ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களுக்கு ஆபத்து!

14

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
(Source: ருஷிபீடம் மாத இதழ் டிசம்பர் 2018 தலையங்கம்)
தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு. விஞ்ஞானத்திலும் தொழில் நுட்பத்திலும் மிக விரைவாக வளர்ந்து வருகிறோம்.

உலக மயமாக்குதல் மூலம் தேசம் காலம் இவற்றின் எல்லைகள் இல்லாமல் போயின. இந்தக் காலத்தில் கூட இன்னும் மத தத்துவ சர்ச்சைகள் எதற்கு? எந்த மதமானால் என்ன? குறுகிய மத வேற்றுமைகளை விட்டு விட வேண்டும். நாட்டில் இன்னும் அபிவிருத்தி அடைய வேண்டியவை எத்தனையோ உள்ளன. குடி நீர், விவசாயம், சாலைகள்…

இது போன்ற எத்தனையோ அம்சங்களின் மேல் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. மதங்களின் மீது அல்ல…!” – இது போன்ற விசாலமான எண்ணங்கள், உதாரமான பாவனைகள் மிகவும் உயர்ந்தவையே. ஆனால் இத்தகைய உபதேசங்களை எல்லாம் இத்துக்களிடம் மட்டுமே சொல்கிறார்கள். அல்லது இந்துக்கள் மட்டுமே இது போல் பேசுகிறார்கள்.

பிற மதங்கள் எதுவும் இந்த பாவனைகளோடு இருப்பதில்லை. விசாலமான பாவனைகள் கொண்ட சிலர் பிற மதங்களிலும் இருந்தாலும் அவர்கள் இத்தகைய பேச்சுக்களை உரத்துக் கூற மாட்டார்கள். தங்களின் மத அமைப்புகளுக்கு அடங்கி மௌனமாகவே இருப்பார்கள்.

அவரவர் தம் வேலையைப் பார்த்துக் கொண்டு தனி மனிதனாகவும் குடும்பமாகவும் தம் மதத்தைக் கடைபிடித்தபடி சமுதாயத்தில் ஒற்றுமையாகவும் சமரசமாகவும் வாழ்வது சிறந்தது. அது தான் ஆதரிசமானது கூட. ஆனால் அத்தகைய சூழல் நம் நாட்டில் தென்படவில்லை.

இந்து மதத்தைத் தவிர பிற மிலேச்ச மதங்கள் சிறிதும் சகிப்புத் தன்மையற்று நடந்து கொள்ளும விதம் மறைத்தாலும் மறைக்க முடியாத உண்மை. இந்தியர்கள் கண்டு கொள்ள மறுக்கும் ஆபத்தான வாஸ்தவம்.

சில மாதங்களுக்கு முன் இந்தியத் தலைநகரில் பிற மதத் தலைவர் ஒருவர் ‘நம் மதத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவரையே நாட்டின் தலைவராகத் தேர்ந்தேடுப்போம். இந்த நாட்டை நம் மதம் தான் ஆள வேண்டும்’ என்று வெளிப்படையாக அறிக்கை விடுத்தார். இது போன்ற அறைகூவலை வேறொரு மதமும் விடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. அனால் ஒரு இந்து மதத் தலைவர் கூட இது போன்ற அறிக்கை விடவில்லை.

செக்யூலரிசம் ஆளும் நாட்டில் இது போன்று அறிக்கை விடுவது சரியானது தானா? என்று ஊடகத்துறை மேதாவிகள் கேள்வி கேட்பதில்லை. அரசியல் தலைவர்கள் வாய் திறப்பதில்லை. அதோடு அவர்களின் அடி பணிந்து அவர்களுக்கு ஹிரண்யாட்ச வரங்களை அள்ளி வீசுகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் பிரார்த்தனை இடங்களை உலகிலேயே உயர்ந்ததாக கட்டித் தருவோம். அதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஒதுக்குவோம். மதம் மாறினாலும் தலித் ஹோதாவில் உங்களைச் சேர்ப்போம்… போன்ற ஜனநாயகத்திற்கு எதிரான வாக்குறுதிகளை அளிக்கிறார்கள்.

அவர்களின் பண்டிகைகளுக்காக அரசாங்க நிதியிலிருந்து நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை ஒதுக்குகிறார்கள். அவர்களின் பிரார்த்தனை இடங்களின் ஆதாயத்தை மட்டும் தொட மாட்டார்கள். ஒரு புறம் அரசாங்க கஜானாவில் நிதி பற்றாக்குறை என்று ஒப்பாரி வைத்துக் கொண்டே மறு புறம் இது போல் வாக்குறுதிளைப் பொழிவதேன்?

