- Ads -
Home உரத்த சிந்தனை ஏழு பேர் விடுதலை: ஆளுநரின் குறுக்குசால் நடவடிக்கை தவறானது!

ஏழு பேர் விடுதலை: ஆளுநரின் குறுக்குசால் நடவடிக்கை தவறானது!

ஏழுபேரையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்தது.அது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை ஆளுநர் கேட்டது குறுக்குசால் ஓட்டும் நடவடிக்கை தவறானது.இது வேதனையானது. அதிர்ச்சியளிக்கிறது. இது காலம் தாழ்த்தும் நடவடிக்கை மட்டுமில்லமால் மாநில உரிமைகளை பறிப்பதாகும்.

எழுவர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றமே மாநில அரசு விடுதலை குறித்து முடிவு எடுக்கலாம் என்று சொன்ன பிறகு,தமிழக அரசின் அமைச்சரவையின் தீர்மானத்தினை ஆளுநர் அப்படியே ஏற்றுக் கொள்வது தான் அவரது கடமை.ஆனால் ஆளுநர்
இதை புறந்தள்ளியது சட்டத்திற்கு புறம்பானது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே இந்த மண்ணின் சட்டமாகவும் கருதவேண்டும்.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161ன் படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழு பேரையும் ஆளுநர் ஆளுநர விடுதலை செய்திருக்க வேண்டும்.

ALSO READ:  வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161, ஆளுநர் முடிவெடுக்கும் போது உள்துறை அமைச்சகத்தையோ மத்திய அரசையோ கலந்தாலோசிக்குமாறு அந்த சட்டத்திலோ நீதிமன்ற தீர்ப்புகளிலோ குறிப்பிடப்படவில்லை. எனவே, ஆளுநரின் இந்த நடவடிக்கையை காலம் தள்ளும் நடவடிக்கைதான்.

‘தனஞ்செய் சாட்டர்ஜி எதிர் மேற்குவங்க அரசு’ என்ற வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் உறுப்பு 161ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை ஆளுநர் தனிச்சையாக செயல்படுத்த முடியாது; அது மாநில அரசின் பரிந்துரைக்கு கட்டுப்பட்டது என்று தெளிவுப்படுத்தியுள்ளது. ஏழு பேர் விடுதலை தொடர்பான விடயத்தில் மாநில அரசு ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் அளித்துவிட்டது. ஆளுநர் உள்துறை அமைச்சகத்துக்குக் கருத்து கேட்டு கடிதம் எழுதியதை அவசியமற்றது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version