திருந்தி திரும்பிய ‘தாடி’ பாலாஜி! திருந்தி திரும்பப் போகும் ‘தாடி’ டிஆர்., மகன்!

ஒரு புறம் நடிகர் தாடி பாலாஜி, தாம் மனம் வருந்தித் திருந்தி தன் உறவுகளையும்
சந்தோஷத்தையும் தொலைத்துவிட்டதால் மீண்டும் தன் தாய் மதத்துக்கே திரும்புவதாகக் கூறிய செய்தி வெளியான நிலையில், மறு புறம் தாடி நடிகர் டி.ஆரின்
மகன் குறளரசன் காதலுக்காக வேற்று மதத்துக்கு மாறியதாகவும், அதன் சடங்கு
நிகழ்வு என ஒரு வீடியோவும் நேற்று வைரலானது.

ஏற்கெனவே சின்னத்திரை வெள்ளித்திரை நடிகராக இருந்து, பின்னர் நடிகர் கமல்
தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் ‘தாடி’ பாலாஜி. அவரது மனைவி நித்யா. அவரும், அவரது மனைவி நித்யாவும் மன வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், அவர்களை சேர்த்து வைப்பதற்கான சூழலை குடும்ப நண்பர்கள்
ஏற்படுத்த, அவர்களது வற்புறுத்தலால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில்
இருந்து நித்யா விரைவில் வெளியேறி விட்டாலும், தாடி பாலாஜி நிகழ்ச்சியின்
முடிவு வரை தாக்குப் பிடித்தார். எதிர்பார்த்தது போல், இந்த நிகழ்ச்சியின்போதே பிரிந்திருந்த தாடி பாலாஜியும்; நித்யாவும் கருத்து ஒற்றுமை ஏற்பட்டு இணைந்தனர்.

சில வருடங்களுக்கு முன் தாடி பாலாஜி ஏதோ காரணத்தால் வேற்று மதத்துக்கு
மாறியிருந்தார். ஆனால் மனைவியுடன் சேர்ந்துள்ள நிலையில், மீண்டும் அவர்
தனது தாய் மதமான இந்து மதத்திற்கேதிரும்பியுள்ளார்.

மீண்டும் தன் தாய் மதமான இந்து மதத்துக்கு திரும்பியது குறித்து, தாடி பாலாஜி
குறிப்பிட்ட போது, நம்முடைய கலாசாரம், வரலாறு ஆகியவற்றை இழந்து, அடிமை
போல் இருக்க வேண்டிய நிலை உருவானது. மதம் மாறிய பின், கொஞ்ச காலம் நிம்மதி இல்லாமல் இருந்தேன். அதனால், தாய் மதம் தான் சுகம்; பெரிது என முடிவெடுத்து, திரும்பி விட்டேன்; என்னால் குடும்பத்தினரின், நண்பர்களின் வீட்டு
வைபவங்களுக்கு நிகழ்ச்சிகளுக்கு நிம்மதியாக கலந்து கொள்ள இயலாத நிலை
இருந்தது. இப்போது உறவுகள் மதிக்கின்றன என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், பிப்.16 சனிக்கிழமை இயக்குனர் டி.ராஜேந்தரின் மகனும், நடிகர்
சிம்புவின் தம்பியுமான குறளரசன் சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவுக்கு
குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார்! தொடர்ந்து அவர் முஸ்லிமாக மதம்
மாறிவிட்டார் என்ற தகவல் பரவியது. அது தொடர்பான வீடியோவும் இணையத்தில்
வைரலானது.

இது குறித்து டி.ஆர் செய்தியாளர்களிடம் கூறிய போது, எங்கள் வீட்டில் என் மகன்
சிம்பு சிறந்த சிவபக்தன். அவன் ஹிந்துவாக இருக்கிறான். என் மகள் கிறிஸ்துவ
மதத்தைப் பின்பற்ற விரும்பினாள் அப்படியே அனுமதித்தோம். இப்போது என் மகன்
குறளரசன் முஸ்லிமாக விருப்பம்  தெரிவித்தான். அவனது விருப்பப்படி இருக்க
அனுமதித்துள்ளோம் என்று கூறினார். அதன்  மூலம் எங்கள் வீட்டில் மும்மதங்களும்
நிறைந்துள்ளன. எங்களுக்கு எம்மதமும்  சம்மதம் என்று கூறினார்.

ஆனால், குறளரசன் குறித்து செய்தியாளர்கள் விசாரித்த போது, குறளரசன் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அதற்காகவே அவர் மதம் மாறியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், குறளரசன் மதம் மாறியதை  சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக  விமர்சித்தனர். இதற்கு தனது பேஸ்புக்  பக்கத்தில் காட்டமாக பதிலளித்த
குறளரசன், அது எனது தனிப்பட்ட விருப்பம்.  இஸ்லாம் மதத்தின் கொள்கைகள் பிடித்திருந்தது. அதனால் ஈர்க்கப்பட்டே மதம்  மாறினேன் என்றார். ஆனால் அவரது விளக்கத்தை ஏற்காத ஒருவர், உங்கள் விருப்பம் என்றால் உங்களின் சகோதரர் கண்ணீர் விட்டது ஏன் என மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு, அது ஆனந்த கண்ணீர் நண்பா என குறளரசன் பதிலளித்துள்ளார்.

லவ் ஜிஹாத் பெண்ணை மட்டும் குறிவைப்பதல்ல என்ற கருத்தை குறளரசன் எடுத்துக் காட்டி விட்டதாகவும், ஏற்கெனவெ ஒரு சினிமாக் குடும்பமான இளையராஜாவின் இளைய மகன் யுவன் இதற்கு பலிகடா ஆகிவிட்டவன் தான் என்றும் கருத்துகள் பகிரப் பட்டன.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...