நம்பி நாராயணன்… அவர் படித்து முடித்த சமயத்தில்.. அமெரிக்கா போயிருந்தால்.. நம்பி நாராயணன்.. நாசாவில் தலைமைப்பொறுப்பை ஏற்றிருந்திருக்க முடியும். ஆனால்.. இஸ்ரோவில் குறைந்த சம்பளம், வீட்டுப்படி, அகவிலைப்படி.. என்று ஒரு அரசு விஞ்ஞானியாய் இருந்ததின் சாபம்.. அவரை.. கடைசிவரை மிடில் க்ளாஸில் வைத்ததுமல்லாமல்.. 50 நாள் சிறைவாசம் அனுபவிக்க வைத்ததுதான் மிச்சம். கேரள அரசின் கோரமுகம் இப்போதுவரை தெரிவதில்தான், கடவுளின் நாட்டை.. சாத்தான்கள் ஆள்கிறார்கள் என்பது தினப்படி உறுதியாகிறது.
அப்துல் கலாம் solid motor ப்ராஜக்டில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது.. இனி எதிர்காலம் cryogenic என்ஜின்கள் என்றும்.. 1970இல் liquid fuel மோட்டார்களை வெற்றியுடன் உருவாக்கினார். அடுத்த கட்டமாய்.. மிகப்பெரிய என்ஜின்கள் தேவைப்பட்டது. இதற்கான global tender விட்டபோது.. ரஷ்யா சுமார் 235 கோடியில் தர சம்மதித்து விட்டது. ஆனால் 935 கோடி சொன்ன அமெரிக்கா, 650 கோடி சொன்ன ப்ரான்ஸ் கடுப்பாகி.. போரிஸ் எல்ட்ஸினுக்கு ஜியார்ஜ் புஷ், கடிதம் எழுதி மிரட்டியதில்.. ரஷ்யா பின் வாங்கியது. ஆனால்.. டெக் ட்ரான்ஸ்பர் இல்லாமல்.. நான்கு க்ரையோஜனிக் என்ஜின் கட்டமைக்க.. ரஷ்யா ஒத்துக் கொண்டபோது. 1994இல் உளவு பார்த்த ஸ்காண்டல் பெரிதாகியது. இதற்கு பின் யார் என்று சொல்ல தேவையே இல்லை.
மாலத்தீவின்.. இரு பெண்மணிகளிடம் விஞ்ஞானிகள் ராக்கெட் மற்றும்.. சாடிலைட்டின் ஃப்ளைட் டேட்டாவை நம்பி நாராயணன் பாகிஸ்தானுக்காக கொடுத்துவிட்டதாக்குற்றச்சாட்டு.. 50 நாள் சிறைவாசம். அடித்துத்துவைக்க.. ஆனால் உண்மையான டார்கெட் நம்பி இல்லை.. அவரோடு உள்ளேவைக்கப்பட்ட நான்கு பேருமல்ல.. நம்பியின் மேலதிகாரி முத்துநாயகம்தான் குறி. ஆனால் நம்பியோ மற்றவர்களோ.. விசாரித்த IB அதிகாரிகளிடம்.. உண்மையைத்தவிர வேறெதுவும் சொல்லவும் இல்லை.. கையெழுத்து போட்டு பொய்யாய் அவரை மாட்டிவிட முடியாது என்றதில்..இந்த கேஸ் எங்கேயும் நிற்கவில்லை.
இதை விசாரித்த சிபிஐ 1996இல் எல்லா குற்றங்களும் ஆதாரமில்லாதவை என்று தூக்கி எறிந்தது. 1998 இல் முதன்முறையாய் ஹியூமன் ரைட்ஸ் கமிஷன்.. கேரள அரசின் மீது strictures போட்டு தாக்கியது. 2001 இல் 1 கோடி இழப்பீடு தரச்சொல்லியதையும் கேரள அரசு சாய்ஸல் விட்டு அப்பீலில் பத்துலட்சம் தர ஒத்துக்கொண்டு தராமல்.. கேஸ்போட்ட போலீஸ்கார ஆசாமிகளை விடுவித்தும் விட்டது.
சாது மிரண்டது.. நம்பிக்கு டெஸ்க் ஜாப் கிடைத்தது. ஆனாலும் விடவில்லை.. கேரள அரசை துரத்தி அடிக்க ஆரம்பித்தார். இப்போது சுப்ரீம் கோர்ட் 50 லட்சம் இழப்பீடும்..பொய்கேஸ் போட்ட போலீஸ் ஆசாமிகள் மீதி நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் கமிட்டி அமைத்து வேட்டையாட முடிவெடுத்தது.
ஒரு நல்ல விஞ்ஞானியை எப்படி அரசியல் கொல்ல முடிகிறது என்பதுதான் நாம் கற்ற பாடம். இதைவிட..தாமதமான நீதி என்பது நீதி கிடைக்கவில்லை என்பதை அந்த டேல்கேட்டில் 15 நிமிடம் நின்றதை..சீன்போட்ட நீதிபதியிடம் யாராவது சொல்லித் தொலையுங்கள்.
இதுவரை வந்த எந்த அரசும் இந்த நீதித்துறையின் தினப்படிகளை சரிபண்ணவே இல்லை. கிராமம் தோறும் கோர்ட்டும்.. அதன் நடைமுறைகள் எளிமைப் படுத்தாமலும், ஒன்று அல்லது இரண்டு அப்பீல்.. மற்றும் ஒரு கேஸின் முடிவு ஒரே மாதம்தான் என்று வரையறுக்காத வரை.. இந்த துறைமீது சாமான்யனுக்கு எந்தவித மதிப்பும் வர வாய்ப்பே இல்லை. கட்ட பஞ்சாயத்துகளும் ப்ளாக்மெயில் அரசியலும்தான் வாழும்.
ச்சே.
– கட்டுரை: பிரகாஷ் ராமசாமி