ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழகம் என நான்கு மாநிலங்களை உள்ளடக்கியது திராவிட மண் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அவ்வாறு, “இது திராவிட மண்ணு. இங்க பாஜக கால் வைக்க முடியாது” என்று தொலைக்காட்சி விவாதங்களில் பேசுகிறவர்கள் கூவிக் கொண்டிருந்தாலும் உண்மை வேறு விதமாக உள்ளது.
பாஜக., வடமாநிலங்களுக்கான கட்சி இல்லை என்பதும், இருபது வருடங்களுக்கு முன்பேயே தனித்து நின்று தென் தமிழகத்தின் கடைக்கோடிப் பகுதியில் ஓர் இடத்தைப் பெற்றது என்பதையும் நினைவில் கொண்டால் அது வடமாநிலக் கட்சி அல்ல என்பது உறுதியாகத் தெரியவரும். இன்றும் தென்னகத்தில் பாஜக.,வின் ஓர் எம்.பி., மத்திய அமைச்சராகப் பதவி வகிக்கிறார் என்பதும் உண்மை.
இந்தத் தென்னிந்தியாவில்தான், இந்தத் திராவிட மண்ணில்தான், சட்டமன்ற இருக்கைகளில் 114 இடங்களைப் பெற்று பாஜக இரண்டாவது இடத்தில் பெரிய கட்சியாக இருக்கிறது. திமுக 90 இடங்களைப் பெற்று ஐந்தாவது இடத்தில்தான் உள்ளது.
நாடாளுமன்ற மக்களவை இருக்கைகளிலும் 21 இடங்களைப் பெற்று பாஜக இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால், திமுக.,வுக்கு ஓர் இடம் கூட இல்லை.
பாஜக.,வை தென்னிந்தியா புறக்கணித்து விட்டது என்பது, சிலரால் மேற்கொள்ளப்படும் பிரசாரம். ஆனால், உண்மை நிலை, பாஜக., தென்னிந்தியாவில் இரண்டாவது பெரிய கட்சியாக பாஜக., தென்னிந்தியாவில் உள்ளது என்பதுதான்!
தென்னிந்தியாவில் சட்டமன்றங்களில் உறுப்பினர் கூடுதல் தொகை!
இ.தே.காங்., – 115
பாஜக., – 114
அதிமுக., – 111
தெலுகு தேசம் – 103
திமுக., – 90
தெ.ரா.ச – 89
ஒய்.எஸ்.ஆர்.காங். 66
சிபிஎம். – 66
நாடாளுமன்ற மக்களவையில் கட்சிகளின் நிலை:
அதிமுக., – 37
பாஜக., – 21
இ.காங். – 19
தெலுகுதேசம்- 16
தெ.ரா.ச – 11
ஒய்.எஸ்.ஆர்.காங் -9
சிபிஎம் – 5
ம.ஜ.த. – 2
திமுக., – 0
– இப்படி ஒரு தகவல் தற்போது திமுக.,வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது.