
இ ந்திய முப்படை வீரர்களின் அரும்பணிகளையும் தியாகத்தையும் போற்றும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படைவீரர் கொடி
நாளாக இந்திய அரசாங்கமும் மாநில அரசாங்கங்களும் கடைபிடிக்கின்றன.
இக்கொடிநாள் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி முதல் இந்தியா முழுமையும்
கொண்டாடப்படுகிறது. இந்நாளில் திரட்டப்படும் நன்கொடை படைவீரர்களின்
குடும்பத்தினர் நல்வாழ்வுக்கெனப் பயன்படுத்தப்படுகிறது.
நமது நாட்டின் தேசியக்கொடி வரலாறு மிக நீண்ட வரலாறு. வெள்ளை ஆதிக்கத்தை
எதிர்த்துப் போராடி அத்தனை சமஸ்தானங்களும் ஒரு குடையின் கீழ் வந்ததன் பிறகு
நமக்கு இப்போது இருக்கும் மூவர்ணக் கொடி, தேசிய கொடியாக 1947 ஆம் ஆண்டு
ஆகஸ்ட் 15 லிருந்து நாம் பின்பற்றி வருகிறோம்.
படைவீரர்கள் கொடிநாள் நிதிக்கு பொதுமக்கள் உதவ முன் வர வேண்டுமென பாதுகாப்பு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின்
கீழ் செயல்படும் முன்னாள் படைவீரர் நலத்துறை, உயிரிழந்த படைவீரர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காகவும், மாற்றுத்திறன் கொண்ட படை வீரர்களின் குழந்தைகளின் கல்வி உள்ளிட்டவற்றுக்கும் தொடர்ந்து உதவிசெய்து வருகிறது.
கொடிநாள் நன்கொடைக்கான தொகையை, புதுதில்லி ஆர். கே. புரத்திலுள்ள பஞ்சாப் தேசிய வங்கியின் சேமிப்புக் கணக்கு எண்ணான 3083000100179875 (IFSC-PUN B0308300)-க்கு பொதுமக்கள் அனுப்பலாம். மேலும் www. ksb.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் நிதி உதவி அளிக்கலாம்.
தாயின் மணிக்கொடி பாரீர்! – அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் – அதன்
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும் – செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!
***
நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்
மதுரந்தே மொழி மாதர்களெல்லாம்
வாணி பூசைக்குரியன பேசீர்
எதுவும் நல்கியங் கெவ்வகையானும்
இப்பெருந்தொழில் நாட்டுவம் வாரீர்
– மகாகவி பாரதியார்.