காந்தி கொலையும் பின்னணியும்(பகுதி 9):

பாகிஸ்தான், ‘ பழங்குடியினர் தாக்குதல் ‘ என்ற பெயரில் காஷ்மீரை கைப்பற்ற திட்டமிட்டிருந்ததும் அவருக்கு தெரிந்தே இருந்திருக்கிறது.ஆனால் அதை வெளியே சொல்லாமல் மறைத்து விட்டார்.

காஷ்மீரை கைப்பற்ற வந்த ஆக்கிரமிப்பாளர்களை கண்ட போது ஒரு கணம் நம் இராணுவத்தினர் திகைத்து போய் விட்டனர். காரணம், தரைப்படையில் போரிட பயன்படுத்தப்படும் அனைத்து விதமான நவீன ஆயுதங்களும் அவர்களிடம் இருந்ததுதான்.

அவையெல்லாம் திட்டமிட்ட ரீதியில்,காஷ்மீரத்தின் எல்லையிலே,பாகிஸ்தானின் லாரிகளிலே குவிக்கப்பட்டவை ஆகும். அந்த ‘ பழங்குடியினரின் ‘ தலைவன் யார் தெரியுமா ? ’ ஜெபல் டாரிக் ‘ என்று போலிப் பெயர் சூட்டிக் கொண்ட,பாகிஸ்தானின் முன்னணி தளபதிகளில் ஒருவனான அக்பர் கான் ஆவான்.

தங்களுடைய கவர்னர் ஜெனரலும்,ராணுவத் தளபதியும் காலந் தாழ்த்தாமல் இருந்திருந்தால்,பாரதப் படைகள் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே களமிறங்கி இருக்கும். ஆக்கிரமிப்பாளர்கள் யூரி  நகரத்திற்குள் நுழையும் முன்னரே தடுத்து நிறுத்தப்பட்டிருப்பர் ; பரமுலாவின் மோசமான கற்பழிப்புகளும் தடுக்கப்பட்டிருக்கும்.

மவுண்ட்பேட்டனும்,ஆங்கிலப் படை தளபதி,சர் ராப் லாக்ஹர்ட்டும் திட்டமிட்டு,காங்கிரஸ் தலைவர்களை ஏதேதோ சொல்லி திசை திருப்பி,நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டனர்.

நேருவும்,லேடி மவுண்ட்பேட்டனின் காமப் பார்வையை கண்டு ஜொள்ளு விட்டுக் கொண்டு,காஷ்மீர் விஷயத்தில் ‘ மந்திரித்து விட்ட கோழி ‘ப் போல்,மவுண்ட்பேட்டன் சொன்ன எல்லாவற்றிற்கும் தலையை தலையை ஆட்டிக் கொண்டு இருந்து விட்டார்.

மவுண்ட்பேட்டனின் மகளான பமிலா மவுண்ட்பேட்டன்,தன் தாயாரான எட்வினா மவுண்ட்பேட்டனுக்கும் நேருவுக்கும் இடையில் இருந்த ‘ காதலை ‘ பற்றி ’ விலாவரி ‘யாக எழுதியிருக்கிறார்.

இந்த காதல் 1960ல் எட்வினா மவுண்ட்பேட்டன் காலமாகும் வரை தொடர்ந்ததாம்.

நேருவின் அந்தரங்க விஷயங்கள் நமக்குத் தேவையற்றவை.அதைப் பற்றி நமக்கு கவலையும் இல்லை அதைப் பற்றி இங்கு எழுதப்போவதும் இல்லை.

ஆனால்,எட்வினா மவுண்ட்பேட்டனின் கடைவிழி பார்வைக்கு மயங்கி,தேசத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் முடிவுகளை நேரு எடுத்தார் என்பதுதான் துரதிரிஷ்டவசமானது.

குறிப்பாக காஷ்மீர் பிரச்சனையில் எட்வினாவின் தாக்கம் நேருவின் மீது அதிகமாகவே இருந்தது.

ஆனால், பரமுலாவில்,தன்னுடைய கிறிஸ்துவ தோழர்களுக்கு ஏற்பட்ட அவமானகரமான..கொடூர நிகழ்வுகள் மவுண்ட்பேட்டனை சற்றே நிலைக்குலையச் செய்தது.

ஆகவே ‘ THE STATESMAN ‘ பத்திரிகை ஆசிரியர் அயன் ஸ்டீபன்ஸுக்கு அளித்த பேட்டியில்,’’ பாரதம் இராணுவத்தை அனுப்பியது சரிதான்.அதனால் தான் ‘’ ஆக்கிரமிப்பாளர்களின் வெறித்தனத்திலிருந்து ஸ்ரீநகர் காப்பாற்றப்பட்டது. இருநூறுக்கும் மேற்பட்ட ஆங்கிலேய குடிமக்களும் காப்பாற்றப்பட்டனர் ’’ என்று கூறினார்.

ஜின்னா காஷ்மீர் விஷயத்தில் தன் இஷ்டப்படி செயல்பட அவகாசம் அளிக்கும் நோக்கிலேயே,சர் ராப் லாக்ஹர்ட், தவறான தகவல்களை அளித்து காலத் தாமதம் ஏற்படுத்தினார் என்று வெளிப்படையாக புரிய ஆரம்பித்தது.

பாகிஸ்தான், ‘ பழங்குடியினர் தாக்குதல் ‘ என்ற பெயரில் காஷ்மீரை கைப்பற்ற திட்டமிட்டிருந்ததும் அவருக்கு தெரிந்தே இருந்திருக்கிறது.ஆனால் அதை வெளியே சொல்லாமல் மறைத்து விட்டார்.

லாக்ஹர்டின் நான்கு வருட பணிக்கால ஒப்பந்தம் முடிவடைய நான்கு மாதமே இருந்தப்படியால்,’இதை’ பெரிதுப்படுத்தாமல்,பெரிய மனது வைத்து காங்கிரஸ் தலைவர்கள் மன்னித்து விட்டு விட்டனர்.

ஆக,காஷ்மீர் போர் துவங்கியது ; காஷ்மீர் பிரச்சனையும் பிறந்தது,இன்றளவும் தொடர்கிறது.

( தொடரும் )

எழுத்து: யா.சு.கண்ணன்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...