பாகிஸ்தானை 4 ஆகப் பிரிப்பது ஒன்றே இரு நாட்டு பிரச்னைக்கும் தீர்வு! அன்றே சொன்னவர் சு.சுவாமி!

பாகிஸ்தானை 4 நாடுகளாகப் பிரிப்பது ஒன்றே இரு நாடுகளுக்கும் நன்மை தரும் என்று சொன்னார் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.

கடந்த 2017 டிசம்பரில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு குறித்த பிரச்னை எழுந்தபோது சொன்னது… ஐஎஸ் அமைப்பு மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறது, இந்தியா ஒரு இஸ்லாமிய நாடாகும் என்று! அது நிறைவேறுமா நிறைவேறாதா என்பது பிரச்னையல்ல, ஆனால் அதற்கான முயற்சியை அவர்கள் நிச்சயம் செய்வார்கள். எனவே அதற்குத் தகுந்த வகையில் அதை எதிர்கொள்ளத் தயாராக நாம் இருக்க வேண்டும்!

நாம் மீண்டும் பாகிஸ்தானின் நிலப்பரப்பு விவகாரத்தில் தலையிட வேண்டிய அவசியம் உள்ளது. வங்கதேசத்தைப் பிரித்த போது என்ன செய்தோமோ அது போல் இப்போதும் செய்ய வேண்டிய தேவையுள்ளது. வங்கதேசத்தில் என்ன நடந்ததோ அது போல் இப்போதும் சிந்து, பலுசிஸ்தானில் மக்கள் தெருக்களில் இறங்கியிருக்கிறார்கள். எனவே, பாகிஸ்தானை 4 நாடுகள் ஆகப் பிரிக்க வகை செய்ய வேண்டும்.

பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இது ஒன்றே வழி.

நாம் நம் முன் உள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவிட்டோம். நம்முன் இப்போது வேறு எந்த வழியும் இல்லை. பயங்கரவாதத்தை எதிர்கொள்ள அமெரிக்காவுடன் கைகோத்துச் செல்ல வேண்டும். பயங்கரவாத வேரறுப்பில் இயல்பான கூட்டாளியாக அமெரிக்காவே இருக்கும். எனவே இது குறித்து நம் அரசு சிந்திக்க வேண்டும்.

ஏற்கெனவே உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் முன்வைத்ததை இங்கே வலியுறுத்துகிறேன். பாகிஸ்தானை பயங்கரவாத ஊக்குவிப்பு நாடு என்று நாம் பகிரங்கமாக அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்.

மேலும், பாகிஸ்தானுக்கு நாம் வழங்கியுள்ள வர்த்தகத்துக்கு சாதகமான நாடு என்ற அந்தஸ்தை உடனடியாக நீக்க வேண்டும். தற்போது பாகிஸ்தானின் சிமிண்ட் இங்கே அதிகளவில் வருகின்றது. அது, நம் நாட்டு சிமிண்ட்டை விட விலை மலிவாக உள்ளது. எனவே மேலும் மேலும் சிமிண்டை இங்கே குவிக்கிறார்கள். அந்தப் பணத்தை எல்லாம் பாகிஸ்தான் பயங்கரவாதச் செயல்களுக்கே பயன்படுத்துகிறது.

பாகிஸ்தானுடனான தேவையற்ற தொடர்புகளை நாம் துண்டிக்க வேண்டும். சினிமா நட்சத்திரங்கள் இங்கே வருவதும் டான்ஸ் ஆடுவதும் பாடுவதும், கிரிக்கெட் விளையாடிக் கொண்டு பொழுது போக்குவதும் நிறுத்தப்பட வேண்டும். சினிமா தொடர்பும் கிரிக்கெட் விளையாட்டும் பாகிஸ்தானுடன் உறவு மேம்பட நமக்கு எந்த விதத்திலும் பலன்களைத் தராது என்பதால் இவற்றை முற்றிலும் நிறுத்திக் கொள்ள வேண்டும். …

  • இப்படி இரு வருடங்களுக்கு முன்னர் பேசினார் சுப்பிரமணியன் சுவாமி. தற்போது, இந்திய அரசு பாகிஸ்தான் தொடர்பிலான ஒரு மிகப் பெரும் தாக்குதலை சந்தித்ததைத் தொடர்ந்து, இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சுப்பிரமணியன் சுவாமி அன்று நாடாளுமன்றத்தில் பேசிய காணொளி..

 PM Enough is enufPak humiliating Mother Wife of EAM busy Giving Visa to Sick Pakis Now NaMo Govt must Declare Pakistan Terrorist State & Remove MFN given toimmediately & Pass Bill Presented By Sir Dr

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...