பல மாகாணங்களில் முஸ்லீம்கள் போலீஸ் படையில் மிக பெரிய அளவில்இருந்ததும் ஆகஸ்ட் 16ந் தேதிய ஆபத்திற்கு புதிய பரிமாணம் சேர்த்தது.
சிந்து,பஞ்சாபில் 70 சதவிகிதம்,உத்திரப்பிரதேசம்,வங்காளத்தில் 50 சதவிகிதம் என்று காவல்துறையில் முஸ்லீம்கள் காணப்பட்டனர்.
ஆகவே இந்த பகுதிகள் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பற்ற பகுதிகளாக விளங்கின.
‘ அனைத்து அரசியல் அமைப்பு நடைமுறைகளுக்கும் விடைகொடுத்து ‘ என்று ஜின்னா சொன்னது வன்முறையில் இறங்குவோம் என்று பொருள்படுமா
என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்,வன்முறை,அகிம்சை என்ற விவாதத்தில் இறங்க விரும்பவில்லை என்று பட்டென பதிலளித்தார் ஜின்னா.
உள்துறை பொறுப்பையும் சேர்த்து வகித்த வங்காள முதல்வர் சுஹ்ரவர்த்தி ,கல்கத்தா படுகொலைக்கு களம் அமைத்து கொடுத்ததுடன்,தானே தலைமை தாங்கவும் செய்தார்.
கல்கத்தாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் முஸ்லீம் குண்டர்களைத் திரட்டி,துப்பாக்கி முதலிய கொடிய ஆயுதங்கள் கொடுத்து அழைத்து வந்தார்கள்.
கடும் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவிய போதிலும்,அவர்களுக்கு பெட்ரோலுக்கான ரேஷன் கூப்பன்கள் தட்டுப்பாடின்றிக் கிடைத்தன.
ஹெளராவில் குண்டர் கூட்டங்களை கல்கத்தா மேயர் ஷரீப் கானே முன்னின்று வழி நடத்தினார்.
மொத்தமிருந்த 24 தலைமைப் போலீஸ் நிலையங்களில் 22 ஹிந்து அதிகாரிகளின் தலைமையில் இருந்தன.
அனைத்திலும் முஸ்லீம் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டனர்.மீதமிருந்த 2 அலுவலகங்களும் ஆங்கிலோ இந்திய அதிகாரிகளின் கீழ் இயங்கின.
ஆகஸ்ட் 16 அன்று பொழுது புலர்ந்தது !
’ போராடி வெல்வோம் ஹிந்துஸ்தானத்தை ‘ ( லட் கே லேங்கே ஹிந்துஸ்தான் ) என்ற வெறிக் கூச்சலுடன் லீக் கும்பல் புறப்பட்டது.
முதல்வரின் தலைமையில் நடந்த கூட்டத்தில் எல்லாப் பேச்சாளர்களும் ‘ ஹிந்துக்களை ஒழிப்போம் கொல்வோம் ‘ என்று சபதம் எடுத்துக் கொண்டனர்.
காஃபிர்கள் ( ஹிந்துக்கள்) மீது ஜிஹாத் ( புனிதப் போர் ) அறிவிக்கப்பட்டது.
( தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
- எழுத்து: யா.சு.கண்ணன்