Homeஉரத்த சிந்தனைநல்லவர்கள் பொதுவாழ்வுக்கு வரத் தயங்குவார்கள்..!

நல்லவர்கள் பொதுவாழ்வுக்கு வரத் தயங்குவார்கள்..!

venu srinivasan 1 - Dhinasari Tamil

வேணு சீனிவாசன்-சமூதாயத்தில் நன்மதிப்பு கொண்டவர்கள் மீது அபாண்ட பழிகளை சுமத்தினால் நல்லவர்கள் பொதுவாழ்வு பணிகளுக்கு இனிமேல் வர தயங்குவார்கள்.

வேணு சீனிவாசன் சிலைக்கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்றும் அவர் முன் ஜாமின் பெற்றுள்ளதை பரவலாக கேலிப் பேசப்படுவதையும் விமர்சிக்கப் படுவதையும் பார்க்கின்றேன்.

நான் அறிந்தவரை அவர் நல்ல மனிதர். அந்தக் குற்றச்சாட்டு தவறானது என என்னால் உறுதியாக சொல்ல முடியும். பலக் கோவில்களுக்கு திருப்பணி செய்தவர். ஆன்மிகத்தையும் வைணவத்தையும் வளர்த்தவர்கள் . நான் கோவிலுக்கு அதிகம் செல்பவன் அல்ல. ஆழ்வார் பாசுரங்களை தீந்தமிழ் வாசிக்கின்றேன்.

அவர்களுடைய குடும்பம் நல்ல பாரம்பரியத்தை கொண்டது. பொதுச்சேவை செய்து வந்தவர்கள். செளந்தரம் அம்மாள் டி.வி.சுந்தரம் அய்யங்கார் மகள்.சுந்ததிர போராட்ட காலத்தில் இருந்து பொதுவாழ்வில் உள்ள குடும்பம் . காந்தியடிகளுக்கு நெருக்கமானவர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். தன்னோடு சுதந்திர போராட்ட காலத்திலேயே களம் கண்ட ஈழவரை கணவர் டாக்டர் ராமச்சந்திரன் அவர்களை காதல் சாதி
மறுப்பு திருமணம் செய்துக் கொண்டவர். கேரளாவில் ஈழவர் என்றால் தலித்துகள் என பொருள். செளந்திரம்மாள் குடும்பத்தில் இதனை ஏற்கவில்லை. காந்தியடிகள் ” பொறுமையாக இருக்கும் படி அறிவுறுத்தினார்” சுதந்திரம் பெற்ற பின்னர் திருமணம் செய்துக் கொண்டனர். பெரியாரின் சாதிமறுப்பு பிரச்சார காலக்கட்டத்திற்கு முன்பே இவர்கள் சாதிமறுப்பு திருமணம் செய்துக் கொண்டவர்கள். சர்வோதய இயக்க தலைவர் ஜெகநாதன் – கிருஷ்ணாம்பாள் ஆகியோருக்கு சாதிமறுப்பு திருமணம் செய்து வைத்தார் செளந்தரம் அம்மையார்.

அவர்கள் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தை நிறுவி பொது நல நோக்கத்துடன் நிர்வாகம் செய்தவர்கள்.
கல்வி நிறுவனங்கள் மற்றும் பலருடைய கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்து உதவி வருபவர்கள் . 1952 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். நாடளுமன்ற உறுப்பினர்.பெண்களின் திருமண வயது 18 ஆக உயர்த்தும் சட்ட முன் வடிவைக் கொண்டுவந்து அதை நிறைவேற்றினார்.
காந்தியின் தளபதி ஜே.குமரப்பா இவர்கள் வழியில் கல்லுப்பட்டியில்
காந்தியத்தைபோதிக்கும்ஆஸ்சிரமத்தை
நிறுவினர்

செளந்தரம் அம்மாள் அவர்கள் வழியில் வந்த வேணு சீனிவாசன் திருவரங்கத்தில் திருப்பணிகள் செய்தவர். சொந்த ஊரான திருக்குறுங்குடி( நெல்லை மாவட்டம் ) உட்பட தமிழகத்தியுள்ள பல திருக்கோவில்களுக்கு திருப்பணி செய்தவர் . வள்ளல் தன்மை கொண்டவர்.

தமிழ்நாட்டின் பல ஆறு, குளங்களை புனரமைப்பு செய்தவர். தொடந்து நீராதாரங்களை பெருக்கியவர்.டி.வி.எஸ் நிறுவனம் செய்யும் பணிகள் வெளியே விளம்பரம் செய்வதில்லை.

திருவரங்கம் கோவில் திருப்பணிக் குழுவில் இருப்பதால் அவர் மீதி பழி சுமத்தப்பட்டுள்ளது. கோவில் சிலை திருடி வாழ்வாதரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

தென்னகத்தின் தொழில்துறை முன்னேற்றத்தில் இவர்கள் பங்கு அதிகம். இவர்களது டி.வி.எஸ் போக்குவரத்து நிறுவனம் தென்மாவட்ட ங்களில் பெரிதும் சேவையாற்றியது. கடிகார முள் கூட தவறும் இவர்களின் பேருந்து சரியான நேரத்தில் நெல்லையில் கிளம்பி சரியான நேரத்தில் கோவில்பட்டி வந்தடையும். மதுரை ரயில் நிலைய எதிரில் இருக்கும் டி.வி.எஸ் அலுவலகம் உள்ளே சென்றால் அவ்வளவு சுத்தமாக பராமரிக்கப்பட்டு பழமை மாறாமல் பாரம்பரியம் காப்பாற்றப்பட்டு வருகின்றது.

அனிதா ரத்ணம் , நமது நாட்டியக் கலையை வெளிநாடுகளில் பரிமளிக்க செய்பவர். நமத மண்ணின் கலாச்சாரத்தை நாட்டியத்தின் மூலம் பறைசாற்றி வருபவர். இப்படியாக் வேணு சீனுவாசன் அவர்களின் குடும்பம் பாரம்பரியமாக இந்த மண்ணுக்கு தொண்டாற்றி வருபவர்கள். காமராசருக்கு பேருதவியாக இருந்தவர்கள் .

டிவிஎஸ் பேருந்து நிறுவனம் பெரிதும் சேவையாற்றியது. அந்நிறுவனத்தின் பணியாளர்களுக்கு நல்ல ஊதியமும் ஊக்கத்தொகையும் அவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்தவர்கள்

இத்தகைய நல்ல குடும்ப பின்னணி கொண்ட ஒருவர் மீது அபாண்ட பழி சுமத்தப்பட்டுள்ளது. நிச்சயம் நிரபராதிகளாக பேசப்படுவார் என்பதில் அய்யமில்லை.

சமூதாயத்தில் நன்மதிப்பு கொண்ட இப்படிப்பட்டவர்கள் மீது அபாண்ட பழிகளை சுமத்தினால் நல்லவர்கள் பொதுவாழ்வு பணிகளுக்கு இனிமேல் வர தயங்குவார்கள்.

#சிலைக்கடத்தல்விவகாரம் #வேணுசீனுவாசன்  #திருப்பணிகள்

– கே.எஸ்.இராதாகிருஷ்ணன் (திமுக., செய்தித் தொடர்பாளர்)

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,141FansLike
376FollowersFollow
66FollowersFollow
74FollowersFollow
2,834FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...

Exit mobile version