Home அடடே... அப்படியா? நவம்பர் 1 : தமிழ்நாடு தினம்

நவம்பர் 1 : தமிழ்நாடு தினம்

tamilnadu-day
tamilnadu day

தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றாகும். இது, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகரமாக சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக, மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கருநாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன.

புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு மாநிலம் எல்லைகளைக் கொண்டுள்ளது. இலங்கை நாட்டுடன் கடல்வழி எல்லையைக் கொண்டுள்ளது. புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை வீச்செல்லை, ஆனை மலை வீச்செல்லை, பாலக்காடு கணவாய் ஆகியவையும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன. தமிழ்நாடு சின்னங்களில் பண் “தமிழ்த்தாய் வாழ்த்து” ஆகும்.

38 மாவட்டங்கள், 234 சட்டமன்றம்,
1ஓரவை ,39நாடாளுமன்றம்,
18 மாநிலங்களவை உள்ளன.

சின்னம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம்,
“தமிழ்த்தாய் வாழ்த்து”நீராரும் கடலுடுத்த
மாநில நடனம் பரதநாட்டியம்
மாநில பறவை மரகதப்புறா
மாநில மலர் காந்தள்
மாநில பழம் பலா, மாநில
மரம் ஆசியப்பனை மாநில வண்ணத்துப்பூச்சி
பூச்சி தமிழ் மறவன்
விளையாட்டு கபடி குளித்தலை தமிழ் கெத்து அரசு அடையாளங்கள் ஆகும்.
தமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும், தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனைத் ‘தமிழ்நாடு’ என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. அதற்காக, சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார்.பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.

தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் 10 ஆவதாகவும், மக்கள்தொகையில் ஆறாவதாகவும் விளங்குகிறது. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில் இரண்டாவதாகவும் உள்ளது. 2006 ஆம் ஆண்டில் மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் பத்தாமிடத்தில், (ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும் சேர்த்தால் பதினாறாவது இடத்தில்) இருந்தது. மேலும் இந்தியாவிலேயே அதிக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்கிறது.இந்தியாவின் 6% மக்கள் தொகையைக் கொண்டிருந்தும், மிகக் கூடுதலான வணிக நிறுவனங்கள் கொண்ட மாநிலமாகவும் (10.56%), மொத்த வேலை வாய்ப்புகள் கொண்ட மாநிலங்களுள் இரண்டாவதாகவும் (9.97%) விளங்குகிறது.

கி.மு. 500க்கும் முன்பிருந்தே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 20000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த தமிழ் மொழி கல்வெட்டுக்களும் இலக்கியமும் காணக் கிடைக்கின்றன.

தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், தமிழர் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; எட்டு உலக பாரம்பரியக் களங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

தமிழ்நாடு 1,30,058 ச.கி.மீ. (50,216 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது மற்றும் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாகும். மேற்கே கேரளா மாநிலத்துடனும், வடமேற்கில் கர்நாடகா மாநிலத்துடனும், வடக்கில் ஆந்திரப்பிரதேசத்துடனும் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இதன் கிழக்கு எல்லையாக வங்காள விரிகுடாவும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் எல்லையாக உள்ளன.

தீபகற்ப இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரி வரை தமிழகம் பரவியுள்ளது. ஒன்றிய பகுதி, புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது) தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் இலங்கைத் தீவு உள்ளது. வங்காள விரிகுடாவும், அரபிக்கடலும், இந்தியப் பெருங்கடலும் சங்கமிக்கின்ற குமரிமுனை தமிழ்நாட்டில் உள்ளது.

மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் மேற்கு மலைத்தொடர்களாலும், கிழக்குப் பகுதியில் வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைகளாலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலாலும் சூழப்பட்டுள்ளன. தமிழகத்தின் இயற்கையமைப்பு, பொதுவாக அகன்ற உயர் நிலப்பரப்பாகக் காணப்படுகிறது.

இதில் அதிகமாக அரிக்கப்படாத மலைத்தொடர்களின் எஞ்சிய பகுதிகளும், அகன்ற ஆழம் குறைவான பள்ளத்தாக்குகளும் மற்றும் ஆற்றுச் சமவெளிகளும் காணப்படுகின்றன.

நாட்டின் மூன்றாவது மிக நீளமான கடற்கரையை, தமிழகம் 906.9 கி.மீ. (563.5 மைல்) கொண்டுள்ளது.

நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போலன்றி, தமிழ்நாடு, அக்டோபர் – திசம்பர் மாதங்களில் “வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று” மூலமே மழை பெறுகிறது. இக்கால கட்டத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயற்சின்னங்களின் மூலம் பெய்யும் மழையை உழவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.

இம்மாநிலத்தின் முதன்மையான ஆறான காவிரி ஆறு, வடக்கே கருநாடக மாநிலத்தில் குடகு மலையில் உருவாகித் தமிழ்நாட்டில் பாய்கிறது. வைகை, தாமிரபரணி, தென்பெண்ணை ஆறு, பாலாறு ஆகியவை பிற முதன்மையான ஆறுகளாகும். மதராஸ் என்று 1996 வரை அழைக்கப்பட்டு வந்த சென்னையே, தமிழ்நாடு மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும், அதன் தலைநகரமுமாகும்.

13 கி.மீ. நீளமுடையதும், உலகின் 2வது நீளமான கடற்கரையுமான, மெரீனா கடற்கரை, சென்னையில் உள்ளது. விழுப்புரம், மதுரை, கரூர், நாமக்கல், ஈரோடு, திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திண்டுக்கல், கோயம்புத்தூர், ஓசூர், திருப்பூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி, நாகர்கோவில் ஆகியவை தமிழ்நாட்டின் மாநகரங்கள் ஆகும்.

அரசியல் மாநில நிர்வாகப் பிரிவுகள்
தமிழ்நாடு, நிர்வாக வசதிகளுக்காக, பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்கள் வருவாய்ப் பிரிவுகள் வட்டங்கள் குறுவட்டங்கள் வருவாய் கிராமங்கள் மாநகராட்சிகள் நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள்,கிராமப் பஞ்சாயத்துகள், மக்களவைத் தொகுதிகள்,சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

தமிழ் நாட்டில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே, பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலமலை மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன.

தற்போதுள்ள மாவட்டங்கள், பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு விதமாகப் பெயர் மாற்றம் பெற்று வந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில், மாவட்டங்களின் பெயர்களுடன், காலம் சென்ற தமிழக தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன. இந்த 38 மாவட்டங்களில் 288 வருவாய் வட்டங்கள் உள்ளன.

அரியலூர்,இராமநாதபுரம்,
ஈரோடு,கடலூர்,கரூர்,
கள்ளக்குறிச்சி,கன்னியாகுமரி,
காஞ்சிபுரம்,கிருட்டிணகிரி,
கோயம்புத்தூர்,சிவகங்கை,
சென்னை,சேலம்,தஞ்சாவூர்,
தருமபுரி,திண்டுக்கல் ,
திருச்சிராப்பள்ளி,
இராணிப்பேட்டை,திருப்பத்தூர்,
திருநெல்வேலி,திருப்பூர் ,
திருவண்ணாமலை,திருவள்ளூர்,
திருவாரூர்,தூத்துக்குடி,
தேனி,நாகப்பட்டினம்,நாமக்கல்,
நீலமலை,புதுக்கோட்டை, பெரம்பலூர்,
மதுரை,விருதுநகர்,விழுப்புரம்,
வேலூர்,தென்காசி,செங்கல்பட்டு,
மயிலாடுதுறை என மாவட்டங்கள் உள்ளன.

சென்னை,ஆவடி,கோயம்புத்தூர்,
மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர்,
ஈரோடு,திருநெல்வேலி,வேலூர்,
தூத்துக்குடி,தஞ்சாவூர்,
திண்டுக்கல்,திருவண்ணாமலை,
நாகர்கோவில்,ஒசூர் என தமிழகத்தில் பெரிய நகரங்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகளும், 121 நகராட்சி மன்றங்களும், 528 பேரூராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றியங்களும் மற்றும் 12,524 ஊராட்சி மன்றங்களும் உள்ளன.

தமிழ்நாடு நாள்

1956 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் இருந்து, மொழிவாரி அடிப்படையில் கருநாடகம், கேரளம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இந்த நாளை, சம்பந்தப்பட்ட மற்ற மாநிலங்கள், பல ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் இந்நாளை 63 ஆண்டுகள் கொண்டாடாமல் இருந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு முதல் தமிழகத்திலும், தமிழ்நாடு நாள் நவம்பர் முதல் தேதியில் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.தற்போது தமிழ்நாடு நாள் நவம்பர் ஒன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது

  • விஜயகுமார் (யோகா ஆசிரியர்)

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version