- Ads -
Home பொது தகவல்கள் இந்த ஆண்டு அதிக புயல்கள் உருவாகும்! சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கூடுதல் மழை!

இந்த ஆண்டு அதிக புயல்கள் உருவாகும்! சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கூடுதல் மழை!

இந்த ஆண்டு அதிக புயல்கள் உருவாகும்.. சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கூடுதல் மழை பெய்யும் .. என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு அதிக புயல்கள் உருவாகும்.. சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கூடுதல் மழை பெய்யும் .. என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கடந்த ஆண்டை விட அதிக புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் நடப்பு ஆண்டு சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை சராசரி அளவை விட அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழகம் கணித்துள்ளது. 

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கடலூர், காஞ்சிபுரம், தேனி, மதுரை, திருவள்ளூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருநெல்வேலி, வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 17 மாவட்டங்களில் சராசரியை விட கூடுதல் மழைப்பொழிவு இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அரியலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சேலம், பெரம்பலூர், தஞ்சாவூர், நீலகிரி, திருச்சி, திருவாரூர், தென்காசி, தூத்துக்குடி, திருப்பத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் சராசரி மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  சிவகாசியில் தயாராகியுள்ள 2025ம் ஆண்டு தினசரி காலண்டர்!

தமிழகத்தில் 04.10.2022 காலை 0830 மணி முதல் 05.10.2022 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டி மீட்டரில்)
சின்கோனா (கோவை), ஏற்காடு (சேலம்) தலா 3;
மன்னார்குடி (திருவாரூர்), தேவாலா, பார்வூட், தேவாலா, ஹரிசன் எஸ்டேட், செருமுள்ளி (நீலகிரி), மடத்துக்குளம் (திருப்பூர்) தலா 2;
நடுவட்டம், கூடலூர் பஜார், மேல் கூடலூர், பந்தலூர் (நீலகிரி), பெரியநாயக்கன்பாளையம் (கோவை), தாளவாடி, பவானிசாகர் (ஈரோடு), இராசிபுரம் (நாமக்கல்), கல்லணை (தஞ்சாவூர்), தாத்தையங்காபேட்டை (திருச்சி), பெரியார் (தேனி), சங்கரன்கோவில் (தென்காசி), தூத்துக்குடி (தூத்துக்குடி) தலா 1.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version