- Ads -
Home உரத்த சிந்தனை திமுக., தமிழகத்துக்கு செய்த மாபாதகங்கள்..! மறக்க முடியுமா?!

திமுக., தமிழகத்துக்கு செய்த மாபாதகங்கள்..! மறக்க முடியுமா?!

நம்ம மக்களுக்கு கொஞ்சம் மறதி அதிகம்தான்… திமுக ஆட்சியை விட்டு விரட்டப்பட்டு எட்டு வருஷம் ஆச்சு… அதனால அவங்க சாதனைகளை மறந்திருப்பாங்க…. கொடுத்த காசுக்கு மேல் கூவும் தமிழ் டி.வி சானல்கள்களால், என்னமோ திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும்கிற அளவுக்கு ஒரே பில்டப்பா இருக்கு… ஆனா நாம விடலாமா?

நடக்க இருப்பது நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல.. 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களும் கூட … ஒருவேளை 18 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெற்றால் திமுக ஆட்சிக்கு வரவும் வாய்ப்புண்டு.. எனவே , திமுகவின் சாதனைகளை ஞாபகப்படுத்திக்கிட்டே இருப்போம்…. இதோ பட்டியல்..!

2011 ஆம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி அகற்றப்பட்டு , அதிமுக ஆட்சிக்கு வந்தது… ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றவுடன், திமுகவினரின் நில அபகரிப்பு புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்… பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்யலாம் என்று அறிவித்தார்.. இரண்டே மாதங்களில், அதாவது ஜூலை மாதத்துக்குள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட, திமுக.,வினர் மீதான நில அபகரிப்பு புகார்கள் மட்டும் நான்காயிரத்தைத் தாண்டியது..!

கட்சியினர் அராஜகம் ஒரு பக்கம் இருக்கட்டும்… இவங்க தலைவரின் யோக்கியதை எப்படி?

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது நிலத்தை மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மிரட்டி வாங்கியதாக சேஷாத்ரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..

ஆரம்பத்தில் முடிந்தால் கைது செய்யுங்கள் என்று வீரம் காட்டிய ஸ்டாலின், ஒரே மாதத்தில் பணத்தை பைசல் செய்து வழக்கை வாபஸ் பெற வைத்து, சுமூகமாக வழக்கை தீர்த்துக் கொண்டார் .!

மாநில அமைச்சரும், ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளருமான என்.கே.கே.பி. ராஜா, தான் கேட்டும் தனக்கு நிலத்தை விற்க மறுத்த கோபத்தினால் சிவபாலன் என்பவரை தனது வீட்டு முன்னால் இருந்த போஸ்ட் கம்பத்தில் கட்டி வைத்து, விடிய விடிய சவுக்கால் தனது வப்பாட்டியுடன் சேர்ந்து அடித்துத் துவைத்தார்… தனக்கு விற்க மறுத்த தென்னந்தோப்பில் இருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை அடியோடு வெட்டிச் சாய்த்தார்…தமிழகமே பதறியது..!

ALSO READ:  மக்கள்தொகையாம்! தொகுதிக் குறைப்பாம்!! அட கழகமே... வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறதே!

12 முதல் 18 மணி நேர மின் வெட்டு.. .. அன்னிய நிறுவனங்களுக்குத் தடை இல்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை … அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் சர்வ நேரமும் பாராட்டு விழா மற்றும் திரைத் துறையினர் குத்தாட்ட விழாவில் முதல்வர் தவறாமல் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருந்தார்.. [பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நினைவிருக்கா?] மிகக் கடுமையான மின்வெட்டின் காரணமாக தமிழகம் முழுவதும் , குறிப்பாக கோவையில் மூடப்பட்ட சிறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை பல்லாயிரம்..!

ஏப்ரல் 25, 2010 அன்று இந்திய தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், போலீஸ் டி ஜி பி லத்திகா , மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, முதல்வர் கருணாநிதி ஆகியோர் இருந்த மேடைக்கு முன்பு வழக்கறிஞர்கள் திமுக ரவுடிகளால் தாக்கப்பட்டது அன்று இந்திய தலைப்புச் செய்தியானது! வழக்கறிஞர் ஒருவரை ரவுடி ஒருவன் முழு செங்கல்லால் ஓங்கி அடிக்க முனையும் புகைப்படம் வைரல் ஆனது .. அப்போது கருணாநிதியின் ஏவல் துறை தாக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் கைது செய்தது! அது போல பிப் 10 2009 அன்று சென்னை உயர் நீதிமன்ற எல்லைக்குள்ளே , வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் மேல் போலீசார் தாக்குதல் நடத்தி நீதிபதிக்கு மண்டையில் அடிப்பட்டு ரத்தம் கொட்டிய காட்சியைக் கண்டு தமிழகமே அதிர்ந்தது!

கிண்டியில் அண்ணா சாலையில் உள்ள செக்கர்ஸ் நட்சத்திர ஹோட்டலை அடித்து நொறுக்கினர் சக்சேனாவும் அவரது அடியாட்களும். சேலத்து இளவரசர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனான பாரப்பட்டி சுரேஷ்குமார் என்பவர் ஒரு நில விவகாரத்தில் தலையிட்டு தன் பேச்சைக் கேட்கவில்லையே என்கிற ஆவேசத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புசாமி என்பவரின் குடும்பத்தில் 7 பேரை வெட்டிச் சாய்த்ததாக தி.மு.க. ஆட்சியிலேயே சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அவரைக் கைது செய்தது.