சில மாநில அரசுகளும் மத்திய நீதி அமைப்புகளும் கூட இந்து ஆலய நிர்வாகத்திற்கும் சம்பிரதாய பரம்பரைக்கும் தீங்கு ஏற்படும் விதமாக பிடிவாதமாக நடந்து கொள்கின்றன. நாத்திகக் கட்சி ஆளும் மாநிலங்கள் பிற மதங்கள் இரண்டின் கட்டாயத்தினால் இந்து மத அமைப்புகளின் மேல் அடக்குமுறை நடத்துகின்றன. ஹிந்து ஆலயங்களில் பிற மதத்தவரை அதிகாரிகளாக அமர்த்துவதற்கு சட்டத்தில் மாற்றம் கொண்டு வருகின்றன.

சமீபத்தில் சில நாட்கள் முன்பு செகந்திராபாதில் பிற மத அமைப்பு ஒன்று நாடு முழுவதுமுள்ள தங்களின் குழுக்களனைத்தையும் வரவழைத்து கூட்டம் போட்டு ‘வரும் தேர்தலில் நம் முக்கியத்துவம் இருக்க வேண்டும். அதற்கேற்ப நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம் மதத்திற்கு அதிகாரம் கிடைக்க முயற்சிக்க வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

சமீபத்தில் ஒரு மாநில முதல்வரை ஆசீர்வதிப்பதற்காகச் சென்ற பிற மதத்தவர்கள், அவரின் நெற்றியில் இருந்த குங்குமப் பொட்டை அழித்து விடும்படி சைகை செய்தனர். ஹிந்துவான அந்த முதல்வர் உடனே அதை அழித்து விட்டார். அதைப் பார்த்தும் கூட ஹிந்துக்களுக்கு எந்த உணர்வும் எழவில்லை.

சில காலம் முன் கோவாவில் வெளி நாட்டிலிருந்து வந்த சில கிருஷ்ண பக்தர்கள் பஜனை செய்து கொண்டு செல்கையில் அங்கிருந்த பிற மதத்தவர் அவர்களை ஈவிரக்கமின்றி தாக்கினர். போலீசார் கூட அவர்களை அடித்து கைது செய்து ‘இந்த மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கும் பிற மதத்தவருக்கே முக்கியத்துவம் உள்ளது. இங்கு இந்து சம்பிரதாயங்களை வெளிப்படுத்தக் கூடாது’ என்று எச்சரித்தனர்.

‘ஹிந்து மதத்தின் பிறப்பிடம் என்று எண்ணி ஆசையோடு வந்தோம். இதை விட எங்கள் நாடே மேல்’ என்று கூறி வருந்தி தண்டனை அனுபவித்துவிட்டு தம் நாட்டிற்குத் திரும்பினர். இந்தச் செய்தியை முக்கிய ஊடகங்கள் வெளியிடவில்லை.

தெலுங்கு மாநிலத்தில் ஒரு பிரசித்தி பெற்ற சிவாலயத்திற்குச் செல்லும் மார்க்கத்தில் பவித்திரமான மலையின் திருப்பத்தில் ஒரு பாறையின் மேல் பிற மதத்தவர் தம் மதத்தின் கடவுளே அனைவருக்கும் பிரபு என்று பெரிய வண்ண எழுத்துக்களால் எழுதி வைத்திருந்தனர். (என் புருஷனே எல்லோருக்கும் புருஷன்..! என்ற கூற்று போல). அதைப் பார்த்து மனம் வருந்திய சில இந்து பக்தர்கள் அதனை அழிக்க முற்பட்டனர்.

உடனே போலீசார் அங்கு தோன்றி ‘ரௌடி ஷீட்டர்கள்’ என்று கேஸ் போட்டு இந்து பக்தர்களைக் கைது செய்தனர். மதக் கலவரத்தினை தூண்டி விடுகிறார்கள் என்று கூறி தண்டித்தனர். பின், முதலில் எழுதி வைத்தவர்களை ஏன் தண்டிக்கவில்லை?

இவற்றை எல்லாம் பார்க்கையில் அரசாங்கங்கள் இந்துக்களுக்கு எதிராக இருப்பதும் பிற மதத்தவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.

இந்த பிற மதங்கள் இரண்டும் ஒருவர் வழியில் மற்றவர் தலையிடுவதில்லை. இவர்கள் குறி பார்ப்பது இந்துக்களையே. இவர்களின் தாத்தாக்கள்… ஏன் இவர்களே கூட நேற்றுவரை இந்துக்களாகவே இருந்தார்கள் என்பதை மறந்து பகிரங்கமாக இந்து சம்பிரதாயங்களையும் கடவுளர்களையும் கீழ்மையாக இழிவுபடுத்தினாலும் எதிர்த்து எதுவும் செய்ய இயலாத நிலை. வெட்கம் கெட்ட இந்துக்களே மதம் மாறுகிறார்கள்.

