோடி பிஜேபி நிர்வாகத்திற்குப் பெருமை சேர்க்கும் படி தொண்டர்கள் நடந்து கொள்ளவேண்டும். ஆனால் இந்தப் பெரியார் சிலை உடைப்பு என்பது வேறுவிதமான விஷயம்.

பெரியார் என்ற ஈவேரா அவர் திராவிட சித்தாந்தம் பேசிய காலம் முதல் அவர் உருவம் ஒரு icon. அல்லது திராவிட சித்தாந்தத்தின் ஒரு Brand logo போன்றது. எனவே திமுக அதிமுக மதிமுக என்று திராவிட கட்சிகள் அனைத்தின் Brand value மீதான தாக்குதலாக தான் நாம் இதை எடுத்துக் கொள்ளவேண்டும்.

ஒரு sony,LGபோன்ற நிறுவனம் அதன் Brand மீது தாக்குதல் நடந்தால் அந்த நிறுவனம் பெரும் நஷ்டம் ஆகும் அதே போல தான் இந்த பெரியார் என்ற Brand வீழ்ச்சி அடைந்தால் திமுக என்ற கட்சி அடிப்படையில் ஆட்டம் காணும். எனவே மதிமுக முதல் திமுக வரை கோபம் கொள்கிறார்கள். தவிர இது தமிழர்கள் மீதான தாக்குதல் என்று கூறுவது ஏற்று கொள்ளமுடியாது..

எப்படி இவரைப் போய் பிராண்ட் என்று கூறுகிறீர்???

நீங்கள் கடந்த 50வருடப் பள்ளி புத்தகத்தில் இருக்கும் பாடங்களை நன்கு கவனிக்கவும் – அதில் பல தந்திரங்களைக் காணலாம்.. இந்தத் திராவிட கட்சிகள் உண்மை போல் பள்ளிகளில் நடத்தித் தங்கள் கட்சி பிராண்ட் அனைத்து மாணவர்கள் மத்தியிலும் சேர்த்தனர். அதில் முக்கியமான பாடம் இந்தப் பெரியார் ஈவேரா பாடம்.

ஈவேரா அது செய்தார் இது செய்தார் என்று தங்களால் என்ன என்ன முடியுமோ அதை அனைத்தையும் வரலாற்றைத் திரித்து பொய் கலந்து மக்கள் மாணவர்கள் மத்தியில் ஈவேரா தான் ஜாதி ஒழித்தார் , சமத்துவம் கொண்டுவந்தார் , அனைவரும் படிக்க வழி செய்தார் என்று கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் படிக்க வைத்தனர். (இன்னும் கொஞ்ச நாள் விட்டா இஸ்ரோ ராக்கெட் தொழில் நுட்பம் கூட ஈவேரா தான் கொடுத்தார் தெரியாமா என்று கூறுவார். சத்தியமா அந்த அளவுக்கு இவர்கள் வரலாற்றைத் திரிப்பதில் தான் காலம் முழுவதும் வேலை செய்தார்கள்.)

இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லி விட்டுத் தொடர்கிறேன்: நீங்கள் நன்கு கவனித்தால் எல்லாத் தேர்விலும் பெரியார் ஈவேரா சார்ந்த கேள்வி முக்கியமான கேள்வியாக இடம்பெறுவதும் ஒன்றாக இருக்கும். கட்டாயம் மிக முக்கியமான தேர்வு கேள்வியாக ஈவேரா சார்ந்த ஏதாவது ஒரு கேள்வி எல்லா வகுப்பிலும் வைத்தனர் திமுக அதிமுக. இதுவே தந்திரம் தான். மிக முக்கியமான விசயமாக ஆக்குவது.

இப்படி தான் இந்தப் பெரியார் என்ற பிராண்ட் உருவானது – அதற்கு மதிப்பு உருவாக்கப்பட்டது.

எப்படி நீங்க இப்படிச் சொல்லலாம் மாரிதாஸ்??

