நெல் பயிரில் ஆனைக்கொம்பன் பூச்சி தாக்குதலா ? கட்டுப்படுத்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆலோசனை வழங்கிய நிலையில் திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் இரா.விமலா தெரிவித்துள்ளாவேளாண்மைச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் கவனத்திற்கு,
உங்கள் நெல் பயிரில் ஆனைக்கொம்பன் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதா? என்று பயிரினை நன்கு கண்காணிக்க வேண்டும்.
அறிகுறிகள்
புழுக்கள் வளரும் தூர்களை தாக்குகிறது
புழுக்கள் தூர்களை துளைத்து உட்சென்று வளரும் பகுதியை உண்கிறது
தாக்கப்பட்ட தூர்களில் நெற்கதிர் வராது, மேலும் வளர்ச்சிக்குன்றி காணப்படும்
தாக்கப்பட்டத் தூர்கள் வெங்காய இலை போல் அல்லது வெள்ளி தண்டு போல் காட்சியளிக்கும்
கட்டுப்படுத்த பூச்சி உண்ணக்கூடிய மாற்றுவகைப் பயிர்களை அகற்ற வேண்டும்
தழைச்சத்து உரங்களை பரிந்துரை செய்யப்பட்ட அளவு மட்டும் பயன்படுத்தவேண்டும்
புற ஊதா விளக்குப் பொறி வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்
எக்டருக்கு பிப்ரோனில் 5% இ.சி 1000-1500 மி.லி அல்லது தயாமீதாக்சம் 25% டபுள்யுஜி 100 கி தெளிக்க வேண்டும்
மருந்துக் கரைசலைத் தெளிக்கும் போது பயிரில் நன்கு படிவதற்காக வேளாண்மைக்கான திரவ சோப்புகளில் ஒன்றினை (சாண்டோவிட், பைட்டோவெட், ஸ்டிக்கால், இன்ட்ரான் – வணிகப் பெயர்கள்) ஒரு லிட்டர் மருந்துக் கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் இரா.விமலா தெரிவித்துள்ளார்ர்.