29 C
Chennai
02/07/2020 12:04 PM

புதுச்சேரியில் முதல் முறையாக மருத்துவருக்கு தொற்று!

Must Read

இபி கொடுத்த இடி: ஏழை தொழிலாளியின் குட்டி வீட்டுக்கு வந்த மின் கட்டணம் ரூ.2.92 லட்சம்!

வீரப்பன் தமது குடும்பத்துடன் குடியிருப்பதோ இரண்டு சிறிய அளவிலான வீடுகளே.

விருதுநகரில் ஊரடங்கை பயன்படுத்தி பதுங்கி இருக்கும் நக்சலேட்? தீவிர தேடுதல் வேட்டை!

சுற்றி திரிவோரிடம் இவர்கள் தீவிர விசாரணையை நடத்தி வருவதோடு அவர்களின் சுய விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

காய்ச்சல் அறிகுறி இருந்தால் கொரோனா ஆய்வு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்!

சிறு அலட்சியம் உயிரைப் பறிக்கும் என்பதை உணர்ந்து கவனமாக செயல்படாவிட்டால் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த இயலாது.
dr 1

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவர் உட்பட மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை 61 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவற்றில் 37 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மேலும் தற்போது ஜிப்மர் மருத்துவர் உட்பட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 46 ஆகவும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 70 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை 24 பேர் குணமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுச்சேரியில் ஏற்கனவே 37 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மேலும் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் ஜிப்மர் மருத்துவர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வார்டில் பணிபுரிந்த அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது புதுச்சேரியில் இதுதான் முதல் முறையாகும். அதோடு சோலை நகரில் இரண்டு பேர், அன்னை தெரசா நகர், திலகர் நகர், கொம்பாக்கம், பெரிய கோட்டகுப்பம், வடமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் வீதம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒருவர் தவிர மற்றவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்கள். இவற்றில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 4 பேரும், 15 முதல் 25 வயது நிரம்பியவர்கள் 4 பேரும், 37 வயதுடையவர் ஒருவரும் அடங்குவர். தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 46 ஆக உள்ளது.

இவற்றில் 36 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியிலும், ஜிப்மரில் 9 பேரும், சேலத்தில் புதுச்சேரியை சேர்ந்த பெண்மணி ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு தளர்வுகள் செய்யப்பட்டாலும் கரோனா இன்னும் பல நாட்கள் இருக்கும் என்பதால் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தம் செய்வது போன்வற்றை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். மேலும் ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என மோகன்குமார் தெரிவித்தார்.

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad புதுச்சேரியில் முதல் முறையாக மருத்துவருக்கு தொற்று!

பின் தொடர்க

17,874FansLike
78FollowersFollow
70FollowersFollow
898FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

காய்ச்சல் அறிகுறி இருந்தால் கொரோனா ஆய்வு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்!

சிறு அலட்சியம் உயிரைப் பறிக்கும் என்பதை உணர்ந்து கவனமாக செயல்படாவிட்டால் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த இயலாது.

சமையல் புதிது.. :

சினிமா...

அரசு அலுவலகத்தில் விஜய்க்கு பிறந்த நாள் கொண்டாட்டம்! பேரூராட்சி செயல் அலுவலர் பணி இடைநீக்கம்!

பேரூராட்சி செயல் அலுவலர் தனது அலுவலகத்தில் தன் தலைமையில் நடிகரின் பிறந்தநாளை கொண்டாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்தை கெடுக்கும் உங்கள் நிகழ்ச்சி இல்லை என் வாழ்க்கை: லக்ஷ்மி ராமகிருஷ்ணனை சாடும் வனிதா!

அவர் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், இந்தப் பிரச்னையை அவர் கவனிக்கவில்லை என்பது வருத்தமானது. அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தையும் பெண்கள் புரிந்துகொள்ளாவிட்டால் எதுவும் மாறப்போவதில்லை என்றார்.

பாடகி ஜானகி நலமுடன் உள்ளார்; வதந்தி பரப்ப வேண்டாம்: மகன் வேண்டுகோள்!

பிரபல பாடகி ஜானகி நலமுடன் உள்ளார் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பாடகி ஜானகி மகன் முரளி கிருஷ்ணா கேட்டுக் கொண்டுள்ளார்.

More Articles Like This