October 23, 2021, 7:08 pm
More

  ARTICLE - SECTIONS

  டிவிஎஸ் ஒரு பார்வை… யார் இந்த வேனு ஸ்ரீநிவாஸன்

  venu srinivasan 1 - 1

  டிவிஎஸ் ஒரு பார்வை… யார் இந்த வேனு ஸ்ரீநிவாஸன் ?

  டி வி எஸ் குழுமத்தின் நிறுவனர் திரு சுந்தரம் ஐயங்காரின் பேரன். சென்னையில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்து அமெரிக்காவில் (Purdue University) அறிவியல் முதுகலை பட்டத்தை பெற்றார்.

  அப்பல்கலைகழகம் அவருக்கு மேலாண்மையில் டாக்டரேட் பட்டத்தையும் வழங்கியது. மேலும் பிரிட்டனின் வார்விக் (Warwick) பல்கலைகழகமும் இந்தியாவின் ஐஐடி காரக்பூரூம் அவருக்கு அறிவியலில் டாக்டரேட் பட்டத்தை வழங்கின.

  1979ல் சுந்தரம் க்ளேய்டானின் நிர்வாக இயக்குனராக பதவி ஏற்ற வேனு ஸ்ரீநிவாஸன் அவர்கள், 1980ல் டி வி எஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவராக (chariman) பதவி ஏற்றார். கம்யூனிஸ்டுகள் அந்நிறுவனத்தில் பெரும் தொழிலாளர் பிரச்சனைகளை கிளப்பி வந்த சமயம் அது. தொழிலாளர் சங்கங்களின் கடுமையான‌ நிபந்தனைகள் நிறுவனத்தை பெரும் நஷ்டத்தில் தள்ளின.

  மூன்று மாதம் நிறுவனத்தை இழுத்து மூடி தொழிலாளர் சங்கங்களை வழிக்கு வர வைத்தார் வேணு ஸ்ரீநிவாஸன், அதன் பின் நிறுவனத்தில் பல புதுமைகளை புகுத்தி அதை உலக தரத்திற்கு மேம்படுத்தி, அதிநவீன இயந்திரங்களை களம் இறக்கி, புதிய தொழில் நுட்பங்களை ஆழமான ஆராய்ச்சிகள் மூலம் உருவாக்கி, நிறுவனத்தை உயர்த்தினார். ஜப்பானின் சுசுகி நிறுவனத்தோடு சேர்ந்து இரு சக்கர கணங்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தார். அதன் பின் 2001ல் சுசுகி தனியாக பிரிந்திட, இந்தியாவிலேயே முதன் முதலாக உருவாக்கப்பட்ட இஞ்சினோடு டி வி எஸ் விக்டர் எனும் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தினார்.

  இதற்காக அவர் எதிர்கொண்ட சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பல ஜப்பானிய தர ஆய்வாள‌ர்களை தன் நிறுவனத்தில் சேர்த்துக் கொண்டு தன்னுடைய மோட்டார் சைக்கிள்களின் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தினார். டி வி எஸ் 50 முதல் டி வி எஸ் ஸ்கூட்டி, ஸ்டார் சிட்டி, அப்பாச்சி என அவர் உருவாக்கி வெற்றி கரமாக சந்தைப் படுத்திய வாகனங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

  உலக அளவில் அவருக்கு கிடைத்த விருதுகளை பட்டியலிட பக்கங்கள் போதாது என்றாலும் அவர் பெற்ற முக்கியமான விருதுகள் சில.

  2003 Star of Asia Businessweek
  2004 Doctor of Science University of Warwick
  2004 Jamsetji Tata Lifetime Achievement Award Indian Society for Quality
  2005 J R D Tata Corporate Leadership Award All India Management Association
  2009 Doctor Of Science IIT, Kharagpur, India
  2010 Padma Shri Government of India
  2010 Order of Diplomatic Service Merit Government of South Korea
  2012 Ishikawa-Kano Award Asian Network for Quality
  2014 Doctor of Management Purdue University, USA
  2014 Honorary Commander of Korean Naval vessel, ROKS Choi Young Republic of Korean Navy
  2014 Honorary Citizen of Busan City, Republic of Korea Busan Metropolitan Council
  2015 Goodwill Envoy for Public Diplomacy Republic of Korea
  2016 Champion of Champions and Best CEO Business Today
  2018 Life Time Achievement Award F A D A

  அவரின் சமூக மற்றும் ஆன்மீக பங்களிப்புகள் என்ன ?

  வேனு ஸ்ரீநிவாஸன் அவர்களின் சமூக சேவைகள் கணக்கில் அடங்காதவை. கிராமப்புற கல்வி, விவசாயம் சார்ந்த பயிற்சிகள் என அவருடைய தொண்டு நிறுவனம் வெறும் நன்கொடை மட்டும் அளிக்காமல் அடிமட்ட அளவில் களம் இறங்கி பல தொண்டுகளை புரிந்து வருகின்றது. விருப்பமுள்ளர்கள் https://www.tvssst.org/ எனும் வலைதளத்திற்கு சென்று அவற்றை குறித்து விரிவாக‌ அறிந்துக் கொள்ளலாம்.