பிற மதத்தினர் அதிகாரிகளாக இருக்கும் அனைத்து துறைகளிலும் இந்துக்களை இம்சிப்பதும் துன்புறுத்துவதும் தொடர்ந்து நடந்து கொண்டு தானிருக்கிறது.

அலுவலகங்களில் தம் கீழ் வேலை பார்க்கும் ஹிந்துக்களை மதம் மாறச் சொல்லி அழுத்தம் கொடுக்கிறார்கள். மாறா விட்டால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சௌகர்யங்களைச் சேர விடாமலும் வேலையில் குற்றம் கண்டு பிடித்தும் முன்னேற விடாமல் தடுக்கும் சம்பவங்கள் அநேகம்.

பெரிய பெரிய காரியாலயங்களில் ஹிந்துக்களின் விண்ணப்பங்களை தாமதம் செய்வதோ குப்பைத் தொட்டியில் எறிவதோ நடக்கிறது. செக்யூரிட்டி, போலீஸ் போன்ற துறைகளில் கூட பிற மதத்தவர் அதிகாரிகளாக இருக்குமிடங்களில் ஹிந்துக்களை துன்புறுத்துவதும் அச்சுறுத்துவதும் நடக்கிறது. தொடர்ந்து பல இடங்களில் நிகழும் உண்மை நிலை இது.

இவற்றை வெளியே சொல்லிக் கொள்வதற்குக் கூட ஹிந்துக்கள் அஞ்சுகிறார்கள். சிலர் சபலத்திற்கோ துன்புறுத்தலுக்கோ பணிந்து மதம் மாறி விடுகிறார்கள். பிற மதத்தவர் உயர் அதிகாரத்திற்கு வரக்கூடாது என்பதல்ல. நம் நாட்டில் பிறந்த தகுதியுள்ளவர் யாரானாலும் அதிகாரத்தில் அமரலாம். ஆனால் தம் கடமையை நியாயமான வழியில் நிர்வகிக்காமல் மதப் பிரசாரத்திகு அதிகாரத்தை பயன்படுத்துவது சட்ட விரோதம் அல்லவா?

எந்தக் கட்சித் தலைவரானாலும் பரவாயில்லை. ஆனால் பிற மதங்களைத் தட்டிக் கொடுத்து ஹிந்துக்களைத் துன்புருத்தும் வழிமுறையை மட்டும் பொறுத்துக் கொள்ளக் கூடாது. இது வரையிலேயே இந்து அறநிலையத் துறை அநீதிக்கும் அந்நிய மதங்கள் செய்யும் அக்கிரமத்திற்கும் ஆளாகி பாதிப்படைந்து பரிதாபமான நிலையில் உள்ளது. இவை குறித்து இந்து மதப் பெரியவர்கள் வாயைத் திறப்பதில்லை.

விடுதலைக்கு முன் ஹிந்துக்களை கொன்று குவித்தவர்கள் வல்லபபாய் படேலின் முயற்சியால் நாட்டை விட்டுப் போனார்கள். போகும் போது ஏற்படுத்திய ஒரு மதத் தத்துவக் கட்சி இந்த செக்யூலர் நாட்டில் அதிகாரத்தில் அமர்ந்து மத ஏற்றத் தாழ்வு என்னும் விஷத்தைக் கக்கிக் கொண்டே இருக்கிறது. அந்த கட்சியோடு கூட்டு சேருவதற்கும் தொகுதிப் பங்கீட்டுக்கும் தயாராக உள்ளார்கள் தலைவர்கள்.

இது தவறு என்று யாராவது கூறினால் அவர்களின் பார்வையில் ‘ஹிந்து மத வெறியர்கள்’. ‘ஒரே நாடு ஒரே குலம் சம நீதி’ என்று கூறுபவர்கள் ஹிந்து மதவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.

இத்தகைய சூழலில் விழிப்பு உணர்ச்சி அடையாமல் போனாலும் தற்காப்புக்கு ஆயத்தமாகாமல் போனாலும் நாட்டின் முன்னேற்றம் தடைப்படும் என்பதில் ஐயமில்லை.

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் காஷ்மீர் போல, வட கிழக்கு மாநிலங்களைப் போல இந்துக்கள் உயிருக்கு பயந்து செய்வதறியாது தவிக்கும் நிலைக்கு ஆளாவார்கள். ஓடிப் போகலாம் என்றால் தஞ்சமடைவதற்கு ஹிந்துக்களுக்கு ஒரு நாடு கூட இல்லை.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...