சினிமாவில் வில்லனாக நடித்தபோது, இது வில்லன் கதாபாத்திரம்தான் என்று ரசிகர்களுக்கு தெரிவதால், அவர்கள் நடிகனை பெரிதாக திட்டுவதோ கொலைவெறியில் அனுகுவதோ இல்லை. ஆனால், ரியாலிடி ஷோ என்ற பெயரில், எழுதிக் கொடுக்கும் ஸ்க்ரிப்ட் படி நடித்தாலும், இது வில்லன் கதாபாத்திரம் என்று தெரியாத வகையில் வில்லத்தனத்தில் ஈடுபடும் போது, பொதுமக்களாகிய பார்வையாளர்கள் ஏதோ தங்கள் வீட்டில் நிகழும் சம்பவத்தைப் போல் பார்த்து வெறுப்பு கொள்கின்றார்கள்.
இதனை வெளிப்படுத்தியிருக்கிறது விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் வரும் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் கதையும் கற்பனையே என்று டிஸ்க்ளெய்மர் போடாமல் நடத்தப் படுவதால், இதனை உண்மை என்று நம்பி விடுகிறார்கள் பார்வையாளர்கள். இப்படி இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களின் வில்லத்தனத்துக்கு இரையாகி இருக்கிறார் மஹத் என்ற அப்பாவி நடிகர்!
பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ரெட் கார்டு மூலம் மஹத் வெளியேற்றப்பட்டார். மஹத் வெளியேறியதற்கு முழுக் காரணம் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவே என்று பிக்பாஸ் போட்டியாளர்கள மட்டுமின்றி பொதுமக்களூம் கருதுகின்றனர். இவர்கள்து பேச்சைக் கேட்டு நடந்ததாலேயே மஹத் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டதுடன், அவரது காதலி பிராச்சியின் வெறுப்பையும் சம்பாதித்தார் என்கிறார்கள்.
இந்நிலையில் இது குறித்து பிக்பாஸ் 1 போட்டியாளரும் நடிகையுமான ஆர்த்தி டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
யாஷிகா, ஐஸ்வர்யா முதலைக் கண்ணீருக்கு விருது கொடுக்க வேண்டும். அடுத்த வாரம் டபுள் எலிமினேஷன் பண்ண சொல்றோம் ஜோடியா வெளியே போய்டுங்க. இருவரும் சேர்ந்து ஒரு ஹீரோவின் வாழ்க்கையை அழிச்சிட்டீங்க. இனி மஹத் பெண்களிடம் கவனமாக பழகுவார். பிராச்சி அவரை மன்னித்து ஏற்றுக் கொள்வார் என நம்புகிறேன் என ஆர்த்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நடிப்பைக் கூட ஏதோ நிஜமான வாழ்க்கைச் சம்பவம் போல் எண்ணி இதையும் விவாதித்துக் கொண்டிருக்கும் வேலையற்ற வீணர்கள் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் திட்டித் தீர்ப்பதையும் காண முடிகிறது!