spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஆதார் குறித்த தீர்ப்பினால்... இனி என்ன நடக்கும்..?

ஆதார் குறித்த தீர்ப்பினால்… இனி என்ன நடக்கும்..?

- Advertisement -

ஆதாரை பற்றிய உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு, பின்வரும் நிகழ்வுகளுக்கு வழி வகுக்கும் …!

இந்தத் தீர்ப்பினால் கறுப்புப் பணம் ஒழிப்பு, தேசிய பாதுகாப்பு இவற்றில் எதிர்மறை தாக்கமும், அர்பன் நக்சால்ஸ் மற்றும் ஹவாலா முதலைகளின் செயல் பாடுகளை கண்காணிப்பதில் பாதிப்பும் ஏற்படும் ..

1# ##மொபைல் சிம் : ஆதார் தேவை இல்லை####

1.பெரும்பாலும் IED வகை குண்டுகள் மொபைல் போன் மூலமாகத்தான் வெடிக்க வைக்க படுகிறது. யாருடைய மொபைல் இருந்து வெடிக்க வைக்கப்பட்டது என்பதை கண்டு பிடிப்பதில் விசாரணை அமைப்புகளுக்கு தாமதம் ஏற்படும் ஏற்படும் …

2. ஹவாலா பணம் பணப்பரிமாற்றம் போன் காண்டாக்ட் மூலமாகத்தான் நடைபெறும் அதையும் கண்காணிக்க முடியாது …

3. கொஞ்ச நாள் முன்பாக பிரதமரை கொல்ல சதி செய்தவர்களை   #UrbanNaxals   கண்டறிந்தது  அவர்களின் மொபைல் பேச்சுகள் மற்றும் சென்ற இடங்களின் அடிப்படையில் தான்… ஆதாரை மொபைலுடன் இணைக்க வேண்டாம் என்று சொல்லுவதன் மூலம் நக்சால்ஸ் நடமாட்டத்தை கண்டறிவது இயலாது ..அதனால் அவர்கள் திட்டம் திட்டுவது மற்றும் செயல் படுத்துவது எளிது …

4. IP address கண்டறிவதும் தடை படும் ..அதனால் வதந்திகளை பரப்பும் த்விட்டேர் மற்றும் முகப்புத்தக பயனாளர்களை கண்டறிவது கடினம் …

5. இதுநாள் வரை ஹுரியட் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தங்களின் நடவடிக்கையை கண்காணிக்க கூடாது என்பதாக நேபாளம் சிம் கார்ட்களை பயன்படுத்தி வந்தனர்…இதன் பிறகு அவர்களின் அலைச்சல் குறைக்கப்படும் …

2# வங்கி கணக்குகளுக்கு ஆதார் தேவை இல்லை ..

6. இதனால் கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கைக்கு பின்னடைவு …

7. பணப் பரிமாற்றம் அறிவது கடினம் ..

8. வங்கி கணக்கிற்கு ஆதார் தேவை இல்லை என்றும், ஆனால் பான் கார்டு வங்கி கணக்கிற்க்கு தேவை என்று தீர்ப்பு அளித்துள்ளனர் …

9. இதனால் அனைவரும் பான் கார்டு வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும் ..ஆதார் சேவை மையங்கள் போன்று பாண் சேவை மையங்கள் கிடையாது ..அதனால் மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைவர் …அது யாருக்கு நல்லது …

10. ஜன் தன் கணக்கு ( இலவச வங்கி கணக்கு-) வைத்திருப்பவர்கள் அனைவரும் ஆதாரை வைத்து கணக்கு துவங்கியவர்கள்..இவர்கள் மறுபடியும் பாண் கணக்கு துவங்க வேண்டும். ஆதார் சேவை மையங்கள் போன்று பாண் சேவை மையங்கள் கிடையாது அதனால் மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைவர் …அது யாருக்கு நல்லது …

11. PAN card is a Static identification system, But Adhaar is a real-time identification system. ஆதாரை வைத்து உடனடியாக பணப்பரிமாற்றம் செய்பவரின் தகவல்களை பெறலாம்.. ஆனால் பாண் கார்டு அந்த வசதிகள் கிடையாது ..

12. இதனால் பண பரிமாற்றத்திற்கு மட்டும் வங்கி கணக்குகள் ஆரம்பித்து, பரிமாற்றம் செய்தவுடன் கணக்கை விட்டு விடலாம்..இதனால் கருப்பு பண பரிமாற்றம் வங்கிகளின் மூலமே நடைபெறும்…

13. கருப்பு பண பரிமாற்றத்தை தடுக்க பான் கார்டுக்கு ஆதாரை போல வசதிகளை ஏற்படுத்த நேரமும் பணமும் விரையம் ஆகும் …

3#பள்ளி கல்லுரிகளுக்கு ஆதார் தேவை இல்லை

14. ஒரு கல்லூரி பேராசிரியர் பல கல்லுரிகளில் ஒரே நேரத்தில் வேலை பார்க்கலாம்..

15. அதாவது அண்ணா யூனிவர்சிட்டி பரிசோதனையின் பொழுது மட்டும் ஆசிரியரை வேலைக்கு அமர்த்தலாம்…ஒரு ஆசிரியர் பெயர் பல கல்லூரிகளில் இருக்கும்…அதை கண்டறிவது இயலாது

16. ஆதாரின் மூலம் 1 லட்சத்திற்கும் அதிகமான போலி கல்லுரி பேராசிரியர்களும் , 3 லட்சம் போலி பெயரில்
கலர்ஷிப் உதவி தொகை பெற்றவர்கள் கண்டறிய பட்டனர் …
இதனால் நாட்டில் கல்வி தந்தைகள் பாதிக்கப்பட்டனர் …நாட்டில் அதிகமா கல்வி தந்தைகள் எந்த கட்சியில் உள்ளார்கள் என்பது நமக்கு தெரியும்..யாருக்கும் பயன் அடைவார்கள் என்பதும் நமக்கு தெரியும்…

இந்த தீர்ப்பின் மூலம் நீதிபதிகள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர் ..
அதாவது வழக்கை எந்த நீதிபதி விசாரிப்பது , பல செட்டி குடும்பங்களுக்கு தொலை பேசியில் ஜாமின் வழங்குவது அதற்க்கு ஊக்க தொகை வழங்குதலை அரசாங்கம் கண்காணிக்க இயலாமல் செய்துவிட்டது …

இறுதியாக நலத்திட்டங்களை செயல் படுத்த மட்டும் ஆதார் பயன்படுத்தலாம் என்ற தீர்ப்பு அன்ட்ரொய்ட் போனை பேசுவதற்கும் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லுவதர்கு ஒப்பானது …

#AadhaarVerdict #Aadhaar4Development #AadhaarJudgment

– என். கார்த்திகேயன். (Karthikeyan N, Research Scholar)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,100SubscribersSubscribe