நான் முன்பே இது பெரியார் மண் என்ற கேள்விக்கு பதில் கொடுத்திருக்கிறேன் அதில் முழு விவரம் கொடுத்திருக்கிறேன் தாராளமாக எடுத்துப் படிக்கவும். ஒரே ஒரு உண்மையை ஒரு எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம்.. (தயவு கூர்ந்து தமிழ் மொழிக்கும் , கலாச்சாரத்துக்கும் என்ன செய்தார் என்று தேடவும்.. தலித் மக்கள் முன்னேற்றம் காண சட்டம் காரணமா இல்லை பெரியாரா என்றும் தேடவும்…)

இந்த வைக்கம் வீரர் பெரியார் என்ற கதை இருக்கே அது 100% வடிகட்டிய பொய் அதை விடப் பெரிய பொய் வேறு இல்லை. இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் செல்லுங்கள் எந்த மாநில மத்திய பாடத்திட்டமும் வாங்கிப் பாருங்கள் இந்த வைக்கம் போராட்டம் விஷயம் முற்றிலும் வேறாகவும் – இங்கே கடந்த 50வருடங்களாக நடத்திய பள்ளி வரலாறு வேறாகவும் இருக்கும். தயவு கூர்ந்து தேடிப் படிக்கவும்.

இதை ஏன் கூறவேண்டும் என்றால் தலித் முன்னேற்றம் ஜாதி ஒழிப்புக்கு நமது ஈவேரா தான் போராடினார் என்ற பொய் வாக்கு வங்கி அரசியலை முன்வைத்துத் திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய். அதுவும் மாணவர்கள் மத்தியில் திணிக்கப்பட்ட பொய். தலித் மாணவர்கள் இன்று அம்பேத்கரைத் தான் முன் மாதிரியாகக் கொள்ளவேண்டுமே ஒழியப் பெரியார் அல்ல. பிகார் சிக்கிம் இமாச்சல் பிரதேஷ் தொட்டு கேரளா தமிழகம் வரை அனைத்து இடங்களிலும் தலித் மக்கள் முன்னேற்றம் காண நாட்டின் சட்ட பாதுகாப்பும் , இடஒதிக்கீடுகளும் தான் காரணம். அதை வழங்கிய அம்பேத்கர் அவர் சகாக்கள் தான் காரணமே ஒழிய எந்த விதத்திலும் பெரியார் அல்ல. 1980கள் வரை கூட தமிழகத்தில் பெரிய அளவில் சாதிய பிரச்சனைகள் இருந்தன. படித்து முன்னேறிய பின் சட்டம் கொடுத்த பாதுகாப்பு தான் அவர்களை முன்னேற்றியது தவிர திக பெரியார் அல்ல. (நீதிக் கட்சி வச்சுலாம் சொல்ற கதை எல்லாம் பெரிய பொய். தலித் மாணவர்களிடம் கேட்டு கொள்வது கண்ட கண்ட பொய் நம்பாதீர் – அம்பேத்கர் போல் சிறந்த தேசியவாதியாக வளருங்கள். திக கூட சேர்ந்தால் உங்களை நக்சல் மாவோஸ்ட் கூட்டத்தில் தான் போய் விடுவர். அவ்வளவு வெறுப்பு பேசி திரியும் கூட்டம் அது.)

சரி , ஏன் பிஜேபி பெரிய மரியாதை எதுவும் பெரியார் என்ற ஈவெராக்கு கொடுப்பது இல்லை?????

