December 3, 2021, 12:50 pm
More

  காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 75): புத்தகங்களினூடே…!

  ஹைதராபாத் சுங்கச்சாவடி மீது தாக்குதல் நடத்தும் தங்கள் திட்டத்திற்கு பயன்படுத்த,அந்த அகதிகளிலிருந்து சிலரை தேர்வு செய்ய முடியுமென்றும் பஹ்வாவிடம் கார்கரே கூறினார்.

  karkare - 1

  கார்கரே எளிமையாக பேசிப் பழகக் கூடிய தன்மை உடையவர் என்பதாலும், அவருடைய கலகலப்பான சுபாவமும், பண விஷயத்தில் கஞ்சத்தனம் காட்டாமல் தாராளமாக செலவு செய்யக் கூடிய தன்மையும் பஹ்வாவை வெகுவாகக் கவர்ந்து விட்டது. எனவே  அஹமத்நகருக்கு தன்னுடன் வந்து விடும்படி கார்கரே கூறிய போது மறுப்பேதும் தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டார்.

  அஹமத் நகரிலும் 10,000க்கும் மேற்பட்ட அகதிகள் இருக்கும் விவரத்தையும், அவர்களில் கணிசமான எண்ணிக்கையினர், பஹ்வாவின் சொந்த மாநிலமான பஞ்சாபிலிருந்து வந்தவர்கள் என்பதையும் அவரிடம் கார்கரே தெரிவித்தார்.

  ஹைதராபாத் சுங்கச்சாவடி மீது தாக்குதல் நடத்தும் தங்கள் திட்டத்திற்கு பயன்படுத்த,அந்த அகதிகளிலிருந்து சிலரை தேர்வு செய்ய முடியுமென்றும் பஹ்வாவிடம் கார்கரே கூறினார்.

  மதன்லால் பஹ்வாவிற்கு அஹமத்நகரிலே அவருடயை ஜீவாதாரத்திற்காக வியாபாரம் ஒன்றை ஏற்படுத்தி தருவதாகவும் கார்கரே வாக்களித்தார். பம்பாயில் தான் நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பதாக உணர்ந்த மதன்லால் பஹ்வா ,கார்கரேயுடன் அஹமத்நகர் புறப்பட்டுச் சென்றார்.

  அவருக்கும் தன் விரலின் காயம் ஆறும் வரை செய்வதற்கு ஒரு தொழில் தேவைப்பட்டது. போகும்போது,ஒரு ட்ரங்க் பெட்டி நிறைய தான் தயாரித்து தயாராக வைத்திருந்த வெடிகுண்டுகளையும்,வெடி பொருட்களையும்,ஃப்யூஸ் வயர்களையும் கொண்டு சென்றார்.

  பம்பாயிலிருந்து அஹமத்நகர் சென்று விடுவது எனும் அவரின் முடிவு விதியின் வழிகாட்டுதலால் நடைபெற்றதாக எண்ணத் தோன்றியது.

  காரணம்.. மதன்லால் பஹ்வா பம்பாயை விட்டு வெளியேறிய சில நாட்களுக்குள், அவர் பணிபுரிந்து வந்த VASSEN PUSPASEN நிறுவனம் போலீஸின் சோதனைக்கு உள்ளாகி அந்த நிறுவன உரிமையாளர்களும்,அங்கு பணிபுரிந்து வந்த ஊழியர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

  மதன்லால் பஹ்வா அங்கிருந்திருந்தால்,அவரும் கைதாகி ஒரு வருட சிறைத்தண்டனையாவது பெற்றிருப்பார்.

  ஆனால் விதியின் முரண்பாடான சிந்தனையின் விளைவு… அவரை வெடிகுண்டு தயாரிப்பதை விடமிகமிக பெரியதொரு குற்றச் செயலை செய்ய தயார் செய்துக் கொண்டிருந்தது. அது காந்தியை கொல்வதற்கான சதித்திட்டத்தில் பங்கெடுப்பது…

  கொலையின் காரணமாக ஆயுள் தண்டனை பெற்றதும் ஆகும். மதன்லால் பஹ்வா,பம்பாயை விட்டு வெளியேறும் போது Dr.ஜெயினின் புத்தகங்கள் தொடர்பான கணக்கு வழக்குகளை முடிக்காமலேயே வந்து விட்டிருந்தார்.

  அதற்காக 1947 வருடம் டிசம்பர் மாதத்தில் ஒரு நாள்,Dr.ஜெயினை சந்திக்க பம்பாய் தாதரில் அவருடைய இல்லம் அமைந்திருந்த சிவாஜி பார்க் மங்கல் நிவாஸிற்குச் சென்றார்.

  சற்றே மனக்கசப்புடன் Dr.ஜெயின் ,முதலில் பஹ்வாவை பார்த்தாலும்,புத்தகங்கள் தொடர்பான கணக்குவழக்குகளில் திருப்தியடையா விட்டாலும்,அதை பெரிது படுத்தாது விட்டுவிட்டார். பின்னாளில், இதைப் பற்றி நினைவுகூர்ந்த Dr.ஜெயின்,ஒரு முறை தன்னை அவருடைய தந்தையாக கருதுவதாக மதன்லால் பஹ்வா கூறியது மட்டுமே தனக்கு பெரிதாகப் பட்டது என்று கூறினார்.

  அஹமத்நகரில்,பழக்கடை ஒன்றை நடத்தி வந்த முஸ்லீம் உரிமையாளர் ஒருவரை அடித்து துரத்தி விட்டு,கடையை தானும்,தன் நண்பர்களும் கைப்பற்றியதாகவும்,அந்த கடையை தான் நடத்தி வருவதாகவும் Dr.ஜெயினிடம் ,பின்பொரு சமயம் மதன்லால் பஹ்வா தெரிவித்தார்.

  தன் பழக்கடைக்கு ‘ கார்கரே சேத் ‘ ( கார்கரேயை அப்படித்தான் மற்றவர்களிடம் குறிப்பிடுவது மதன்லால் பஹ்வாவின் வழக்கம் ) என்பவர் நிதி உதவி செய்து வருவதாகவும் Dr.ஜெயினிடம் மதன்லால் பஹ்வா கூறினார்.

  ‘ சேத்’ என்றால் பேங்கர் அல்லது ஒரு பணக்கார வணிகர் என்று பொருள்படும்.  அஹமத்நகர் அகதிகளுக்காக கார்கரே ஆற்றி வந்த சேவைகளால் கவரப்பட்ட மதன்லால் பஹ்வா,தானும் அந்த பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

  அஹமத்நகர் வந்து சேர்ந்த இரண்டு வாரங்களுக்குள்ளாகவே,அஹமத்நகரில் நிரந்தரமாக தங்கி விட முடிவும் செய்தார். காரணம்… பழ வியாபாரம் நன்றாக நடந்துக் கொண்டிருந்தது..

  மதன்லால் பஹ்வாவிற்கு அஹமத்நகரில் ஒரு காதலியும் கிடைத்தார்.

  (தொடரும்)

  #காந்திகொலையும்பின்னணியும்

  எழுத்து: யா.சு.கண்ணன்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,779FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-