
சுதந்திரபோராட்ட தியாகி L.சட்டநாதகரையாளர் (25-10-1909 – 29-5-1967)!
லெட்சுமணகரையாளர்-திருவேங்கடத்தம்மாள் அவர்களுக்கு 25-10-1909-ம் ஆண்டு மகனாக பிறந்தார் சட்டநாதகரையாளர்.
திருநெல்வேலி பகுதிகளில் வாழும் ‘யாதவர்கள் கரையாளர்’ என்று அழைக்கப் படுகிறார்கள்.
பிறவியிலேயே தேசபக்தியும் தெய்வபக்தியும் நிறைந்தவர்கள் யாதவர்கள். சுதந்திரபோராட்டம் நடந்த அக்காலத்தில் சட்டநாதகரையாளர் சிறுவனாக இருக்கும்போதே தேசபக்தி உள்ளவராய் திகழ்ந்தார்.
1937-ம் ஆண்டு தன்னுடைய 27-ம் வயதில் கோவில்பட்டி தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார் L.S.கரையாளர்.
1940-ம் ஆண்டு சங்கரன்கோயிலில் தனிநபர் ‘சத்தியாகிரகம்’ செய்து ஆங்கிலஅரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார் L.S.கரையாளர்.
1942-ம் ஆண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறுமாத சிறைத்தண்டனை பெற்றார். வேலூர் சிறைக்கு தொடர்வண்டியில் முதல்வகுப்பு பயணம் செல்ல மறுத்து மூன்றாம் வகுப்பில் பயணம் செய்தார் L.S.கரையாளர்.

பின்னர், திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டு மூதறிஞர் ராஜாஜி அவர்களுடன் திருச்சிசிறையில் இருந்தார் L.S.கரையாளர். அப்பொழுது “திருச்சி ஜெயில்” என்கிற ஆங்கிலநூலை எழுதி வெளியிட்டார் L.S.கரையாளர்.
திருச்சி ஜெயிலில் இருந்தபோது மூதறிஞர் ராஜாஜி, அவினாசி லிங்கம் செட்டியார், எம்.பக்தவத்சலம் போன்ற 241 தலைவர்களுடன் சிறையில் இருந்தார் L.S.கரையாளர். அப்பொழுது, L.S.கரையாளரின் அறிவாற்றலையும், ஆங்கிலப்புலமையையும் கண்டு அனைவரும் வியந்து பாராட்டியுள்ளனர்.
மக்களிடம் நன்மதிப்பை பெற்ற L.S.கரையாளர் 1942-ம் ஆண்டு மீண்டும் கோவில்பட்டி தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார்.
ஆங்கிலேயர் ஆட்சியிலேயே பாராளுமன்றச் செயலாளராகப் பணியாற்றி யுள்ளார். 1946-ம் ஆண்டு L.S.கரையாளர் அவர்களின் அறிவாற்றலை நன்கறிந்த கல்விஅமைச்சர் கோவைஅவினாசிலிங்கம் செட்டியார் அவர்களும் தன்னுடைய பாராளமன்ற செயலாளராக (துணை அமைச்சர்) பொறுப்பளித்தார்.
1950-ம் ஆண்டு காஞ்சிபுரம் யாதவ இளைஞர்கள் மாநாட்டில் L.S.கரையாளர் அவர்கள் தன் எண்ணத்தையும், இலட்சியத்தையும் வெளிப்படுத்திப் பேசியுள்ளார்.
1951-ம் ஆண்டு ஒன்றுபட்ட நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டார் L.S.கரையாளர்.
1953-ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைதலைவராக தேர்ந்தெடுக்கபட்டார் L.S. கரையாளர்.
1954-ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத்தலைவராக உயர்ந்தார் L.S.கரையாளர்.
L.S.கரையாளர் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த போதுதான், தமிழகத்தில் ஆவடியில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது.
அந்த மாநாட்டில்தான் இந்திய தேசிய காங்கிரசுக்கு புதிய கொள்கையை, இந்திய ஜனநாயக சோசலிச காங்கிரஸ் என்று பாரதப்பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் பெயர் மாற்றம் செய்து சோசலிச கொள்கைக்கு இந்தியாவை திருப்ப முயன்றார்.
இந்த மாநாட்டை சிறப்புற நடத்தி அன்றைய அனைத்து இந்தியத் தலைவர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றதோடு பிரதமர் நேருவின் தனி அன்பையும் பெற்றார் L.சட்டநாதகரையாளர்.
தமிழகத்தின் அடுத்த “முதல்வர் L.S. கரையாளர்தான்” என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சியை சேர்ந்த ஒருவரின் சூழ்ச்சியால் அந்த சந்தர்ப்பம் நழுவிப்போனது. இது யாதவர்களின் துர்பாக்கியம்.
1955-ம் ஆண்டு அமெரிக்க அரசாங்கமே L.S.கரையாளர் அவர்களை அமெரிக்காவிற்கு வரவழைத்து மூன்று மாதகாலம் சிறப்பு விருந்தினராக தங்கவைத்தது அமெரிக்காவின் 13 மாநில சட்டமன்றங்களிலும் இவரது சிறப்புப்பேருரையை ஆற்ற வைத்துள்ளது.
1967-ம் ஆண்டு ‘மே’ மாதம் 29-ம் தேதி இறைவனடி சேர்ந்தார் L.S.கரையாளர்.
‘யாதவர்’ என்ற காரணத்தால் அரசியல் கட்சிகளும்,தலைவர்களும் “சுதந்திரபோராட்ட தியாகி L.S.கரையாளர்” அவர்களுக்கு மரியாதை செய்ய மறந்துவிட்டனர். L.S.கரையாளர் அவர்களுக்கு அரசு சார்பில் விழாவும் கிடையாது.
L.S.கரையாளர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று பல்லாயிரம் யாதவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கட்சியை வெற்றி பெற செய்தனர்.ஆனால், காங்கிரஸ் கட்சியே இவருக்கு மரியாதை செய்யாமல் ஒதுக்கிவிட்டனர்.
L.S.கரையாளர் அவர்களின் சுதந்திரபோரட்டம் பற்றி பாடநூலில் இடம்பெற செய்ய காங்கிரஸ் கட்சி முயற்சிக்கவில்லை. மற்றவர்கள் பற்றி பாடப்புத்தகத்தில் உள்ளது.
இப்படி மறக்கப்பட்ட,ஒதுக்கப்பட்ட தியாகிகளுக்கு யாதவர்களின் சார்பில் மரியாதை செய்தால், அவர்களுக்கு சாதிசாயம் பூசுவது இவர்களின் வாடிக்கை.
L. சட்டநாத கரையாளர் போன்ற தியாகிகளை போற்றுவது நமது கடமை..
- மதுரை கா.ராஜேஷ் கண்ணா
அக்டோபர் 25: தியாகி L.S. கரையாளர் பிறந்த தினம்