தமிழ் மொழிக்கு என்ன இவர் சிறப்பு சேர்த்தார்!! எதுவும் இல்லை. தாராளமாகத் தமிழ் மொழி மீது அவர் கொண்ட கருத்தை அனைவரும் தேடி படிக்கவும். நிச்சயம் அவருக்குத் தமிழ் மீது எந்தப் பெரிய பற்றும் இல்லை மரியாதையும் இல்லை. “தமிழ்மொழிக்குப் பதில் ஆங்கில எழுத்துக்களை எடுத்துக்கொண்டு காட்டுமிராண்டி கால எழுத்துக்களைத் தள்ளிவிடு என்றேன்”. என்கிறார் – இன்னொரு இடத்தில் “ஆங்கிலமே தமிழரின் பேச்சு மொழியாக ஆகும்படியான காலம் வந்தால் நான் மகிழ்ச்சியும் நிறைவும் அடைவேன்” என்று கூறுகிறார்.

தமிழ்ச் சமூகம் கொண்ட கலாச்சாரம் மேம்படவும் இவர் காரணம் இல்லை. தமிழகத்தில் அனைத்து ஒழுக்கம்கெட்ட வேலையும் சரி என்று பகுத்தறிவு என்ற பெயரில் வக்காலத்து வாங்கும் கூட்டம் இது. கல்யாணம் என்பது காமம் காதல் இரண்டும் கொண்ட விஷயம். இந்தப் பகுத்தறிவு வாதி ஊர் எல்லாம் வயதானவர்கள் சொத்துக்கு இளம்பெண்கள் கல்யாணம் செய்வதை வாய் கிழி கிழியத் தவறு என்று பேசிவிட்டு 72 வயது பெரியார் 26 வயது மணியம்மை அதுவும் மகள் என்று வளர்ப்பதாகக் கூறிய பெண்ணைக் கல்யாணம் செய்தது எதனால்????? காரணம் தேடி படிக்கவும்.

ஆக எதற்கும் தகுதி இல்லாத இந்த ஈவேரா என்ற நபரைத் திராவிட சிந்தனையை விதைத்தவர் என்ற ஒரே காரணம் காரணமாக (அதுவும் இவர் விதைத்தது அல்ல. அதற்கு முன்பே இருந்த சிந்தனை தான். ) அவரை தங்கள் கட்சி பிராண்ட் போல மாற்றி – அதற்கு மதிப்பு உயர்த்த வேண்டும் என்று பள்ளி கூடங்களில் தவறான தகவல்களை வரலாற்றை நடத்திக் கடந்த 60வருடம் மேலாகக் கொண்டுவந்துவிட்டனர் திராவிட கட்சிகள்.

எனவே ஒழுங்கா வரலாறு தெரிந்த எவனுக்கும் இவர் மீது பெரிய மரியாதையும் இல்லை விருப்பமும் இல்லை. அதனால் பிஜேபி தொண்டர்கள் இவரை விரும்புவது இல்லை.

வன்முறை தூண்டுவது சரியா???

தவறு… வன்முறையை எந்தக் கட்சியும் யாரும் ஆதரிக்கக் கூடாது. உலகம் முழுவதும் பிரதமர் மோடி சென்று கூறும் வாசகம் “தீவிரவாதம் பயங்கரவாதம் என்ற போக்கில் நல்ல தீவிரவாதம் கெட்ட தீவிரவாதம் எதுவும் இல்லை. தீவிரவாதமே கெட்டது அது சமூகத்திற்கு நல்ல விஷயம் இல்லை” என்கிறார்.

அதே நேரம் இந்தக் கட்டுக்கதைகள் மூலம் இன்று வரை வியாபாரம் செய்யும் திராவிட கட்சிகளுக்கு பெரியார் மிக அவசியமான ஒருவர். அவர் பெயர் இல்லாமல் கட்சி நடத்த முடியாது என்பதால் மட்டும் அல்ல அவர் இல்லை என்றால் இவர்கள் கட்சியே இல்லை என்ற ஒரு பயம் காரணமாகப் பெரியார் சிலை உடைத்துப் பார் பார்க்கலாம் கை இல்லை கால் இல்லை என்று கலவரம் செய்ய விரும்புகிறார்கள். அவர்களையும் நான் கண்டிக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை பெரியார் சிலையை உடைப்பதோ சேதம் செய்வதோ அவசியம் இல்லை. ஏன் என்றால் ஒரு தரப்பு மக்கள் இவர் உண்மையில் சமத்துவமும் ஜாதி ஒழிப்பும் செய்வதாவர் என்று இன்றும் நம்புகிறது. எனவே அவர்கள் நம்பிக்கை காயபடுத்தும் விதமாக இப்படிச் செய்ய தேவை இல்லை.

