- Advertisements -
Home பொது தகவல்கள் இன்று முத்த தினம்- நீண்ட ஆயுள் வேண்டுமா? தினமும் முத்தமிடுங்கள்..

இன்று முத்த தினம்- நீண்ட ஆயுள் வேண்டுமா? தினமும் முத்தமிடுங்கள்..

- Advertisements -

காதலர் தினத்திற்கு முந்தைய தினம் பிப்ரவரி 13-ல் கொண்டாடப்படும் முத்த தினம் ஒரு தனிச்சிறப்பினை கொண்டுள்ளது.

முத்தம் அன்பின் வெளிப்பாடு என்று மட்டும் சொல்லிவிட முடியாது. முத்தங்களும் வெறுமனே அன்பை மட்டும் அடிப்படையாக கொண்டதாக இருக்காது. அன்புக்குரியவர்களிடம் இருந்து கிடைக்கும் ஒரே ஒரு முத்தத்தில் காதல், ஆசை, காமம், மகிழ்ச்சி, குதூகலம், பரிஷம், நேசம்.. ஏன் கண்ணீரின் வெளிப்பாடாகவும் கூட இருக்கலாம். ஒரே ஒரு முத்தத்தில் இவ்வளவு கலந்திருக்கிறது. 

முத்தம் கொடுப்பதற்கு உடலில் பல இடங்கள் இருந்தாலும் நெற்றியில் முத்தமிடுவது மரியாதையைக் குறிக்கிறது, கன்னங்களில் முத்தமிடுவது பாசத்தைக் குறிக்கிறது. கைகளில் முத்தமிடுதல் மரியாதை கலந்த அன்பை வெளிப்படுத்தும் என முத்தமிடுவதில் சில வகைகள் இருக்கின்றன.

- Advertisements -

அன்போ, ஆபாசமோ முத்தம் என்பது நம் வாழ்க்கையோடு இணைந்த ஒன்றாக மாறிவிட்டது. அன்பை வெளிப்படுத்தும் உணர்வாக, காதலை பரிமாறும் பரிசுத்தமாக, காமத்தை வெளிப்படுத்தும் ஆயுதமாகவும் முத்தம் உணரப்படுகிறது.

வெளிநாடுகளில் திருமண நிகழ்வுகளில் தம்பதியர் உதட்டில் முத்தமிட்டுக் கொள்வார்கள். இது இருவரும் வேறுவேறு அல்ல; நான் உன்னுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன் என்ற விருப்பத்தை வெளிப்படுத்துவது ஆகும்.

இவை எல்லாம் தவிர முத்தம் கொடுப்பதால் உடல்நலத்துக்கு மேலும் பல நன்மைகள் இருக்கிறாம். உடலில் மகிழ்ச்சி அளிக்கும் ஹார்மோன்களை அதிகரிக்கிறது. மன அழுத்தத்தை குறைக்கவும் பதற்றத்தை குறைக்கவும் முத்தங்கள் உதவுகிறதாம். ஒரு மனிதன் தனது வாழ்நாளில் முத்தத்துக்காக செலவிடுவது 306 மணி நேரம் என்று முத்தம் குறித்த ஆராய்சி முடிவுகள் கூறுகிறது. ஒரு முத்தத்தில் குறைந்தது 12 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

தினமும் மனைவியை முத்தமிடுபவர்கள் நீண்டகாலம் வாழ்ந்ததாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதேபோல 1980-களில் ஒரு ஆய்வில் வேலைக்கு செல்வதற்கு முன்பு மனைவியை முத்தமிடும் ஆண்கள் குறைவான விபத்தில் சிக்குகிறார்கள் என்றும், அதிக வருமானத்துடன் இருந்ததாகவும் கூறுகிறது. முத்தமிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது என்றும், முத்தத்தின் போது உருவாக்கும் கூடுதல் உமிழ்நீர் பல ஆபத்தான பாக்டீரியாக்களை அழித்து இதய துடிப்பை அதிகரிப்பதுடன் ரத்த அழுத்தத்தையும் குறைப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. முத்தம் ரத்தத்தில் உள்ள கார்டிசோல் என்ற மனஅழுத்த கார்மோனின் அளவை குறைக்க உதவுகிறது என்றும் நன்மைகளை பட்டியலிடுகிறது.

உதட்டில் முத்தம், கைகளில் முத்தம், நெற்றியில் முத்தம், மூக்கில் முத்தம், கண்களை திறந்து முத்தம், கண்களை மூடிக்கொடுப்பது, கன்னத்தில் முத்தம், கண்களில் முத்தம், கழுத்தில் முத்தம் என முத்தத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. கைகளில் முத்தம் கொடுத்தால் அவர் உங்களை மிகவும் மதிக்கிறார் என்று அர்த்தமாம்.

நெற்றியில் முத்தம் கொடுத்தால் அதற்கு வாழ்நாள் முழுவதும் உன் அன்பு எனக்கு வேண்டும் என்று அர்த்தம். மூக்கின் மேலே முத்தம் கொடுத்தால் நீ மிகவும் அழகாய் இருக்கிறாய். உன்னை விட அழகு வேறு யாரும் இல்லை என்று அர்த்தம் என்கிறார்கள். கண்களை திறந்து முத்தம் கொடுக்கும் போது, உங்களது துணை ரசிக்கிறார்கள் என்று அர்த்தம். கன்னத்தில் முத்தம் கொடுத்தால் உங்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன் என்றும், கண்களின் மேல் முத்தம் கொடுத்தால் நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்றும், கழுத்தில் முத்தம் கொடுத்தால் நீ எனக்கு வேண்டும் என்றும் அர்த்தமாம். இதுதவிர பிரஞ்சு முத்தம் என்பது தீவிரமான மற்றும் உணர்ச்சி மிக்க முத்தத்தில் ஒரு வடிவம். இது ஒருவரையொருவர் ஆழமாக காதலிக்கும் நபர்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இன்று முத்த தினம் மனதுக்கு இனியவை முத்தமிடுங்கள் வாழ்வில் எப்போதும் சந்தோஷமாக இருக்க.

- Advertisements -

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − eleven =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.