சேலம் – சென்னை பசுமை வழித்தடத்தில் சதி உள்ளதாகவும் அம்பானி ஆதானி கனிமப் பொருட்கள் கொள்ளையடித்துப் போக சாலை அமைக்கப்படுவதாகவும் ஆதாரமற்ற தகவல்களை சமூக வலைத் தளங்களில் சமூக விரோதிகள் பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
தற்போது அமைக்கப்படும் சாலைத் தடத்தால், தொலைவு மிகக் குறைவதுடன் போக்குவரத்துச் செலவும் குறைகிறது. சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, மேட்டூர், கோபி உள்ளிட்ட ஊர்களில் இருந்து விரைவில் சென்னையைச் சென்றடையலாம்.
அதாவது மத்திய அரசின் இந்த நோக்கமே சமூக வலைத்தளங்களில் கூறியதுபோல சதிதான். அந்த சதி யாருக்கு எதிராக என்பதை சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.
சேலத்தில் இருந்து சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர் வழியாகச் சென்றால் டோல்கேட் எண்ணிக்கை மொத்தம் 9. அதாவது, ஓமலூர், தொப்பூர், நாட்றம்பள்ளி, பள்ளிகொண்டா, வாலாஜா, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், வானகரம், பூந்தமல்லி என மொத்தம் 9 சுங்கச் சாவடிகளைக் கடக்க வேண்டியிருக்கும்!
அதுபோலவே ஆத்துர் வழியாக சேஷன்சாவடி, மாடூர் நத்தக்கரை, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், விக்கிரவாண்டி, அச்சிறுபாக்கம், செங்கல்பட்டு, பாடலூர் என மொத்தம் 9 சுங்கச்சாவடிகள் வரும். அதாவது எந்த இரு வழிகளில் வந்தாலும், 9 சுங்கச் சாவடிகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். இதற்கு ஆகும் சுங்கக் கட்டணம் ஒரு வழி பயணத்துக்கு 500 ஐ தாண்டும். அதாவது ஒரு காருக்கு மட்டும்! மற்ற வாகனங்களை நீங்களே கணக்கிட்டு பாருங்கள்!
ஆனால் இந்த சாலை பாரத் ரத்னா வாஜ்பாய் வடிவமைத்த பிரதமரின் தங்க நாற்கரச் சாலை திட்டத்தில் – (B.O.T திட்டத்தில் இல்லை) அரசே சாலை அமைத்து அந்தப் பாராமரிப்புக்காக சில சாலைகளுக்கு மட்டும் மிகக் குறைந்த சுங்க வரி வசூல் செய்ய 6 ஆண்டுகளுக்கு இந்திய நிறுவனங்களை நியமித்தது. ஆனால் அவருடைய ஆட்சி முடிந்து 2010ல் அந்த சுங்க வரி வசூல் செய்யும் உரிமை காலாவதியாகி விட்டது.
ஆனால் பின்னர் வந்த காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு அந்த சாலைகளை 6 வழி சாலையாக மாற்ற 26 வருடங்கள் அமெரிக்க நிறுவனமான LT போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு பத்திரப் பதிவு செய்து கொடுத்தது. இந்த ஒப்பந்தத்தை, தற்போதைய மத்திய பாஜக., அரசு மறுபரிசீலனை செய்து கேன்சல் செய்ய இயலாது. குறை இருந்தால் சுட்டிக்காட்ட மட்டுமே முடியும்.
வழக்கு தொடர முடியும். அதனால், மோடி அரசு பதவி ஏற்ற சில நாட்களில் இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடி ஒப்பந்த தாரர்களை அழைத்து அரசு அவர்கள் செலவு செய்த தொகையில் வசூலித்த தொகையைக் கழித்து சற்று சேர்த்து தருவதாகக் கூறி டோல் உரிமத்தை திரும்பப் பெற பேசிப் பார்த்தது. ஆனால் அவரகள் சாலை அமைக்க செலவு செய்ததை விட ஒப்பந்தம் போட அன்றைய ஆட்சியாளர்களை கவனித்த செலவு அதிகம் என்பதால் டோல்கேட் உரிமையாளர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.
அதுமட்டுமின்றி வாஜ்பாய் ஆட்சிக்குப் பின் அமைத்த சாலைகள் அனைத்துமே BOT திட்டம், அதாவது build operate transfer திட்டமே செயல்படுத்தப் பட்டது. அதாவது தணியார் சாலை அமைத்து 20ல் இருந்து 30வருடங்கள் வசூல் செய்யவும், வருடத்திற்கு இரு முறை பண மதிப்புக்கு தகுந்தவாறு டோல் கட்டணத்தை மாற்றி அமைக்கவும் ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
ஆகவே, மோடி அரசு தற்போது அந்த சாலைகளின் வசூலுக்கு ஆப்பு வைக்கும் விதமாக சில திட்டங்களை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக, இந்த சேலம் சென்னை பசுமைச் சாலை போன்ற சாலைகள் அமைக்கப்படுகிறது. தற்போது சேலம் சென்னைக்கு டோல் கட்டணம் ரூ500/-க்கு மேல், கார் போன்ற இலகு ரக வாகனங்களுக்கு வசூல் செய்யப்படுகிறது .
ஆனால் புதிய பசுமைச்சாலை அரசாங்க செலவிலேயே BOT திட்டத்தில் இல்லாமல் அமைக்கப்பட்டு, பராமரிப்புக்காக குறைந்த கட்டணமே வசூலிக்க இருக்கிறார்கள். அதிகபட்சம் 2 டோல்கேட் மட்டுமே அமைய வாய்ப்புள்ளது. எனவேதான் இந்தப் புதிய பசுமைச் சாலைக்கு சமூக ஊடகங்கள் வழியே தவறாக பரப்பப்படும் இந்த சதி செய்திகள், அவதூறுகள் எல்லாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!
இந்தத் தகவலை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ள எஸ்,.என்.செல்வராஜ் என்பவர், தனது கருத்தாக, நான் இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் (RTI) இரண்டு ஆண்டுகள் செலவு செய்து வாங்கி வைத்துஉள்ளேன் என்கிறார்.