அதே நேரம் திமுக சென்னையில் சுமார் 22இடங்கள் மேல் முக்கியமாக அனைத்துச் சாலைகளிலும் எதற்கு அவர் சிலையை வைத்தீர்??? எல்லா ஊர்களிலும் சாலைகள் நடுவே சிலை வைத்தது எதற்கு????? இது என்ன பகுத்தறிவு???? உனக்கு வேண்டும் என்றால் உன் கட்சிக்கு வேண்டும் என்றால் உன் வீட்டில் உன் கட்சி அலுவலகத்தில் கொண்டு போய் வைக்கவும். அட சரி வைக்கிறேங்க. ஒண்ணு ரெண்டுநா பரவாயில்லை… சென்னையில் மட்டும் 22முக்கிய சாலை சந்திப்புகளில், 50க்கும் மேற்பட்ட இடங்களிலும் எதற்கு வைத்தீர்????? என்னையா உங்கள் பகுத்தறிவு புல்லரிக்கிறது? {ஒவ்வொரு நகரம் ஊராட்சி என்று தேடி தேடிச் சிலை திறந்தது எதனால்???முதல் 20வருட ஆட்சியில் எப்படியும் 1000இடங்களில் சிலையை திறந்து இருப்பீரா??? வருடம் ஒரு 20நாட்களாது இந்த சிலைக்கு மாலை போடா போறேன்னு சாலையை மறைத்து மக்களை தொந்தரவு செய்வது தான் இந்த சிலையால் மக்களுக்கு கிடைத்த பயன். வேறு என்ன!!!}

இறுதியாக… உண்மையில் இந்தச் சிலை விவகாரத்தில் எது பகுத்தறிவாக இருக்க முடியும்?????

ஊருக்கு ஒரு சிலை இல்லை இரண்டு சிலை போதும். மற்ற சிலைகளை அரசே அகற்றலாம் அந்தச் சிலைகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் அந்த அந்த மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து ராணுவத்திற்குச் சென்று வீர மரணம் அடைந்த நாட்டின் உண்மையான ஹீரோக்களுக்கு நினைவேந்தல் அமைக்கலாம். ஒரு வீரர் எல்லையில் மரணம் அடைந்தால் அவருக்கு அவர் புகைப்படம் பொறித்த கல்வெட்டை அந்த நினைவேந்தல் சேர்க்கலாம். அது பின் வரும் தலைமுறைக்கு இந்தச் சமூகத்தின் வீரர்களின் தியாகம் உணர்த்தும், அந்த குடும்பத்தாருக்கும் பெருமை சேர்க்கும். எந்த அரசியல் சாயமும் இருக்காது தொந்தரவும் இருக்காது. இதன் மூலம் இந்தச் சிலை பிரச்சனையும் எதிர்காலத்தில் வராது.. {சிலை வழிபாட்டை எதிர்த்துப் போராடின கூட்டம் இப்போது சிலை பாதுகாக்கப் போராடுவது என்ன பகுத்தறிவு. அது என்ன ஈவேராவா???? வெறும் கல் தானே.. என்ன பகுத்தறிவோ!!! }

ஆகப் பெரியார் சிலை உடைப்புக்கு சேதப்படுத்துவதற்கு என் ஆதரவு கிடையாது – முறையாக அகற்றினால் நல்லது.. ஆதரவு உண்டு. மகிழ்ச்சி..

கருத்து கட்டுரை: – மாரிதாஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version