பின்னாளில்,காந்தி கொலை வழக்கு காலக்கட்டத்தில்…
மனோரமா தெளலத்ராவ் சால்வியின் வாக்குமூலத்தை, 1948 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் பம்பாய் மாகாண பிரதான மாஜிஸ்திரேட் ஆஸ்கர் ஹெச்.ப்ரவுன் பதிவுச் செய்தார்…
’’ பூனாவிலிருந்த ஆப்தே என்னையும்,வேறு இரண்டு முன்னால் மாணவிகளையும் பார்க்க வந்திருந்தார். அந்த மாணவிகள் பெயர்கள் சகுந்தலா விஷ்வாஸ் ஸ்ரீ சுந்தர் மற்றும் சரஸ்வதி கே.உஜகோர்.
அவர் எங்களை ரோஸி திரையரங்கிற்கு,’ காதம்பரி ‘ திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்றார்…..’’
அதன் பின்…..
வில்ஸன் கல்லூரியில் படித்துக் கொண்டு,ராமாபாய் ஹாஸ்டலில் தங்கியிருந்த மனோரமாவை சந்திக்க அடிக்கடி பம்பாய் சென்றார் ஆப்தே.
ஆரம்பத்தில், ராணுவ சீருடையுடன் கம்பீரமாகக் காட்சித் தந்த ஆப்தேயை பார்த்து ஹாஸ்டல் வார்டன் திருமதி ஹேவத் எந்த விதச் சந்தேகமும் கொள்ளவில்லை…
ஆனால் அடிக்கடி சந்திப்பு நிகழத் தொடங்கவே,சந்தேகம் கொண்டு,மனோரமாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விட்டார்..
வார்டனின் கழுகுப் பார்வையிலிருந்து தப்பிக்க,’ நிர்மலா ‘ என்ற பெயரில்,பெண் கையெழுத்துடன் மனோரமாவிற்கு கடிதம் எழுதத் தொடங்கினார் ஆப்தே…
அடிக்கடி சந்தித்து ஏற்பட்ட நெருக்கம்,அவர்கள் இரவு நேரங்களில் பல சாதாரண லாட்ஜ்களில் அறை எடுத்து தங்கும் அளவிற்கு போனது…
ஆப்தே லாட்ஜ் ரிஜிஸ்டர்களில்…
திருமதி மற்றும் திரு.ஆப்தே என்றே பெயர்களை பதிவுச் செய்தார்..
மனோரமா சால்வியின் வாக்குமூலத்தின்படி…
…’’ நவம்பர் 1944 ஆம் வருடம்… நான் குஜராத் நிவாஸ் எனும் தங்கும் விடுதியில் ஆப்தேயுடன் இரவைக் கழித்தேன்….
நான் சாவர்க்கரை சந்திக்க வேண்டுமென ஆப்தே விரும்பினார்.நான் சந்திக்க மறுத்து விட்டேன்……
1945 ஆம் வருடம் ஜூன் மாதம் 17ந்தேதி,என்னை ஆர்ய நிவாஸ் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றார்.அன்றைய இரவை அவருடன் அங்கு கழித்தேன்….
நான் 10 முதல் 12 முறை வரை ஆப்தேயுடன் பம்பாயின் பல்வேறு தங்கும் விடுதிகளில் ஒன்றாகத் தங்கியுள்ளேன்.
அதன் பின்…
பூனாவில் ஒரு ஹோட்டலில்,இரண்டு முறை தங்கியுள்ளேன்…
அப்போது ஆப்தேயை பார்க்க,கோட்ஸே வந்திருந்தார்.
அவரிடம் என்னைச் சுட்டிக் காட்டினார் ஆப்தே ‘’.
1948ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ந் தேதி,காந்தி கொலை வழக்கில் ஆப்தே கைதுச் செய்யப்பட்ட போது மனோரமா சால்வியும் கைதுச் செய்யப்பட்டார்.
அப்போது அவர் ஏழு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது….
காந்தி கொலை வழக்கில் அரசுத் தரப்பு முன்னிறுத்திய 101 சாட்சிகளில் மனோரமாவும் ஒருவர் என்பதால் அவர் தொடர்பான சில விஷயங்களை பதிவுச் செய்ய வேண்டியுள்ளது.( இவர் தொடர்பான வேறு பல விஷயங்களை பின்னர் பார்க்கலாம் )
ஆனாலும்,மனோரமா சால்வியை விசாரித்து வாக்குமூலம் பதிவுச் செய்த போலீசார்,அவர் பிறழ் சாட்சி ஆகி விடுவாரோ என்று அஞ்சி அவரை நீதிமன்ற விசாரணையின் போது ( பிரதான வழக்கு விசாரணைக்கு ) ஆஜர்படுத்தவில்லை.
( தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
வ