13.10.2006-இல் சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பல்வேறு இடங்களில் நடந்த வாக்குப் பதிவு மையங்களில் திமுக-வினர் நடத்திய தாக்குதல்கள் காரணமாக 100க்கும் அதிகமான வார்டுகளில் மறு வாக்குப்பதிவு நடத்த உயர் நீதிமன்றம் உத்தர விட்டது! வரலாறு காணாத அராஜகம் என்று சொன்னது .. கருப்பு பேன்ட் வெள்ளை சட்டை இளைஞர் அணி ரவுடிகள் ஒவ்வொரு வாக்கு சீட்டாக கிழித்து உதயசூரியனுக்கு குத்தி சாவகாசமாக ஓட்டு போட்டதை டிவியில் பார்த்து பெருமைப் பட்டான் தமிழன்!

திருநெல்வேலியில் இரண்டு அமைச்சர்கள் முன்னிலையில் ஆழ்வார்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம், தர்மபுரி, சேலம், கோவை போன்ற இடங்களில் காவல் துறையினரின் துப்பாக்கிகள் களவு போன விவகாரங்கள், தா. கிருட்டிணன் கொலை வழக்கு தள்ளுபடி, தினகரன் ஆபீசில் மூவர் கொலை, சென்னை சட்டக் கல்லூரியில் போலீசார் கண்முன்னே சாதி சங்க மாணவர்கள் வெறியாட்டம்… இவை அனைத்தும் கடந்த திமுக அரசின் சட்டம் ஒழுங்கு லட்சணம்.

ALSO READ:  ஆச்சரியமளிக்கும் ஆதர்சம்!

நெல்லை துணை மேயர்… திமுகவைச் சேர்ந்தவர்.. கூஜா வெடிகுண்டு தொடர்பான சர்ச்சையில் சிக்கினார்! போலி மருந்து வழக்கில் கைதான மீனாட்சிசுந்தரம் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு வாங்கி கொடுத்த மசராட்டி கார் வெளிச்சத்துக்கு வந்தது.

சென்னை பனையூர் ஓய்வுபெற்ற கப்பல் கேப்டன் இளங்கோ, அவரது மனைவி ரமணி ஆகியோர் ஆகஸ்ட் 24-ம் 2009 தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு பல ஏக்கர் சொத்து இருந்தது .. பொதுமக்கள் மூலம் போலீஸாரிடம் பிடிபட்ட ராஜன் (எ) சண்முகசுந்தரம் போலீஸ் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.. இதில் திமுக அமைச்சரின் பெயர் அடிபட்டது ..!

அனைத்து அரசுத் துறைகளிலும் வஞ்சகமில்லாமல் புகுந்து விளையாடிய உடன் பிறப்புக்களின் லஞ்ச லாவண்யம்.. கட்சிக்காரர்களின் அடிதடி, மிரட்டல்,. கட்டப் பஞ்சாயத்து.. அமைச்சர்கள் மற்றும் கட்சிக்காரர்களின் சொத்துக் குவிப்புகள்.. அத்தனை துறைகளிலும் தனது குடும்பத்தினரின் ஆதிக்கம்.. திரும்பிய பக்கமெல்லாம் தனது வாரிசுகளின் அராஜகச் செயல்கள்..” என்று அப்பாவி மக்களின் கூக்குரல்கள்..
ஆனால் இதெல்லாம் கருணாநிதி காதுகளை எட்டவில்லை… பொட்டு சுரேஷ் , அட்டாக் பாண்டி போன்ற ஈன கொலைகார அக்யூஸ்ட்டுளிடம் போலிஸ் டிஐஜி போன்ற IPS அதிகாரிகள் கை கட்டி வேலை செய்த வரலாறை நாடு கண்டது .. திமுக ஆட்சியில் கிளை செயலாளர் கூட சுமோவில் பறந்து காவல் நிலையத்தில் புகுந்து அராஜகம் செய்வது சகஜம்..

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் ஓர் எழுச்சி; ஹிந்து மறுமலர்ச்சி!

மாலை ராஜா என்கிற திமுக எம்.எல்.ஏ நெல்லை பல்கலைக்கழக துணை வேந்தரை அனைவர் முன்பும் பளார் என்று அறைந்தார் . அவமானத்தில் துணை வேந்தர் ராஜினாமா செய்தார்

இத்தனையும் நடந்து கொண்டிருந்தபோது மாநில முதல்வரான கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார்? மாதத்தில் 20 நாட்கள், தான் பார்த்த வேலைக்காக, பாராட்டு விழாக்களை தானே ஏற்பாடு செய்து ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதையாக.. தன்னைப் பற்றிய பாராட்டுக் கவிதைகளை ஏகாந்தமாக ரசித்துக் கொண்டிருந்தார். சினிமாவில் தங்களை மிரட்டி சிலர், திமுக., நிகழ்ச்சிகளுக்கு, பாராட்டு விழாக்களுக்கு வர கட்டாயப் படுத்துவதாக ரவுடித் தனம் செய்கிறார்கள் என்று பகிரங்கமாக போட்டுடைத்தார் நடிகர் அஜீத் குமார்… அதுவும் கருணாநிதி முன்னிலையிலேயே!

ஊழல் செய்தார்கள்.. கொள்ளையடித்தார்கள்.. கொலை செய்தார்கள்.. அராஜகம் நடத்தினார்கள் . அதைவிட அதற்குப் பின்பு காவல்துறையில் புகார் கொடுக்க வந்தவர்களிடமிருந்து புகார்களைக்கூட வாங்க மாட்டோம் என்று காவல்துறையே மறுத்திருக்கிறது என்றால், திமுக ஆட்சி எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்ப்போம்…

கருத்து : சரவண குமார் Saravana Kumar

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version