  அது போல கோயில்களுக்காகவும், ஆன்மீக பணிகளுக்காகவும், திரு வேனு ஸ்ரீநிவாஸன் அவர்கள் அரும்பணியாற்றி உள்ளது கணக்கில் அடங்காது. திருவரங்கம் ரங்கநாதர் கோயிலின் திருப்பணிக்காக மட்டும் அவர் 25 கோடிகளை வழங்கியதும், தமிழ்நாட்டில் உள்ள 100 திருக்கோயில்களுக்கும் மேல் அவர் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

  வேனு ஸ்ரீநிவாஸன் அவர்கள் மீது என்ன வழக்கு ?

  ரங்கராஜன் நரசிம்மன் என்பவரால் கபாலீஸ்வர‌ர் கோயிலில் உள்ள ஒரு பழமையான‌ மயில் சிலை திருடப்பட்டு அங்கு புதிய போலி சிலை மாற்றி வைக்கப்பட்டதாக‌ மயிலாப்பூர் காவல் நிலயத்தில் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை யானை ராஜேந்திரன் எனும் வழக்கறிஞர் குறிப்பிட்டிருந்தார். அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட திருக்கோயில்கள் புணரமைப்பு குழுவில் ஒரு உறுப்பினராக வேனு ஸ்ரீநிவாஸன் அவர்களின் பெயரும் அதில் இடம் பெற்றுள்ளது, இந்தியாவின் முன்னனி தொழில் அதிபர்களில் ஒருவர் என்கிற நிலையில் தனக்கும் தான் சார்ந்த நிறுவனத்திற்கும் இதனால் எந்த‌ அவப்பெயரும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக‌ ஒரு முன் ஜாமீனை தாக்கல் செய்துள்ளார் ஸ்ரீநிவாஸன். சமூகத்தில் மதிப்பும், மரியாதைக்கும் உரிய எந்த நபரும் இப்படி ஒரு முன் ஜாமீனை தாக்கல் செய்துக் கொள்வது புதிதல்ல‌. சொல்லப் போனால் 2004ல் தன்னுடைய சொந்த செலவில் கபாலீஸ்வர்ர் கோயிலுக்கு 70 லட்சம் கொடுத்து பணிகளை செய்துள்ளார் வேனு ஸ்ரீநிவாஸன் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வருடத்தில் இருந்ததை தவிர தனக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் ஒரு பக்தன் என்பதை தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார் வேனு ஸ்ரீநிவாஸன்

  டி வி எஸ் குழு மம் துரதிஷ்டவசமாக பிராமண சமூகத்தினரால் தொடங்கப்பட்ட நிறுவனம் ஆகையால், திமுக மற்றும் கம்யூனிஸ கூட்டங்கள் அந்த நிறுவனத்தை எப்படியாவது அழித்திட துடித்தன. பல தடைகளை போட்டன. ஆனால் ஈடு இனையற்ற திறமையையும், அயராத உழைப்பையும் யார் தடுத்து விட இயலும் ?. டி வி எஸ் நிறுவன‌ங்கள் நம் நாடு முழுவதும் மட்டும் இல்லாது உலகம் முழுவதும் விரிந்து பரவியது. தமிழகம் முழுவதும் திராவிட கட்சிகளின் இந்து விரோத கொள்கைகளால் பலத் திருக்கோயில்கள், மிக மோசமான நிர்வாக‌த்தினாலும், அறநிலயத்துறை மற்றும் அரசுகளின் கூட்டுக் கொள்ளையாலும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. ஐயா பொன் மானிக்கவேல் அவர்கள் இறைவனின் மறு அவதாரமாக‌வே இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அரும்பணி ஆற்றி வருகிறார். சிலை கடத்தல்களிலும் பல முறைகேடுகளிலும் ஈடுபட்ட பல‌ அறநிலயத்துறை அதிகாரிகள் கைதாகி வருகிறார்கள். இந்நிலையில் தான் வேனு ஸ்ரீநிவாஸன் போன்ற சமூகத்தில் தலைசிறந்து விளங்கும் நபர்களை ஏதோ சிலை திருட்டில் சம்பந்தப்பட்டவர் போல் ஒரு பரப்புரையை திமுக, கம்யூனிஸ்டு, கிறிஸ்தவ மற்றும் தேச விரோத இந்து விரோத சக்திகள் மேற்கொள்கின்றன. அவர்களின் முக்கிய நோக்கமே தர்ம சேவகர்களை குறித்து அவதூறு பரப்புவதுதான். இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

  இதை குறிப்பிடுவது நம் இந்து தர்மத்திற்காக பாடுபடும் மற்றும் உதவும் நல்லுள்ளங்களை நாம் எந்த விதத்திலும் முன்கூட்டியே தவறாக நினைத்து விடக்கூடாது என்பதற்காகதான்.

  யார் நல்லவர் யார் தீயவர் என்பதை முடிவு செய்வது நீதிமன்றத்திடம் உள்ளது. அதே வேளையில் நம் தர்மத்திற்காக சேவையாற்று பவர்களை குறித்த விஷமப் பரப்புரைகளை நாம் முழு சக்தியுடனும் எதிர்கொள்ள வேண்டும்.

   

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,137FansLike
  368FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,580FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-